சனி, 21 டிசம்பர், 2013

அக்கரைச் சீமை அழகினிலே - 1

எங்க கம்பெனில இருந்து ஒரு மாசம் மிலான், இத்தாலி அனுப்பி இருந்தாங்க (சொந்த காசுல நாங்க தமிழ் நாட்டு மண்ணை விட்டு தாண்ட மாட்டோம், தமிழ் மேலையும், தமிழ் நாட்டு மேலையும் அவ்வளவு பற்று).

மிலான்யில் இரண்டு விமான நிலையம் உள்ளது,

மல்பீன்சா (Malpensa) மிக பெரிய சர்வதேச விமான நிலையம்.
லின்யெட் (Linate) சிறு விமான நிலையம், ஐரோப்பா சேவைகளுக்காக மட்டும்.

ஏப்ரல் 15ந் தேதி புது டெல்லி விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் கிளம்பினேன். விமான பயணமும், விமான பணிப்பெண்களும் பற்றிய கதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இரவு 9 மணிக்கு மல்பீன்சா விமான நிலையத்தில இறங்கினேன், இறங்கி பார்த்தா கண்ணை கட்டி காற்றில் விட்டது போல் இருந்தது. நாம கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பார்த்தே வாய பொளந்தவங்க தானே, சரி சமாளிடா கைப்புள்ளனு சொல்லிகிட்ட லக்கேஜ் தேடி போனேன்.

மல்பீன்சா விமான நிலையம், மிலான் நகரிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது. டாக்ஸி பிடிச்சி போய்கோ ராசான்னு கம்பெனியில சொல்லியிருந்தாங்க. ஏர்போர்ட் விட்டு வெளியே வந்த உடனே, நம்ம ஊர் மாதிரியே டாக்ஸி வேணுமான்னு ஒருத்தர் கேட்டார். எவ்வளவு ஆகும்னு கேட்டேன், மீட்டர் பார்த்து  குடுன்னு சொன்னார், சரின்னு சொல்லிட்டு உக்காந்துட்டேன். கார் பஞ்சா பறக்குது. 120-130 கி.மீ. வேகத்துக்கு குறைஞ்சி போகவே இல்லை. நம்ம அதிகபட்ச வேகமே, பைக்ல 80 தான்.

அல்லு கழண்டுருச்சி, பயத்த வெளிகாட்டிக்காம டிரைவர் கூட சிரிச்சி பேசிகிட்டே வந்தேன் (உபயம்- குருதி புனல் கமல், வீரம்ங்கிறது பயத்த வெளிகாட்டிக்காம இருக்கிறது தானே). கார் டிரைவர், தசாவதாரம் படத்துல வர்ற கிரிஸ்ட் பிளட்சர் (அமெரிக்க வில்லன் கமல்) மாதிரி இருந்தாப்ல.

ஒரு முக்கால் மணி நேரம் கழிச்சி, சான்  டொனட்டோல (san Donato) சாலைல இறக்க விட்டு, அதோ தெரியுது பார், அது தான் உன்னோட ஹோட்டல் சொல்லிட்டு போயிட்டாரு, பில்டிங் தெரியுது, ஹோட்டல் போர்டு தெரியுது, ஆனா வாசல் மட்டும் எந்த பக்கம்னு தெரியல. வாசல தேடி கண்டுபிடிக்க நான் பட்டபாடு, அந்த சொக்கனுக்கே வெளிச்சம். லைட்டா திருவிளையாடல் தருமி நியாபகம் வந்தது. 



அந்த ஹோட்டல், இணையத்தில் சுட்டது, நான் முன்னாடி ஒரு ரோடு தெரியுதுல்ல, அந்த ரோடு, ஒரு மெயின் ரோட்டில போய் சேரும். சுமார் 100 மீட்டர் தூரத்துல இருந்தேன். வாசல் கண்டுபிடிக்க முடியுதா பாருங்க..

கிழே உள்ள புகைபடத்தில் பாருங்க, வாசல் தெரியும்.....




ஒரு வழியா, கண்டுபிடிச்சி உள்ளே போனேன், வாசல் பக்கத்துல, நம்ம கலர்ல ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான், எவனோ இந்தியன்னு நினைச்சி, அவன பார்த்து சிரிச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது ஸ்ரீலங்காகாரன்னு, அவன், "எப்படி இருக்கிற, இந்த பக்கம் வந்து ரெம்ப நாளசேன்னு" கேட்டான். 

இப்போ தான் முதல் தடவி வாரேன்னு சொல்லிட்டு வரவேற்பறைக்குள்ள போனேன். அங்க ஒரு ஆப்ரிக்கன் அக்காகிட்ட, இந்த ஹோட்டல்ல ஒரு நாளைக்கு ரூம் புக் பண்ணி இருக்கு, ரூம் குடுங்கன்னு சொன்னேன். அவங்க ரூம் அலாட் பண்ணிட்டு ஸ்ரீலங்காகாரன் கேட்ட அதே கேள்விய கேட்டாங்க.

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன், நம்மள மாதிரி எவனோ ஒருத்தன் இங்க இருக்கான் போல இருக்கு, அவன் பண்ணின சேட்டைக்கு, அவனுக்கும் சேர்த்து நம்ம அடி வாங்கணும் போல இருக்கு, கடவுளே, என்னை இதே உடம்போட, இதே உசுரோட ஊருக்கு கொண்டு போய் சேர்த்திருப்பானு வேண்டிகிட்டேன்.

மூணாவது மாடியில ரூம் குடுத்திருந்தாங்க, லிப்ட் மூணாவது மாடி வந்ததும் கதவு  திறக்கவில்லை. இது என்னடா தமிழுக்கு வந்த சோதனைன்னு பார்த்த, லிப்ட்ல ரெண்டு பக்கமும் கதவு இருக்கு, மூணாவது மாடியில, அது பின்னாடி திறக்கும். நமக்கு அது தெரியல. அப்புறம் ரூம்ல ஐக்கியம் ஆகியாச்சு. நல்லா தூக்கத்த போட்டுட்டு, காலையில எந்திரிச்சு, லக்கேஜ் எடுத்துக்கிட்டு, ரூம் காலி பண்ணிட்டு, அவங்க லாக்கர்லே லக்கேஜ் வச்சிட்டு, ஓசி ப்ரேக்பாஸ்ட் சாப்பிட போயிட்டேன். அன்னைக்கு சாயங்காலத்தில இருந்து எனக்கு வேற ஹோட்டல்ல ஒரு மாசம் வாசம்.

இந்தியன் ஆபீஸ்ல அட்ரஸ் குடுத்தப்போ நோட் பண்ணாம வந்துட்டேன், கம்பெனில குடுத்த லட்ட்ர்ல தான் அட்ரஸ் இருக்கேன்னு. இன்ப அதிர்ச்சியா சாப்பிட்டு வெளியே வந்தப்போ நண்பர் சுரேஷ் காத்திருந்தார். அவர்கூடவே ஆபீஸ் போயிரலாம்னு, மொக்கை போட்டுக்கிட்டு நடந்து போனனேன்.

போற வழியில, அவரோட மொபைல வாங்கி எங்க அப்பாக்கு போன் பண்ணினேன். எங்க அப்பா பையன்  போன் பண்ணி 36 மணி நேரத்துக்கு மேல ஆச்சேனு அங்க ஊர்ல ஒரே புலம்பல், என் தங்கச்சிகிட்ட சொல்லி ஆபீஸ் போன் பண்ணி  இருக்காரு. அவங்களுக்கும் எதுவும் தெரியல, எங்க அப்பா ரெம்ப பயந்துட்டாரு. நான் போன் பண்ணின உடனே, அவர் குரல் உடைஞ்சி அழுகிற நிலைமைக்கு போயிட்டாரு. அவர சமாதானம் பண்ணிட்டு ஆபீஸ் போனா ஒரு பெரிய ஷாக்....

கையும் ஓடல..... காலும் ஓடல.....

                                                                                                    - தொடரும்
                                                                                   மகேஷ் பிரபு விஜயராஜ்

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக