வெள்ளி, 28 மார்ச், 2014

நான் ரசித்த அயல் புகை படங்கள்

நண்பர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்லில் பார்த்து ரசித்த படங்கள் உங்கள் பார்வைக்கு..............


Alesund, Norway



Boracay Island, Philippines



Plitvice Lakes National Park, Croatia



Ubud Hanging GardensBaliIndonesia



Songjiang Hotel, China



Bora Bora, French Polynesia



Meteora, Greece

புதன், 19 மார்ச், 2014

ரயிலில் கழிவறை கதை

நம்ம எல்லாருக்கும் ரயிலில் பயணம் பண்ணிய அனுபவம் நெறையவே இருக்கும், அதிலையும் கழிவறைக்கு பக்கத்தில உள்ள கேபின்ல பயணம் பண்ணினவங்களோட நிலைமை ரெம்ப மோசம்.

வானம் படத்தில சிம்பு சொல்ற மாதிரி "என்ன வாழ்கைடா இது ?" அப்படின்னு பொலம்பிக்கிட்டே தான் பயணம் பண்ணிருப்பாங்க.

ரயில் விட ஆரம்பிச்சப்போ அதுல கழிவறை கிடையாது.....

எப்போ எப்படி ரயிலில் கழிவறை அமைச்சாங்க,  அதுக்கு எதாவது காரணம் இருக்குமுல்ல, அது என்னானு பார்போமா.............


ஆரியக்காடு நடுநிலை பள்ளி

இடம் : ஆரியக்காடு நடுநிலை பள்ளி.

நேரம் : காலை 10 மணி





பியுன் கந்தசாமி, " ராமசாமி சார் உங்களை ஹெட்மாஸ்டர் அவர் ரூமுக்கு வரச்சொன்னார்"

என்னடா விஷயம்.

எனக்கு தெரியாது சார், ஹெட்மாஸ்டர் ஒரு மாதிரி இருக்கார், நீங்களே போய் கேட்டுக்கோங்க.

சரிப்பா நான் போய் பார்த்துகிறேன்,

போகும் வழியில், மனசுக்குள் "முருகன் பையன்கிட்ட, வீட்ல இருந்து 2 முட்டை எடுத்துட்டு வரசொன்னமோ, அதை அவங்க அப்பன்கிட்ட போட்டு குடுத்து கம்ப்ளைன்ட் பண்ண வந்திருப்பானோ ?

இருக்காதே, அவனத்தான் பரிட்சைல பாஸ் ஆக்கிட்டனே"

 வேற என்ன மேட்டரா இருக்கும்...    ஒரு வித பீதியோடு ஹெட்மாஸ்டர் ரூமுக்கு சென்றார் ராமசாமி....

அங்கே ஒரு கண்ணில் கோபத்தையும், மறு கண்ணில் பயத்தையும் மிக்ஸ் பண்ணி ஹெட்மாஸ்டர் அங்கிட்டும் இங்கிட்டுமாக ருமுக்குள் நடந்து கொண்டு இருந்தார்.

சார், ஹெட்மாஸ்டர் சார் வணக்கம் சார். நீங்க கூப்பிடீங்கன்னு பியுன்  சொன்னான்.

உங்களை ஏன் கூப்பிட்டேன்னு தெரியுமா ராமசாமி,

தெரியாது சார்..( மனுஷன் என்ன குண்ட தூக்கி போடா போறாரோ)

நம்ம ஸ்கூலுக்கு நாளைக்கு இன்ஸ்பெக்டர் வர்றார்.

அவர் ஏன் சார், இங்கே வர்றார். பசங்க எதாவது தப்பு பண்ணிட்டாங்களா, அவங்கள அரஸ்ட் பண்ண போறார சார் ?

இல்லை உங்களைதான் அரஸ்ட் பண்ண போறார்.

சார்......................

பின்னே என்னையா, கல்வி அதிகாரி வர்றார்னு சொல்றேன், நீ போலீஸ் இன்ஸ்பெக்டர் நினைச்சி பயப்படுறியே...

சார், இது அதை விட பயங்கரமான நியூஸ் சார்.. நம்ம பசங்களை பத்திதான் உங்களுக்கே நல்ல தெரியுமே.....

ஆமா ராமசாமி, அத நினைச்சிதான் பயந்துகிட்டு இருக்கேன்... நீதான்யா எப்படியாவது சமாளிக்கணும்..

நான் எப்படி சார் சமாளிப்பேன்.....

அதெல்லாம் எனக்கு தெரியாது... திஸ் இஸ் மை ஆடர்.

இருக்கிற பிரச்சனைல நீங்க ஏன் சார் வடிவேல் மாதிரி பேசி வெறி ஏத்துறீங்க,
நாளைக்கு தான் எனக்கு கடைசி நாள்னு நினைக்கிறன். இன்ஸ்பெக்டர் என்ன கேக்க போறாரோ, எனக்கு இப்போவே உதறுது சார்.....

கவலைபடாம போய்யா, நான் இருக்கேன் நீ கவலை படதே....

நீங்க இருப்பீங்க சார்,  நான் இருப்பனா ???

                           

மறுநாள் காலை 11 மணி,

நம்ம ராமசாமி சார், 7-ஆம் பசங்களுக்கு பாடம் எடுக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்தார், அப்பொழுது இன்ஸ்பெக்டரும், ஹெட் மாஸ்டரும் உள்ளே வந்தார்கள்.

பசங்க எல்லாரும், "வணக்கம் சார்"

இன்ஸ்பெக்டர், "வணக்கம் தம்பிகளா உக்காருங்க, என்ன பாடம் படிக்கிறீங்க, தமிழா, நான் ஒரு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லுங்க பார்போம்".

ஜனகரோட வில்லை உடைச்சது யாரு ????
ஏ தம்பி நீ சொல்லுப்பா ?

அந்த தம்பிதான் நம்ம முட்டை முருகன்,

சார்.........

தைரியமா சொல்லுப்பா......

முருகன், "சார் சத்தியமா நான் உடைக்கல சார் என கூறிவிட்டு குமுறி குமுறி அழுகின்றான்".

ராமசாமி சார் முருகனிடம் முட்டை வாங்கிய நன்றியில் இன்ஸ்பெக்டரிடம், "சார் முருகன் ரெம்ப நல்லவன் சார், அந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டான், சுரேஷ்தான் தான் இந்த மாதிரி திருகுதனம் பண்ணிட்டு திரிவான், நீங்க வேணும்னா அவன கேட்டு பாருங்க சார்".

இன்ஸ்பெக்டர் கோபமாக, ஹெட்மாஸ்டர் சார் என்ன நடக்குது இங்கே,
ஜனகரோட வில்லை உடைச்சது யாருன்னு அந்த பையன்கிட்டே கேக்கிறேன், அவன் சத்தியமா நான் உடைக்கல சார்னு சொல்றான், அதுக்கு இந்த வாத்தியார், அவன் உடைச்சிருக்க மாட்டான்னு சொல்லி வேற பையன் இத பண்ணி இருப்பான்னு சொல்றான்".

 ஹெட்மாஸ்டர் இன்ஸ்பெக்டரிடம், சார் எதோ தெரியாம நடந்து போச்சு, பசங்கள அடிச்சா திருப்பி வரபோகுதா சார், நீங்க அந்த வில்லு எவ்வளவு ஆச்சுனு சொல்லுங்க, பசங்க எல்லார்கிட்டயும் காசு கலக்ட் பண்ணி தந்திறோம் சார், இந்த விஷயத்தை பெருசு படுத்தாம விட்டுரங்க சார்..

இன்ஸ்பெக்டர் அப்படியே மயங்கி விழுகின்றார்..............
  


 











புதன், 12 மார்ச், 2014

கோச்சடையான் Vs 'மண்ணு' மோகன் சிங் - 2

வாங்க சிங்ஜி, எப்படி இருக்கீங்க.




எங்க நல்லா இருக்க விடுறாங்க, இந்த மீடியா டெய்லி எப்படி என்னை  வச்சி செய்றாங்கன்னு நீங்க பார்த்துகிட்டு  இருக்கீங்க, அத விடுங்க நான் வந்தது வேற  விசயத்துக்காக...



என்ன விசயமா இருந்தாலும், முதல்ல சாபிட்டுட்டு அப்புறமா பேசலாம்ஜி....


சிங்ஜி மனசுக்குள்ள, "நல்லாருக்கே, இந்த விசயத்த நோட் பண்ணிக்கிறேன்". 

வயிறு புல்லா சாப்பிட்டுட்டேன் ரஜினி, நான் நேரா விசயத்துக்கு வாரேன்.


அதெல்லாம் முடியாது கொஞ்சம் காப்பியாவது குடிங்கஜி.


சொன்னா கேக்கமாட்டீங்க குடுங்க ரஜினி.


காபி சாப்பிட்ட பிறகு, 

ரஜினி, ஒரு பிரதமரா நான் இந்தியா புல்லா பேமசா ஆனத விட நீங்க ஒரு நடிகரா பேமஸ் ஆகிருக்கீங்களே அது எப்படி ?


ஜி, நான் சினிமால மட்டும் தான் நடிக்கிறேன், நிஜவாழ்க்கையில இல்லை.

அப்புறம் எனக்கு சரின்னு படுகிற விசயத்த பண்றேன்,  யார் என்ன சொன்னாலும் அத மாத்திக்க மாட்டேன். 

எனக்கு முன்னாடி தப்பு நடந்த தட்டி கேப்பேன், வாய மூடிக்கிட்டு சிரிச்சிகிட்டு போஸ் குடுக்க மாட்டேன்.  


பேமஸ் என்கிறதெல்லாம் சும்மா ஒரு மாயை. எனக்கான வாழ்க்கைய நான் வாழ்றேன், மத்ததெல்லாம் அந்த ஆண்டவன் கட்டளை.


ஒத்துகிறேன் ரஜினி, உங்களை இந்தியால எல்லாருக்கும் தெரியும், ஆனா டெல்லில இருக்கிற உங்க பயலுக நீங்க உலகம் புல்லா பேமஸ்னு சொல்றாங்களே, அது உண்மையா ? எனக்கு நிருபிச்சி காட்ட முடியுமா....


ஜி, நான் பெரிய ஆள் சொல்லி தற்பெருமை அடிக்கிறது எனக்கு பிடிக்காது, ஆனா என் ரசிகர்கள் சொன்னது பொய் ஆகிடகூடாது. வாங்க போகலாம்....


எங்க ரஜினி ?


 ரஷ்யா........


ரஜினியும், சிங்யும் ரஷ்யா அதிபர் புதின் மாளிகைக்கு சென்றார்கள்.


ரிசப்சனில் ரஜினியும் சிங்யும் காத்து இருந்த போது, 

அங்கு வந்த புதின், என்ன ரஜினி நேரா என்னோட ரூமுக்கு வரலாம்ல, ஏன் இங்க உக்காந்து  இருக்குறீங்க, நான் இப்போ பார்லிமென்ட் கிளம்பிக்கிட்டு இருந்தேன், அதனால என்ன கொஞ்சம் லேட்டா போறேன், உங்க கூட உக்காந்து காபி சாப்பிடறது என்ன சாதாரண விஷயமா.


புதின், நான் உங்கள்ட்ட நெறைய தடவை சொல்லி இருக்கேன்,,




மக்கள் பணி தான் முக்கியம் நீங்க கிளம்புங்க, நாம இன்னொரு நாள் காபி சாப்பிடலாம் என்றார் ரஜினி.


நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ரஜினி, நான் வாரேன், நம்ம பிறகு சந்திக்கலாம்.


ரஜினியும், சிங்யும் புதினிடம் விடை பெற்று அமெரிக்க சென்றார்கள்.


வெள்ளை மாளிகை வாசலில் உள்ள செக்குரிட்டி, வாங்க ரஜினி நீங்க நேரா ஒபாமா ரூமுக்கு போங்க, நீங்க எப்போ வந்தாலும் எங்க ப்ரெசிடெண்ட் அவரோட ரூமுக்கு அனுப்ப சொல்லி இருக்கார் என்றார்.


ஒபாமா ரூமுக்கு இருவரும் போனார்கள்.


அங்கு கண்ட காட்சியை பார்த்து சிங் டரியல் ஆகி விட்டார்.



அப்படியே திகைச்சு போய் வெளியே வந்தார் சிங்.


ரஜினி உங்களுக்கு போப் தெரியுமா என்று நடுக்கத்துடன் கேட்டார்.


நல்ல தெரியும் வாங்க நம்ம வாடிகன் சிட்டி போவோம். நான் கிழே நின்னு கை காட்றேன், போப் திருப்பி கை காட்டுவார் பாருங்க.


போப் எல்லாருக்கும் தான் கை கட்டுவார் ரஜினி அத வச்சு எப்படி உங்களை தெரியும்னு சொல்ல முடியும்.


சரி சிங்ஜி, போப் மாளிகைல எனக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு வழி இருக்கு, அது வழியா உள்ள போய் நான் போப்கூட நின்னு பால்கனில கை காட்றேன்.


ரஜினி போப் மாளிகைக்குள் நுழைந்து, பால்கனியில் நின்று போப் அருகில் நின்று கை காட்டினார்.


சிங் கிழே நின்று பார்த்துகொண்டு இருந்தார், அப்பொழுது சிங் அருகில் வந்த ஒரு ஐரோப்பாகாரர், அவரிடம் எதோ கேட்டார், அதை கேட்ட சிங் அப்படியே மயங்கி விட்டார்.  



 
சிங் மயங்கி விழும் அளவிற்கு, அப்படி என்ன அந்த ஐரோப்பாகாரர் கேட்டு இருப்பார்.




வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டு நம்ம தலைவரோட ஒருத்தர் பால்கனில நின்னுகிட்டு இருக்கிறாரே,  யார் அவர் என்று கேட்டாராம்.





குறிப்பு - நகைச்சுவைக்காவே மட்டும் எழுத பட்டது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை, யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சிருங்க சாமியோ......      
   

செவ்வாய், 11 மார்ச், 2014

கோச்சடையான் Vs 'மண்ணு' மோகன் சிங்



ரஜினி இவ்வளவு பேமசா இருக்கிறத பார்த்த நம்ம 'மண்ணு' மோகன் சிங் ஓவர் பீலிங்க்ஸ் ஆகிட்டாரு. 


                                      


நம்ம 10 வருசமா பிரதமரா இருந்தும் கிடைக்காத பப்ளிசிட்டி, எப்படி ஒரு நடிகரா இருந்து இவருக்கு கிடைச்சது, நேர்ல போய் விசாரிப்போம்னு யார்கிட்டையும் சொல்லாம கிளம்பிட்டாரு. தமிழ் நாடு எக்ஸ்பிரஸ் பிடிச்சி சென்னைக்கு வந்துட்டார்.


                                 
                                                   

நம்ம பிரதமருக்கு பயங்கரமா பசிக்க ஆரம்பிச்சிருச்சி, பைஜாமா பாக்கெட்ல கை விட்டு பார்த்தா 10 வருசத்துக்கு முன்னாடி வச்ச ஒரு பழைய 20 ரூபாய் நோட்டு இருந்தது.


பிரதமரானதுக்கு அப்புறமாதான் இவர் கை காசு போட்டு எதுவுமே வாங்கி இருக்க மாட்டாரே, அதான் பைஜாமா பாக்கெட்ல காசு இல்லை போல.  


அம்மா உணவகத்தை போர்டு பார்த்தவுடனே, இங்கயே சாப்பிட்டுருவோம், நம்ம நிதி நிலைமைக்கு அதான் கரெக்டா வரும்னு உள்ள என்ட்ரி போட்டுட்டார். 




ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி, விலை இல்லா சட்னி-சாம்பார் (இலவசம்னு சொன்னா அம்மாக்கு பிடிக்காதில்ல),  2 ரூபாய்க்கு சப்பாத்தி, 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு சாம்பார் சாதம், 10 ரூபாய் தண்ணி பாட்டில்னு  லிஸ்ட் பார்த்து அப்படியே ஷாக் ஆகிட்டார்.




நம்ம 29 ரூபாய்க்கு மேல சம்பாதிக்கிறவங்க ஏழைங்க இல்லைன்னு முடிவு எடுத்தது சரிதான், ஒரு நாளைக்கு 20 ரூபாயே ஜாஸ்தி, டெல்லி போன உடனே அலுவாலியாகிட்ட இத பத்தி பேசணும்னு நினைச்சிட்டு, இட்லிய ஒரு பிடி பிடிச்சார்.     


                                                   


போயஸ் கார்டனுக்கு பொடி நடையா போய், அங்க கூட்டமா இருந்த அம்மா வீட்டுக்குள்ள புகுந்துட்டார்.


அங்க வாசல் இருந்த ஒரு ரத்தத்தின் ரத்தம், நம்மாள பார்த்து, வடக்குல இருந்து கட்சில சேர வந்திருக்கார் போல இருக்கு, பார்த்த நெறைய படிச்சவர் மாதிரி தெரியுது.


அம்மா இவருக்கு MP சீட் குடுத்திருமோ பயந்து, அம்மா பாக்கிறதுகுள்ள கிளப்பி விட்ரனும்னு முடிவு பண்ணி, கிட்ட போய் பேச்சு குடுத்தார்.   


இன்னாபா, இன்னா வேணும், வாட் மேட்டரு, தமிழ்ல டெல்லு,
அம்மா கைல எதுனா மனு குடுக்க வந்தியா, நம்ம கைல குடுத்துட்டு கிளம்பிகினே இரு. அம்மாவை எல்லாம் பாக்க முடியாது.


மே, ரஜினிசே தேக்லியா ஆத்தாகு,


ஏய் பெருசு, தலைவர் ஆத்தாவைய தப்ப சொல்ற............


நஹி பய்யா, மே ரஜினி தேக்கா, தேக்கா.......


தலைவர கண்டுகிட வந்தியா, இந்த ஊடு இல்லை, அந்தாண்ட போய் பாரு.


 
நம்ம சிங் தலைவர் வீட்டுக்கு உள்ள போனார், ரஜினிய பார்த்த ஆனந்ததில, அதிர்ச்சில தமிழ் பேச ஆரம்பிச்சிட்டார்..........


அவங்க 2 பேருக்குள்ள என்ன நடந்தது,  நாளைக்கு மிச்ச கூத்த பாப்போம்................................




  


     

திங்கள், 10 மார்ச், 2014

சரோஜா அக்கா - பெருமாள் மாமா

நம்ம ஏன் கதை எழுதகூடாதுனு விபரீதமா யோசிச்சதோட விளைவு தான் இது, வழக்கம் போல என்னை மன்னிச்சு விட்ருங்க....


என்னங்க காலைல 5 மணிக்கு அலாரம் வச்சிட்டு படுங்க, நான் சீக்கிரமா கிளம்பி லேடீஸ் கிளப் போகணும் என்றாள் சரோஜா அக்கா.


                                             

அதான் உன் பையன் நாலு மணிக்கே, "அம்மே பாலு, பால் வேணும்னு கத்தி, பக்கத்து வீட்டுகாரங்களையும் சேர்த்து எழுப்புரானே, இதுல நான் வேற தனியா அலாரம் வைக்கனுமா என்றார் பெருமாள்சாமி மாமா.



என்னமோ உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி உன் பையன்னு சொல்றீங்க, அவன் என்ன என்னை மாதிரி துறுதுறுன்னு புத்திசாலியாவா இருக்கான். ஒரு கூறு கிடையாது. இவன வயசு பசங்கெல்லாம் எப்படி சமத்தா இருக்காங்க தெரியுமா.

அவனுக்கு என்னடி குறைச்சல், அவங்கப்பன், அதான் நான், IT கம்பனில வேலை பாக்கிறேன், ராஜா வீட்டு கன்னுகுட்டிடி அவன்.




ஆமா பொல்லாத IT கம்பெனி, பேரு பெத்த பேரு, தாக நீலு லேதுங்கிற கதையா எங்க அப்பா நீங்க வச்சிருந்த ஓட்ட லேப்டாப்ப பார்த்து ஏமாந்து பொண்ணு குடுத்துட்டாரு. உங்க கம்பெனில இப்போ காலேஜ் முடிச்ச பசங்க எல்லாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை பாக்க சொல்றாங்க, உங்களை  மட்டும் தான் சரவணா ஸ்டோர்ஸ்க்கும், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ்க்கும் அனுப்புறாங்க. இதுல 50 ரூபாய் அலவன்ஸ்னு வெக்கமே இல்லாம வந்து சொல்றீங்க.

நான் என்ன அங்க துணி மடிக்கவா போனேன், பில் சாப்ட்வேர் செக் பண்ண போனேன்டி. நான் இந்தியன் பிராஜக்ட்ஸ் மட்டும்தான் டீல் பண்றேன்.

ஆமா கிளிச்சீங்க, நீங்க டீல் பண்ற லட்சணம் தான் எனக்கு தெரியாதா என்ன.

கால் லிட்டர் நெய்யும், 4 லிட்டர் கடலை எண்ணையும் வாங்கிட்டு வரசொன்னா, அப்படியே மாத்தி வாங்கிட்டு வந்துடீங்க, கடைகாரன்கிட்ட போய் திருப்பி மாத்திட்டு வரவும் துப்பில்லை, அப்புறம் அந்த மாசம் புல்லா நெய் வச்சிதான் தாளிச்சேன். வெளியே சொன்னா வெக்ககேடு....

நான் தெரியாமதான் கேக்குறேன், உங்களுக்கெல்லாம் எவன்ங்க கம்ப்யூட்டர் என்ஜினியர் பட்டம் குடுத்தது. நீங்களே என்ஜினியர் ஆனதாலா எங்க வீட்டு மாடுகூட படிக்க வச்சா ஆகிடும் போல இருக்கு.

அப்புறம் நீ ஆகா வேண்டியது தானேடி.

நான் மட்டும் பத்தாவது படிக்கும் போது காய்ச்சல் வந்து பெயில் ஆகாம இருந்திருதேன்னா, உங்கள விட பெரிய கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆகி அழகா பெரிய பெரிய வீடு, கடையெல்லாம் கட்டிருப்பேன் தெரியுமா.

அது கம்ப்யூட்டர் என்ஜினியர் இல்லைடி, சிவில் என்ஜினியர். கம்ப்யூட்டர் படிச்சிட்டு வீடெல்லாம் கட்டமுடியாது.

இது தான் உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே, எத கேட்டாலும் முடியாது, தெரியாதுனு சொல்ல வேண்டியது, இதனால தான் நீங்க முன்னேற மாட்டேங்கிறீங்க.

பெருமாள்சாமி மெதுவாக "இந்த பொம்பளைங்கதான் நியூஸ் வாசிக்க சரியானா ஆள்னு முதன்முதலாய் முடிவு பண்ணினவன், கண்டிப்பா என்னை மாதிரி ஒரு அப்பாவி புருசனாதான் இருக்கும், எவ்வளவு லென்தா போகுது".

என்ன அங்க முனுமுனுக்குறீங்க,

அலாரத்துல்ல 5 எங்க இருக்குன்னு தேடிகிட்டு இருக்கேன்மா, நீ சீக்கிரமா தூங்கு, இங்கயே பேசி பேசி டையர்ட் ஆகிட்டா, நாளைக்கு லேடீஸ் கிளப் போய் சண்டை போட தெம்பு இருக்காது.

என்னது,

இல்லைமா பேச தெம்பு இருக்காதுன்னு சொல்ல வந்தேன்.

அது, அலாரம் மட்டும் சரியா 5 மணிக்கு அடிக்கலை, நான் பத்ரகாளியா மாறிடுவேன்.

நீ ஏற்கனவே அப்படிதானே இருக்கிற, புதுசா வேற மாறனுமா....

என்ன சொன்னிங்க,

ஒண்ணுமில்லைமா, வாய்குள்ள கொசு போயிருச்சு, நீ தூங்கு, அலாரம் அடிக்கலைனா, நான் முழிச்சிருந்து காலிங் பெல்லாவது அடிச்சி உன்னை எழுப்பி விட்டுர்றேன்.....     

பெருமாள்சாமி மனசுக்குள் "எனக்கு இது தேவைதான், அலாரம்  சொன்னவுடனே வச்சிட்டு படுத்திருந்தேன்னா, இந்நேரம் கனவுல த்ரிஷா கூட டூயட் பாடிக்கிட்டு இருந்திருக்கலாம்".

வழக்கம்போல அலாரமும் சொதப்பி, மாமாவும் தூங்கிட்டார்., 




அக்கா வெறி ஆகி மாமா மேல சாமி ஆடிட்டாங்க....




யார் இந்த பெருமாள்சாமி மாமா, யார் இந்த சரோஜா அக்கா, அவங்கள பத்தி கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சிகுவோமா.........   


             

செவ்வாய், 4 மார்ச், 2014

அக்கரைச் சீமை அழகினிலே - 4

 அப்படியே கொஞ்சம் மலை மேல பயணம் பண்ணி போனோம், எங்கே  பார்த்தாலும் ஊரே திருவிழாவிற்கு வெள்ளை அடிச்ச மாதிரி இருந்தது.   

உயரம் போக போக மலை முழுவதும் பனி  இருந்தது.





3500 மீ. உயரத்திலையும் எலெக்ட்ரிக் ட்ரைன் ஓடுது. நம்ம ஊர்ல, திருச்சிய தாண்டினா டபுள் ட்ராக் கூட இல்லை.
  




மலை அப்படியே சூர்ய வெளிச்சம் பட்டு சும்மா M.G.R. மாதிரி தக தகன்னு மின்னுச்சி 




புள்ளைங்க ஸ்கேடிங் எல்லாம் போகுது, நம்ம ???





மனுஷன் மூஞ்சி மாதிரியே ஒரு மலை 






ரோட்ல இருந்து ஒரு 900 மீ வரைக்கும் ஒரு ரோப் கார், அதுக்கு அப்புறம் 600 மீ உயரத்துக்கு இன்னொரு ரோப் கார், ரெண்டுக்கும் சேர்த்து 50 ஈரோ டிக்கெட் சார்ஜ் பண்ணினாங்க.



ரோடு எல்லாம் எவ்வளவு சுத்தமா இருக்குது, இங்கனகுள்ளேயே, முகம் பார்த்து தலை சீவி, பவுடர் அடிச்சி, திருநீறு பூசிக்கலாம் போல இருக்கு. 


 தண்ணி பயங்கரசுத்தம், 2, 3 அடி ஆழத்தில உள்ள மண்ணு, கல்லு கூட நல்ல தெரியுது 






கூட வந்த நைஜீரியா அக்கா, போட்டோ எடுன்னு சொல்லி பிரவீன் கிட்ட இம்சைய குடுத்திருச்சி, என்னை அந்த அக்கா கூட வந்த நைஜீரியா ஆள் (நம்ம ராசி அப்படி) இம்சை பண்ணிட்டான். அவங்ககிட்ட இருந்து ஓடி ஒளியதான் நிறைய பாடு பட இருந்தது. சாயங்காலம் 5 மணிக்கு கிளம்பி நல்ல பிள்ளையாட்டம் மிலன் வந்துட்டோம்.  

                                                                                                               - தொடரும் 
                                                                                               மகேஷ் பிரபு விஜயராஜ் 

திங்கள், 3 மார்ச், 2014

படிக்க ரசிக்க சிரிக்க வெறிக்க மட்டுமே, வெறி ஆவதற்கில்லை

புது துணிய இப்படி வேஸ்ட் பண்ணிட்டாரே 



காலம் பொன் போன்றது, நேரத்தை வீணாக்க கூடாது 



போன போகுது, இந்த ஒரு தடவை மட்டும் தான்



எப்பா !!!, யார்ரா இந்த பொண்ணு பேய் மாதிரி மேக்அப் போட்டுருக்கா 



இதுக்குத்தான் நீங்க கம்ப்யூட்டர் முன்னாடி பழியா கிடக்குறீங்களா, இந்தா வாரேன்  



எல்லாரும் என்னை மாதிரியேவா இருப்பாங்க செல்லம்