சனி, 21 டிசம்பர், 2013

அக்கரைச் சீமை அழகினிலே - 1

எங்க கம்பெனில இருந்து ஒரு மாசம் மிலான், இத்தாலி அனுப்பி இருந்தாங்க (சொந்த காசுல நாங்க தமிழ் நாட்டு மண்ணை விட்டு தாண்ட மாட்டோம், தமிழ் மேலையும், தமிழ் நாட்டு மேலையும் அவ்வளவு பற்று).

மிலான்யில் இரண்டு விமான நிலையம் உள்ளது,

மல்பீன்சா (Malpensa) மிக பெரிய சர்வதேச விமான நிலையம்.
லின்யெட் (Linate) சிறு விமான நிலையம், ஐரோப்பா சேவைகளுக்காக மட்டும்.

ஏப்ரல் 15ந் தேதி புது டெல்லி விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் கிளம்பினேன். விமான பயணமும், விமான பணிப்பெண்களும் பற்றிய கதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

இரவு 9 மணிக்கு மல்பீன்சா விமான நிலையத்தில இறங்கினேன், இறங்கி பார்த்தா கண்ணை கட்டி காற்றில் விட்டது போல் இருந்தது. நாம கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பார்த்தே வாய பொளந்தவங்க தானே, சரி சமாளிடா கைப்புள்ளனு சொல்லிகிட்ட லக்கேஜ் தேடி போனேன்.

மல்பீன்சா விமான நிலையம், மிலான் நகரிலிருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ளது. டாக்ஸி பிடிச்சி போய்கோ ராசான்னு கம்பெனியில சொல்லியிருந்தாங்க. ஏர்போர்ட் விட்டு வெளியே வந்த உடனே, நம்ம ஊர் மாதிரியே டாக்ஸி வேணுமான்னு ஒருத்தர் கேட்டார். எவ்வளவு ஆகும்னு கேட்டேன், மீட்டர் பார்த்து  குடுன்னு சொன்னார், சரின்னு சொல்லிட்டு உக்காந்துட்டேன். கார் பஞ்சா பறக்குது. 120-130 கி.மீ. வேகத்துக்கு குறைஞ்சி போகவே இல்லை. நம்ம அதிகபட்ச வேகமே, பைக்ல 80 தான்.

அல்லு கழண்டுருச்சி, பயத்த வெளிகாட்டிக்காம டிரைவர் கூட சிரிச்சி பேசிகிட்டே வந்தேன் (உபயம்- குருதி புனல் கமல், வீரம்ங்கிறது பயத்த வெளிகாட்டிக்காம இருக்கிறது தானே). கார் டிரைவர், தசாவதாரம் படத்துல வர்ற கிரிஸ்ட் பிளட்சர் (அமெரிக்க வில்லன் கமல்) மாதிரி இருந்தாப்ல.

ஒரு முக்கால் மணி நேரம் கழிச்சி, சான்  டொனட்டோல (san Donato) சாலைல இறக்க விட்டு, அதோ தெரியுது பார், அது தான் உன்னோட ஹோட்டல் சொல்லிட்டு போயிட்டாரு, பில்டிங் தெரியுது, ஹோட்டல் போர்டு தெரியுது, ஆனா வாசல் மட்டும் எந்த பக்கம்னு தெரியல. வாசல தேடி கண்டுபிடிக்க நான் பட்டபாடு, அந்த சொக்கனுக்கே வெளிச்சம். லைட்டா திருவிளையாடல் தருமி நியாபகம் வந்தது. 



அந்த ஹோட்டல், இணையத்தில் சுட்டது, நான் முன்னாடி ஒரு ரோடு தெரியுதுல்ல, அந்த ரோடு, ஒரு மெயின் ரோட்டில போய் சேரும். சுமார் 100 மீட்டர் தூரத்துல இருந்தேன். வாசல் கண்டுபிடிக்க முடியுதா பாருங்க..

கிழே உள்ள புகைபடத்தில் பாருங்க, வாசல் தெரியும்.....




ஒரு வழியா, கண்டுபிடிச்சி உள்ளே போனேன், வாசல் பக்கத்துல, நம்ம கலர்ல ஒருத்தன் நின்னுகிட்டு இருந்தான், எவனோ இந்தியன்னு நினைச்சி, அவன பார்த்து சிரிச்சேன், அப்புறம் தான் தெரிஞ்சது ஸ்ரீலங்காகாரன்னு, அவன், "எப்படி இருக்கிற, இந்த பக்கம் வந்து ரெம்ப நாளசேன்னு" கேட்டான். 

இப்போ தான் முதல் தடவி வாரேன்னு சொல்லிட்டு வரவேற்பறைக்குள்ள போனேன். அங்க ஒரு ஆப்ரிக்கன் அக்காகிட்ட, இந்த ஹோட்டல்ல ஒரு நாளைக்கு ரூம் புக் பண்ணி இருக்கு, ரூம் குடுங்கன்னு சொன்னேன். அவங்க ரூம் அலாட் பண்ணிட்டு ஸ்ரீலங்காகாரன் கேட்ட அதே கேள்விய கேட்டாங்க.

நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன், நம்மள மாதிரி எவனோ ஒருத்தன் இங்க இருக்கான் போல இருக்கு, அவன் பண்ணின சேட்டைக்கு, அவனுக்கும் சேர்த்து நம்ம அடி வாங்கணும் போல இருக்கு, கடவுளே, என்னை இதே உடம்போட, இதே உசுரோட ஊருக்கு கொண்டு போய் சேர்த்திருப்பானு வேண்டிகிட்டேன்.

மூணாவது மாடியில ரூம் குடுத்திருந்தாங்க, லிப்ட் மூணாவது மாடி வந்ததும் கதவு  திறக்கவில்லை. இது என்னடா தமிழுக்கு வந்த சோதனைன்னு பார்த்த, லிப்ட்ல ரெண்டு பக்கமும் கதவு இருக்கு, மூணாவது மாடியில, அது பின்னாடி திறக்கும். நமக்கு அது தெரியல. அப்புறம் ரூம்ல ஐக்கியம் ஆகியாச்சு. நல்லா தூக்கத்த போட்டுட்டு, காலையில எந்திரிச்சு, லக்கேஜ் எடுத்துக்கிட்டு, ரூம் காலி பண்ணிட்டு, அவங்க லாக்கர்லே லக்கேஜ் வச்சிட்டு, ஓசி ப்ரேக்பாஸ்ட் சாப்பிட போயிட்டேன். அன்னைக்கு சாயங்காலத்தில இருந்து எனக்கு வேற ஹோட்டல்ல ஒரு மாசம் வாசம்.

இந்தியன் ஆபீஸ்ல அட்ரஸ் குடுத்தப்போ நோட் பண்ணாம வந்துட்டேன், கம்பெனில குடுத்த லட்ட்ர்ல தான் அட்ரஸ் இருக்கேன்னு. இன்ப அதிர்ச்சியா சாப்பிட்டு வெளியே வந்தப்போ நண்பர் சுரேஷ் காத்திருந்தார். அவர்கூடவே ஆபீஸ் போயிரலாம்னு, மொக்கை போட்டுக்கிட்டு நடந்து போனனேன்.

போற வழியில, அவரோட மொபைல வாங்கி எங்க அப்பாக்கு போன் பண்ணினேன். எங்க அப்பா பையன்  போன் பண்ணி 36 மணி நேரத்துக்கு மேல ஆச்சேனு அங்க ஊர்ல ஒரே புலம்பல், என் தங்கச்சிகிட்ட சொல்லி ஆபீஸ் போன் பண்ணி  இருக்காரு. அவங்களுக்கும் எதுவும் தெரியல, எங்க அப்பா ரெம்ப பயந்துட்டாரு. நான் போன் பண்ணின உடனே, அவர் குரல் உடைஞ்சி அழுகிற நிலைமைக்கு போயிட்டாரு. அவர சமாதானம் பண்ணிட்டு ஆபீஸ் போனா ஒரு பெரிய ஷாக்....

கையும் ஓடல..... காலும் ஓடல.....

                                                                                                    - தொடரும்
                                                                                   மகேஷ் பிரபு விஜயராஜ்

    

புதன், 18 டிசம்பர், 2013

சிலு சிலுவென அடிக்குது

கடந்த வெள்ளிகிழமை டெல்லியில் இருந்து தூத்துக்குடி சென்று விட்டு, திங்கள் அன்றே டெல்லி திரும்ப திட்டமிட்டு Spicejet விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தேன். மத்தியானம் 3:10 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி 4:15 சென்னைக்கும், பின்பு 4:55 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி 7:40 மணிக்கு டெல்லி வந்து சேரும்.

நான் தூத்துக்குடியிலிருந்து, 10:30க்கு கிளம்பினேன், அருப்புக்கோட்டை அருகில் பேருந்து செல்லும் போது, ஒரு கால் வந்தது, டெல்லி லேன்ட்லைன் நம்பர்யிலிருந்து, யார்ரா இது ரோமிங்ல இருக்கும் போது கால்னு நினைச்சிகிட்டு அட்டெண்ட் பண்ணினேன்.

Spicejet கஸ்டமர் கால், உங்கள் விமானம் தாமதமாகி உள்ளது, 4:15 மணிக்கு கிளம்பும்னு சொன்னங்க, சரின்னு நம்பி 1:30 மணிக்கு ஏர்போர்ட்குள்ள போனேன். வாசல்ல இருந்த செக்யூரிட்டி, விமானம் தாமதம் ஆகிருச்சி, இப்போ உள்ள போகனுமா, உள்ள போனா வெளியே விட மாட்டோம்னு சொன்னங்க. பரவாயில்லைனு சொல்லி உள்ளே போனேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா, 16:15 மணியிலிருந்து 17:45 மணின்னு போட்டு இருந்தது. நான் ரெம்ப வெறி  ஆகிட்டேன். Spicejet ஆபீஸ்ல போய் கேட்டேன். அவங்க டெல்லில பயங்கர பணி, அங்க இருந்து விமானம் கிளம்பவே இல்லைன்னு சொன்னங்க.

என்ன நக்கல் பண்றீங்களா, மத்தியானம் 2 மணிக்கு என்ன பணி, புதுசா எதாவது சொல்லுங்கனு சொன்னேன். அவங்களால எதுவும் பதில் சொல்ல முடியல. எனக்கு போர் அடிக்குது, நான் வெளியே போகணும் வந்து செக்யூரிட்டிகிட்ட சொல்லி வெளியே அனுப்புங்கனு சொல்லி, 1 கி.மீ. நடந்து ஒரு டீக்கடையில் 2 மணி நேரம் அமர்ந்து விட்டு திரும்பவும் உள்ளே வந்தேன். கடைசில விமானம் 17:45 கிளம்பி 22:20 டெல்லி வந்தது. ரெம்ப கடுப்பில  வந்து சேர்ந்தேன். காலைல எந்திச்சி பார்த்தப்போ தான் அவங்க பணினு சொன்னது என்னனு தெரிஞ்சது.

17 மற்றும் 18ந் தேதி, காலை 9:30 மணிக்கு எடுத்த போட்டோ இவை...........   
    

  



















ஊருக்கு போன் பண்ணி, ஒரே பனி மூட்டமா இருக்குனு சொன்னா, இங்க பங்குனி வெயில் பல்ல காட்டி அடிச்சிகிட்டு இருக்கு, கொய்யாலே உனக்கு பனியனு பல்பு குடுத்துட்டாங்க.

                                                                      - மகேஷ் பிரபு விஜயராஜ் 

இது கூட தெரியாதா அப்பா...

மஹி, how are you, Pre.K.G. செல்லும் தனது மூன்று வயது மகனிடம் கேட்டார் நாதன்.

I am fine, என்றான் மஹி.

How old are you, இது நாதன்.

I am 3 years old, என்றான் மஹி.

மஹி செல்லம், அப்பகிட்ட அதே மாதிரி கேளுமா தங்கம்.

How are you அப்பா.

I m fine, என்றார் நாதன்.

How old are you அப்பா.

I am 33 years old.

அப்பா  தப்பு தப்பா சொல்றீங்க, I am 3 years oldனு சொல்லணும்.

எங்க மிஸ் இப்படிதான் சொல்லி குடுத்தாங்க,  இது கூட உங்களுக்கு தெரியாதா அப்பா...

ஹி..ஹி..ஹி..ஹி.. 

யாழ் இனிது, குழல் இனிது என்பர், மழலை சொல் கேளாதோர்....

செவ்வாய், 10 டிசம்பர், 2013

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கள டா

டெல்லி சீமாபுரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியின்  உறுப்பினர் தர்மேந்திரா சிங் கோலி மீது மானபங்கம் படுத்தியதாக, தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர் சிங் தின்ஹன் மனைவி புகார் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி உறுப்பினர்கள், காலை 11:30 மணி அளவில், சீமாபுரியில் வெற்றி கொண்டாட்டத்தின் பொழுது  பட்டாசுகள் வெடித்தனர், தின்ஹன் வீட்டுக்கு அருகில் வெடித்த போது, தின்ஹனின் ஆதரவாளர்களுக்கும் ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கும் மோதல் உருவாகியதை அடுத்து போலீஸ் வந்து கூட்டத்தை கலைத்தது.

கோலி மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வீடு புகுந்து மானபங்கம் படுத்தியதாகவும், குடித்து விட்டு மது பாட்டில்களை வால்மீகி கோவிலுக்குள் வீசியதாகவும் புகார் அளித்துள்ளார்கள். புகார் அளித்தது அன்று இரவு தான்.


                    தொப்பி வச்ச இந்த குழந்தை தான், தர்மேந்திரா சிங் கோலி

                                                               வீர் சிங் தின்ஹன்


காங்கிரஸார் தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் செய்த கீழ்தரமான செயல் இது. தின்ஹனின் வீடு முன்பு பட்டாசு வெடித்ததை ஜீரணிக்க முடியாமல், பலி வாங்க வேண்டும் என நினைத்து அசிங்கப்பட்டு விட்டார்கள்.  

கோலி இப்படி செய்திருக்க வாய்பில்லை. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜரிவால் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஷஹாதாரா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுரேந்திரா ஷர்மா அறிவிக்கபட்டார். அவர் மீது சில சொத்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்து, அவரை வாபஸ் வாங்க செய்து புது வேட்பாளர் பல்பீர் சிங் அறிவிக்க பட்டார். 

வேட்பாளர்கள் மீது  தவறு இருக்கும் பட்சத்தில், வேறு வேட்பாளர்கள் அறிவிக்க முடியாத நிலைமையில், அந்த வேட்பாளரை வாபஸ் வாங்க செய்து போட்டியிடாமல் இருப்போமே, தவிர தவறான வேட்பாளர்களை முன்மொழிய மாட்டோம் என்பதே ஆம் ஆத்மியின் நிலைமை.    

இப்பொழுதும் கூட, கோலி மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வைக்கப்படுவார், அவர் மீது தவறு இல்லாத பட்சத்தில் மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்கின்றனர் ஆம் ஆத்மியினர்.

காங்கிரஸ் கட்சியினரின் அசிங்கமான அரசியல் தந்திரம் இது. இவர்களுக்கு வேண்டியது பதவி சுகம், அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். மானபங்க வழக்கோடு சேர்த்து, கோவிலை பற்றி கூறி மதச்சாயம் பூச பார்கிறார்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்று கொள்ளாமல், சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இவர்கள் திருந்தவே மாட்டார்கள். இந்தியாவை உருப்பட விட மாட்டார்கள். பாரத மாதா இவர்களை மன்னிக்கவே மாட்டாள். 

பி.கு. - 1

கடந்த டிச 3, புது சீமாபுரியில், பொது கழிப்பிடம் உடைந்து விழுந்து, ஒரு எட்டு வயது முஸ்லிம் சிறுவன் உயிர் இழந்தான். மற்றுமொரு சிறுமிக்கு கால் முறிந்தது. அங்கு வந்த தின்ஹன், இது ஒரு விபத்து, இதற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது, விட்டால் சாலைகளில் நடக்கும் விபத்திற்கும் அரசாங்கத்தை குறை கூறுவீர்கள் போல் உள்ளது என்றார்.  

பி.கு. - 2

தின்ஹனின் மனைவி ராஜ் வாட்டி, டெல்லி கல்வித்துறையில் அரசு அதிகாரி, மற்றும் அவர்களது மகன்கள்  இருவர் டெல்லி அரசு அதிகாரிகள், ஒருவர் property dealer. இது உங்களின் மேலான கவனத்திற்கு யுவர் ஆனார்.
  
பி.கு. - 3

தர்மேந்திரா சிங் கோலி, மறைந்த சந்தோஷ் கோலியின் தம்பி ஆவார். சந்தோஷ் கோலி 2002 வருடம் முதல் அரவிந்த் கெஜரிவால் அவர்களுடன் சமுக நல பணியில் ஈடுபட்டூள்ளார். 

                                            

ஜூன் மாதம் சந்தோஷ் கோலி சீமாபுரியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

 ஜூன் 30ந் தேதி, சாலை விபத்தில் அடையாளம் தெரியாத காரால் கொல்லப்பட்டார். காவல் துறை அந்த வழக்கை ஹிட் & ரன் வழக்காக விசாரிக்கிறது. அதன் பின் அவரது தம்பி தர்மேந்திரா சிங் கோலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  

யார் மீது தவறு இருக்கும் என நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.....   

திங்கள், 9 டிசம்பர், 2013

டெல்லி திருவிழாவின் முடிவுகள்

 நாம் ஆவலோட எதிர்பார்த்த டெல்லி தேர்தல் முடிவுகள் வந்துருச்சி, 

பா.ஜ.க. - 32
ஆம் ஆத்மி - 28
காங்கிரஸ் - 8
மற்றவர்கள் - 2

15 வருஷம் ஆட்சில இருந்த ஒரு கட்சிய, ஆம் ஆத்மி (பொது ஜனம்) மண்ண கவ்வ வச்சு இருக்கு. தொடப்பத்தை வச்சி நல்லா வாரி வழிச்சி எடுத்துட்டாங்க (அவங்க கட்சி சின்னமும் அதுதான்). காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  ஒரு இன்னோவா போதும்னு சொல்ல வச்சுட்டாங்க (Innova comment, Chetan bahat tweet பண்ணியது). 
கட்சி ஆரம்பிச்ச ஒரு வருசத்திலே இது பெரிய சாதனை.

இதோட சிறப்பு அம்சமே, அதன் தலைவர் அரவிந்த் கெஜரிவால், டெல்லி முதல்வர் பதினைந்து வருடங்களாக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஷீலா தீக்ஷித் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக போட்டியிடுவேன் என கூறி, புது டெல்லியில் போட்டியிட்டு 25000 வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லி தேர்தல் முடிவு வரைபடத்தை பார்த்தல் ஒன்று புரியும், அதிகம் படித்த மக்கள் வாழும் / நகர பகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது, புறநகர் பகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது. 

ஆம் ஆத்மி இன்னுமும் தீயா வேலை செய்யணும் குமாரு......


காவி - பா.ஜ.க., ரோஸ் - ஆம் ஆத்மி, நீலம் - காங்கிரஸ் 

ஆட்சி அமைக்க 36 இடங்கள் வேணும், ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க போவதில்லைனு அறிவிச்சிட்டாங்க, நல்ல எதிர் கட்சியா செயல்படுவோம்னு அரவிந்த் கெஜரிவால் சொல்லி இருக்கார்.     

பா.ஜ.க. ஆட்சி அமைக்க, 4 இடங்கள் தேவை, 2 சுயேச்சைகள் இருக்காங்க, ஆம் ஆத்மி வெளிய இருந்து ஆதரவு தரலாம். நல்ல எதிர் கட்சியா செயல் படலாம், இல்லை என்றால், 2 1/2 வருடங்கள் பா.ஜ.க., 2 1/2 வருடங்கள் ஆம் ஆத்மி என ஆட்சி செய்யலாம். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.

நேற்று, மயூர் விஹார் பகுதியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றி கொண்டாட்டங்கள் இவை. பதினைந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக சரவெடி வெடித்து கொண்டு இருந்தது. சரவெடி கூட்டத்துகுள்ளையும் லென்த்தா போகுது பாருங்க....


                                               

காட்சிகள், வழக்கமான அரசியல் கட்சிகளை சிறுது நியாபக படுத்தியது.



கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் என்னிடம், வெற்றி பெற்றது, யார் ஆம் ஆத்மி என கேட்டு விட்டு சென்றான். மூன்று சக்கர வாகனத்தின் பின்னால் செல்கின்றரானே அவன் தான். அவன் வரையில் ஆம் ஆத்மி பரவியது மகிழ்ச்சியாக உள்ளது. 

பொறுத்திருந்து பாப்போம் புது வெளக்குமாறு எப்படி கூட்டுதுன்னு....

சொல்ல மறந்துட்டேனே, நம்ம எதிர் கட்சி தலைவர்,  11 தொகுதி சேர்த்து 2300 ஓட்டு வாங்கிட்டாரு.
              
                                                                                       - மகேஷ் பிரபு விஜயராஜ் 


ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லி - இதுவும் நம்ம மண்ணுதான் - 2

Flashback-2

சுமார் 700 வருடங்கள் டெல்லியின் பக்கங்கள், வெள்ளை மையினால் எழுத பட்டிருக்க வேண்டும். ராஜா டேலுவின்வின் அதிகாரத்திற்க்கு டெல்லி ஆட்பட்ட பின் 736 கி.பி. ஆம் ஆண்டு தோமர் ராஜபுத்திரர்கள் கைப்பற்றும் வரை டெல்லி என்ன ஆனது என்பது அப்பொழுது வாழ்ந்தவர்களுக்கே வெளிச்சம்.

தோமர் ராஜபுத்திரர்கள்:

தோமர் ராஜபுத்திரர்கள் பற்றி ஒரு சுவையான வரலாறு உள்ளது. 

அர்ஜுனனின் பேரன் பரிக்க்ஷித், குரு வம்சத்தை ஆண்டு வந்தார். அப்பொழுது இந்த்ரபிராஸ்தம் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. அவரது பரம்பரையினர் வழி தொடர்ந்தனர்.

சுமார் 300 கி.மு. ஆம் ஆண்டு மன்னன் ஷேமக்கை,  அவன் அமைச்சர் கொலை செய்து ஆட்சியை கைப்பற்றினார்.பின்னர் தோமர் ராஜவம்சம் கோதாவரி நதிக்கரை ஓரம் நகர்ந்து, ஒரு சின்ன நாட்டை உருவாக்கி ஆட்சி செய்தனர்.

 736 கி.பி. ஆம் ஆண்டு ஆனங்பால்-I என்னும் தோமர் வம்சத்து மன்னன் , மீண்டும் ஹரியானாவை கைப்பற்றி , தில்லிகவை (டெல்லி) தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினார். 

ஒரு கோட்டையை கட்டி, அதற்கு லால் கோட் (சிவப்பு கோட்டை) என பெயரிட்டார். அங்கு கோவில் பல கட்டினார், நான்காம் சந்திரகுப்தர் காலத்து இரும்பு தூணை நிறுவினார். அந்த தூண் இன்றளவும் துரு பிடிக்காமல் இருப்பது, இந்தியர்களின் நுட்பமான அறிவிற்கு சிறந்த சான்றாகும்.  



1051 குதுப் மினார் பகுதில் உள்ள இரும்புத் தூண்.

1051 கி.பி. ஆம் ஆண்டு ஆனங்பால்-II, அந்த கோட்டையை விரிவு படுத்தினார். 

12 ஆம் நூற்றாண்டு மத்தியில், சௌஹான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த விக்ரஹராஜா III, தோமர்களுடன் போரிட்டு டெல்லி அரியணையை கைப்பற்றினார்.

சௌஹான் ராஜபுத்திரர்கள்:

விக்ரஹராஜா III பரம்பரையில், 1168 கி.பி. ஆம் ஆண்டு பிறந்தவர்தான் பிரிதிவ்ராஜ் சௌஹான், அவர்  வித்தையில் சிறந்து விளங்கினார். இலக்கின் ஒளியை வைத்தே அதை சரியாக தாக்கும் அளவிற்கு அசாத்திய திறமை உடையவராக இருந்தார்.

தனது பதிமூன்றாம் வயதில் டெல்லி-அஜ்மீர் என் இரட்டை தலைநகரை கொண்டு ஆட்சி நடத்தினார். 

நமது இந்திய வரலாற்றில் ஷஹஜஹான் - மும்தாஜ் ஜோடிக்கு போட்டி போட்ட இன்னொரு காதல் ஜோடி, பிரிதிவ்ராஜ் சௌஹான் - சம்யுக்தை.

இவர்களின் காதல் கதை நாம் அனைவரும் அறிந்ததே, அறியாதவர்களுக்காக ஒரு சின்ன முன்னுரை.


(சம்யுக்தையின் சுயம்வரத்திற்கு, அவள் அப்பா, கன்னோஜ் மன்னன்  ஜெயசந்திரா, பிரிதிவ்ராஜை  அழைக்கவில்லை, சம்யுக்தைக்கோ பிரிதிவ்ராஜ் மேல் காதல், பிரிதிவ்ராஜ்க்கும் தான், சுயம்வரத்தின் பொழுது பிரிதிவ்ராஜ் போரிட்டு சம்யுக்தையை குதிரையில் தூக்கிச் சென்றார்.)  

பிரிதிவ்ராஜ், லால் கோட் கோட்டையை இணைத்து, மிக பெரிதாக ஒரு கோட்டையை கட்டி, அதற்கு ராய் பித்தோரா (Rai Pithora) என பெயரிட்டார்
அந்த கோட்டை 8 கி.மி. சுற்றளவு கொண்டது.


                                                   ராய் பித்தோராவின் வரைபடம்.

                       

பிரிதிவ்ராஜ் சௌஹான் சிலை, ராய் பித்தோரா இருந்த இடத்தில பா.ஜ.க. ஆட்சில் நிறுவப்பட்டுள்ளது . 

ராஜபுத்திரர்களிலேயே சிறந்த மன்னராக விளங்கினார். அவர் பல போர்களில் வெற்றி பெற்றார். அதில் குறிப்பிடும்படியானது, குஜராத் பீம்தேவ் ஸொலன்கியுடன் நடந்த போர், உத்தர் பிரதேஷ் மஹோபா நாட்டுடன் நடந்த போர், டரைன் போர். 

முதலாம் டரைன் போர், கி.பி. 1191ல் ஆப்கானில் இருந்து படை எடுத்து, டெல்லியை அபேஸ் பண்ண வந்த முஹம்மத் கோரியை வென்றார், அவரிடம் உயிர்பிச்சை கேட்டான் கோரி. மன்னித்து விடுதலை அளித்தார் பிரிதிவிராஜ்.
நம்ம ஆளுங்கள்ட்ட இருக்கிற கெட்ட பழக்கமே இது தான்யா. 

இந்தியாவின் சரித்திரமே அந்த மன்னிப்பில் மாறியது, மீண்டும் கி.பி. 1192ல் கோரி படை எடுத்து வந்து, பிரிதிவ்ராஜின் மாமனார், கன்னோஜ் மன்னன் ஜெய சந்திரா உதவியுடன் பிரிதிவ்ராஜை வீழ்த்தினான்.  

பிரிதிவ்ராஜ் சவுஹானே, டெல்லியின் கடைசி ஹிந்து மன்னன் ஆவார்.
அவரின் கதை இன்றளவும் வடஇந்தியாவில் பிரசித்தம். ராஜஸ்தான், ஹரியானா, உத்தர் பிரதேஷ கிராமங்களில் நாட்டுபுற பாட்டில் அவர்தான் ஹீரோ. வரலாறு முக்கியம் அமைச்சரே......... 

ராய் பித்தோர (லால் கோட்) கோட்டையை, டெல்லியின் இரண்டாவது நகரம் என குறிப்பிடலாம். 

இன்றளவும் லால் கோட் கோட்டையின் மிச்சங்களை நாம் மேஹருளி, சாகேத், கிசான்ஹார் மற்றும் வசந்த் குஞ் ஆகிய இடங்களில் காணலாம்.

பி.கு.

டெல்லியில் எங்கள் வீட்டு உரிமையாளர் பெயரும் சௌஹான் தான், அவருக்கும் பிரிதிவிராஜ் சௌஹானுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா என்று விசாரிக்க வேண்டும். 


                                                                                                                   - தொடரும் 

                                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 









     

டெல்லி - இதுவும் நம்ம மண்ணுதான் - 1.1

அரிதாக கிடைத்த சில புகைப்படங்கள்...., 

அதனால் தொடர்-1 இல், ஒரு சிறு பின்னோட்டம் (அப்பெண்டிக்ஸ் சொல்லுவாங்களே அது தான்.)

இந்தியால நேரு, கலைஞர் குடும்பத்த விட இவங்க குடும்பம்தாங்க பெருசு...
பாண்டவர்களின் குடும்ப மரம், அது தாங்க family Tree.... 




பாண்டவர்கள் கேட்ட ஐந்து கிராமங்கள் இது தான். இந்திரபிரஸ்தம், சோன்பிரஸ்தம், பாணிபிரஸ்தம், விகாஷ்பிரஸ்தம் மற்றும் தில்பிரஸ்தம். இந்த ஐந்து கிராமத்தை குடுத்திருந்த ஏன் சண்டை நடக்க போகுது.....  



                                                                                                                           - தொடரும் 
                                                                                                                
                                                                                                       மகேஷ் பிரபு விஜயராஜ் 

செவ்வாய், 3 டிசம்பர், 2013

பாட்டிய காணோம்

அம்மா, அம்மா ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்............................. அழுது கொண்டே, ஓடி வந்தான் மகி,

என்னாச்சு மகி, ஏன் இப்படி ஓடி வர்ற ?..

அம்மா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............................

மகி என்னாச்சு, ஏன் இப்படி அழுகிற ?...

அம்மா, பாட்டி ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............................

(அப்பன மாதிரியே வெளங்காம பேசுறானே !), புரியிறமாதிரி சொல்றா,

பாட்டிய காணோம் அம்மா, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............................

என்னடா சொல்ற ????, 

நீதானே அம்மா சொன்னே, பாட்டி இன்னும் ஒரு மாசத்துல வருவாங்கன்னு, அவங்க வரவே இல்லை, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................

எந்த பாட்டிடா ???

பாட்டி ஒரு மாசத்துல வந்து, வடை சுடுவாங்கன்னு சொன்னியேம்மா, நிலவில,  பாட்டி வந்து வடை சுடவே இல்லைமா,, ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......................



 எங்கே? எங்கே??


                                                  வடை போச்சே !!!!!!!!!!!




திங்கள், 2 டிசம்பர், 2013

டெல்லியில திருவிழா


டெல்லியில டிசம்பர் 4ந் தேதி தேர்தல் நடக்க போகுது. இங்கே 15 வருசமா காங்கிரஸ் ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்குது. இந்த தடவை ஆட்சிய பிடிக்குமாங்கிறது சந்தேகம்தான். 

காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டெல்லாம் ப.ஜ.க., வாங்கி ஆட்சிக்கு வருமானு கேட்டா அதுவும் சந்தேகம்தான், அதுக்கு ஆம் ஆத்மி கட்சி குறுக்கே நிக்குது. கொஞ்ச கஷ்ட காலம்தான். 

இதுல நம்மாள் விஜயகாந்த் வேற 11 தொகுதில வேட்பாளர் நிறுத்தி இருக்கார். இவரோட தன்னம்பிகைய பாராட்டி அடுத்து தடவை ஐ.நா. சபை தலைவர் தேர்தலில் சீட்டு வழங்குமாறு மேதகு ஜனாதிபதியை கேட்டுக்கு கொள்கிறேன். 

தலைவர்கள் எல்லாம் அவங்க கட்சிக்கு ஓட்டு போடச்சொல்லி பிரச்சாரம் பண்ற இதே டைம்ல, யாருக்கு வேனா ஓட்டு போடுங்க, ஆனா டெல்லி மக்கள் எல்லாரும் ஓட்டு போடணும்னு சொல்லி ஒரு க்ரூப் பிரச்சாரம் பண்ணுது. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் போங்க. அங்கே எடுத்த போட்டோ தான் இது....  

இந்திய கேட் பக்கத்தில வச்ச டிஜிட்டல் போர்டு 


              கிடார் வச்சிக்கிட்டு ஒரு அக்கா ? பாட்டு பாட, சுத்தி ஆடின காட்சி
                                    

                           எலக்ஷன் மாடல் பூத் (உபயம் தேர்தல் ஆணையம்) 


வேன் எல்லாம் வச்சி ஓட்டு போட சொல்றோம்ங்க, தயவு செஞ்சி ஓட்டு போடுங்க.

போஸ்டர் ஓட்ற கலாச்சாரத்தை டெல்லி கொண்டு சென்ற அண்ணன் வாழ்க.
                                                     

அந்த ப்ரோக்ராம் போன எல்லார்கிட்டையும் ஓட்டு போட சொல்லி, அவங்க பெருவிரல் ரேகையை வைக்க சொன்னாங்க, நானும் வச்சேன், ஆனா ஓட்டு போட்டா தூக்கி திகார் ஜெயில்ல போட்டுருவாங்க, எனக்கு இங்க ஓட்டே இல்லை.

இந்த ப்ரோக்ராமில் இருந்து அறியப்படும் நீதி, நம்ம ஊர்ல ஓட்டு கேட்டு கரகாட்ட கோஷ்டிய கூட்டிட்டு வர்ற மாதிரிதான், இங்கயும் நடக்குது. 
டெல்லி மக்களுக்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் வித்தியாசம் பெருசா இல்லை. இந்தியாவின் ஒருமைப்பாடு நல்லா தெரியுது.

பாரத் மாதாக்கி ஜெய் !!!!!!!!



சனி, 30 நவம்பர், 2013

கர்நாடகா ஸ்பெஷல்

யாரோ எவரோ எங்கோ (கர்நாடகாவில் தான்) எடுத்த படங்கள் 


Liquid Teaயாம், மத்த கடைல கட்டியாவா (Solid ) தர்றாங்க 



நான் நடந்தா, இவனும் நடக்கிறான், நான் நின்னா இவனும் நிக்கிறான்,   இப்போ நடக்கிறதா, நிக்கிறதா தெரியலையே டா. Traffic Policeக்கு நல்ல வருமானம்.


கடைசி வரைக்கும் கமல் மாதிரி புரியாம பேசுறீங்களே டா.




அப்படியே அந்த லீவ் நாள் அன்னிக்கு ஸ்ரீதேவி கிட்ட இங்கிலீஷ் படிங்க டா அப்ப்ரசெண்டிஸ் பசங்கள.


                                        

இவங்களையும் கூட்டிக்கிட்டு போங்க பாஸ்.


இந்தியால இத்தாலில எழுதி இருக்கீங்களே

சிகப்பு லைன், பட்டய கிளப்படீங்க போங்க. இனிமே எல்லா புருஷனுக்கும் ஜாலிதான்.
நிசமாத்தான் சொல்றியா ???


இன்னுமாட நீங்க திருந்தல !!!