செவ்வாய், 10 டிசம்பர், 2013

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்கள டா

டெல்லி சீமாபுரி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மியின்  உறுப்பினர் தர்மேந்திரா சிங் கோலி மீது மானபங்கம் படுத்தியதாக, தேர்தலில் தோல்வி அடைந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீர் சிங் தின்ஹன் மனைவி புகார் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி உறுப்பினர்கள், காலை 11:30 மணி அளவில், சீமாபுரியில் வெற்றி கொண்டாட்டத்தின் பொழுது  பட்டாசுகள் வெடித்தனர், தின்ஹன் வீட்டுக்கு அருகில் வெடித்த போது, தின்ஹனின் ஆதரவாளர்களுக்கும் ஆம் ஆத்மி உறுப்பினர்களுக்கும் மோதல் உருவாகியதை அடுத்து போலீஸ் வந்து கூட்டத்தை கலைத்தது.

கோலி மற்றும் ஆம் ஆத்மி உறுப்பினர்கள் வீடு புகுந்து மானபங்கம் படுத்தியதாகவும், குடித்து விட்டு மது பாட்டில்களை வால்மீகி கோவிலுக்குள் வீசியதாகவும் புகார் அளித்துள்ளார்கள். புகார் அளித்தது அன்று இரவு தான்.


                    தொப்பி வச்ச இந்த குழந்தை தான், தர்மேந்திரா சிங் கோலி

                                                               வீர் சிங் தின்ஹன்


காங்கிரஸார் தோல்வியை ஏற்று கொள்ள முடியாமல் செய்த கீழ்தரமான செயல் இது. தின்ஹனின் வீடு முன்பு பட்டாசு வெடித்ததை ஜீரணிக்க முடியாமல், பலி வாங்க வேண்டும் என நினைத்து அசிங்கப்பட்டு விட்டார்கள்.  

கோலி இப்படி செய்திருக்க வாய்பில்லை. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜரிவால் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. ஷஹாதாரா தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் சுரேந்திரா ஷர்மா அறிவிக்கபட்டார். அவர் மீது சில சொத்து வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்து, அவரை வாபஸ் வாங்க செய்து புது வேட்பாளர் பல்பீர் சிங் அறிவிக்க பட்டார். 

வேட்பாளர்கள் மீது  தவறு இருக்கும் பட்சத்தில், வேறு வேட்பாளர்கள் அறிவிக்க முடியாத நிலைமையில், அந்த வேட்பாளரை வாபஸ் வாங்க செய்து போட்டியிடாமல் இருப்போமே, தவிர தவறான வேட்பாளர்களை முன்மொழிய மாட்டோம் என்பதே ஆம் ஆத்மியின் நிலைமை.    

இப்பொழுதும் கூட, கோலி மீது தவறு இருக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக வைக்கப்படுவார், அவர் மீது தவறு இல்லாத பட்சத்தில் மான நஷ்ட வழக்கு தொடுக்கப்படும் என்கின்றனர் ஆம் ஆத்மியினர்.

காங்கிரஸ் கட்சியினரின் அசிங்கமான அரசியல் தந்திரம் இது. இவர்களுக்கு வேண்டியது பதவி சுகம், அதற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். மானபங்க வழக்கோடு சேர்த்து, கோவிலை பற்றி கூறி மதச்சாயம் பூச பார்கிறார்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்று கொள்ளாமல், சேற்றை வாரி இறைக்கிறார்கள்.

இவர்கள் திருந்தவே மாட்டார்கள். இந்தியாவை உருப்பட விட மாட்டார்கள். பாரத மாதா இவர்களை மன்னிக்கவே மாட்டாள். 

பி.கு. - 1

கடந்த டிச 3, புது சீமாபுரியில், பொது கழிப்பிடம் உடைந்து விழுந்து, ஒரு எட்டு வயது முஸ்லிம் சிறுவன் உயிர் இழந்தான். மற்றுமொரு சிறுமிக்கு கால் முறிந்தது. அங்கு வந்த தின்ஹன், இது ஒரு விபத்து, இதற்கு அரசாங்கத்தை குறை கூற முடியாது, விட்டால் சாலைகளில் நடக்கும் விபத்திற்கும் அரசாங்கத்தை குறை கூறுவீர்கள் போல் உள்ளது என்றார்.  

பி.கு. - 2

தின்ஹனின் மனைவி ராஜ் வாட்டி, டெல்லி கல்வித்துறையில் அரசு அதிகாரி, மற்றும் அவர்களது மகன்கள்  இருவர் டெல்லி அரசு அதிகாரிகள், ஒருவர் property dealer. இது உங்களின் மேலான கவனத்திற்கு யுவர் ஆனார்.
  
பி.கு. - 3

தர்மேந்திரா சிங் கோலி, மறைந்த சந்தோஷ் கோலியின் தம்பி ஆவார். சந்தோஷ் கோலி 2002 வருடம் முதல் அரவிந்த் கெஜரிவால் அவர்களுடன் சமுக நல பணியில் ஈடுபட்டூள்ளார். 

                                            

ஜூன் மாதம் சந்தோஷ் கோலி சீமாபுரியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார், அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

 ஜூன் 30ந் தேதி, சாலை விபத்தில் அடையாளம் தெரியாத காரால் கொல்லப்பட்டார். காவல் துறை அந்த வழக்கை ஹிட் & ரன் வழக்காக விசாரிக்கிறது. அதன் பின் அவரது தம்பி தர்மேந்திரா சிங் கோலி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  

யார் மீது தவறு இருக்கும் என நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.....   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக