புதன், 30 ஏப்ரல், 2014

டிராபிக் போலீஸ்

நேற்று மாலை நானும், என் நண்பர் அருணும் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தோம்.


போகின்ற வழியில் ஓர் நான்கு வழி சந்திப்பு. அதில் U-டர்ன் போடவேண்டும். நாங்கள் சர்விஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்ததால் U-டர்ன் போட, வண்டியை 90 டிகிரி திருப்பி, மறுபடியும் 90 டிகிரி திருப்ப வேண்டும்.



(இணையத்திலிருந்து)


வண்டியை 90 டிகிரி திருப்பி சிக்னலுக்காக காத்திருந்தோம். அப்பொழுது ஒரு போக்குவரத்து காவலர் எங்கள் அருகில் வந்து, சிரித்துக்கொண்டே ஹிந்தியில் எதோ கேட்டார்.


ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லி வந்தும் கூட ஹிந்தியை தமிழில் பேசினால் தான் எங்களுக்கு புரியும். 


எங்கள் வண்டி தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வண்டி, அதை பற்றி ஏதோ கேட்கிறார் என நினைத்து, க்யாஜி என்றோம். 


லைசென்ஸ் லைசென்ஸ் என்றார்.


லைசென்சை எடுத்து கொடுத்தோம்.


ஹெல்மெட் என்று ஏதோ கூறினார். 


அருண் அப்பொழுது ஹெல்மெட் அணிந்திருந்தார், அது கொஞ்சம் பழைய ஹெல்மெட், wiser (கண்ணாடி) வேறு இல்லை. 


இதை ஹெல்மெட் கணக்குல சேக்க முடியாதுனு சொல்றார் போல நினைச்சிக்கிட்டு, ஹெல்மெட் ஹே னா (இருக்குது) என்றோம்.


அவர் பீச்சே ஹெல்மெட் நஹி என்று ஏதோ சொன்னார். (பின்னாடி அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லைன்னு சொல்றார்னு புரிஞ்சிகிட்டோம்).

ஜி, ஏ ரூல் நஹி மாலும், தமிழ் நாடு ஏ ரூல் நஹி (நாங்கள் சொல்ல முயற்சித்தது, இப்படி ஒரு ரூல் இருப்பது தெரியாது, எங்கள் ஊரில் இப்படி கிடையாது, அதனால் தான் தெரியாது என்று).


நஹி நஹி, பைன், ஏக் சோ ரூபாய் பைன் என்றார்.


சரி பைன கட்டுவோம், பில் தேதோ ஜி (நாங்கள் சொல்ல முயற்சித்தது, பில் கொடுங்கள் என்று).


அவரும், கிரெடிட் கார்டு தேக்கிற மிசின் மாதிரி ஒன்னு வச்சி, எல்லா விவரத்தையும் பதிவு பண்ணி முழங்கை நீளத்திற்கு ஒரு பில் கொடுத்தார்.


நங்கள் பில்லை வாங்கிட்டு காசு கொடுத்ததும், நன்றி என்று சொன்னார்.


ஒரு ஐந்து நிமிடம் அவருடன் பேசிக்கொண்டு இருந்திருப்போம்  இவ்வளவு நேரமும் நாங்கள் வண்டியை விட்டு இறங்க கூட இல்லை...


மொழி தெரியாத எங்களிடம் கூட நன்றாக பேசிய அந்த காவலர் எங்கே, 


நம் ஊரில் சிறு விதிமீறல்களுக்காக காவலரிடம் சிக்கும் பொழுது, வண்டி சாவியை பிடுங்கி கொண்டு, வாடா போடா  என ஒருமையில் அழைத்துக்கொண்டும், இந்தியன் பினால் கோடில் (Indiyan Penal Code) உள்ள அனைத்து கேசையும் நம் மீது போடுவதாக கூறி மிரட்டும் நம்ம ஊர் காவலர் எங்கே. 




குறிப்பு : நம்ம ஊர் காவலர் அனைவரும் இப்படித்தான் என நான் கூறவில்லை, என் அனுபவத்தில் நடந்ததை வைத்து கூறியிருக்கிறேன். 


உண்மையாய் வாழும் காவலர்களுக்கு ஒரு சலாம். அவர்களை பற்றி பேச எனக்கும் அருகதை இல்லை.........
  

       





வியாழன், 24 ஏப்ரல், 2014

கள்ள ஓட்டு

தேர்தல் ஆணையம் கள்ள ஓட்டை தடுக்க எவ்வளவோ முயற்சி பண்ணுது அப்படியும் கள்ள ஓட்டு முழுசா தடுக்க முடியல. 

தீபாவளிக்கு கூட ஒழுங்கா தலைக்கு எண்ணை தேச்சி குளிக்காதவங்க, தலை புல்லா சொலு சொலுன்னு எண்ணை வச்சிட்டு ஓட்டு போட வாராங்க.

ஆள்காட்டி விரல்ல அழியாத மை வச்சாலும், தேர்தல் அதிகாரிகள் பாக்காத நேரத்தில தலைல சரக்குன்னு ஒரு தேய். மை கொஞ்ச கொஞ்சமா அழிய ஆரம்பிச்சிருது. 


                        

                            படம் : தட்ஸ்தமிழ்.காம்யிலிருந்து  (நன்றி)

 
வெளியே வந்து  நல்ல கைய கழுவிட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிச்சிராங்க. 

இவங்களை தடுக்க நம்ம ஸ்டைல தேர்தல் ஆணையத்துக்கு ஒரு ஐடியா !!!    

இனிமே ஓட்டு போட வர்ற யாரும் தலைக்கு எண்ணை வச்சிட்டு வரக்கூடாது.  

அதையும் மீறி வந்தா பியூட்டி பார்லர்ல தலைய சாச்சி வச்சி வாஷ் பண்ணிவிடுவாங்களே, அதே மாதிரி பண்ணப்படும். 

இதற்கு ஆகும் செலவு, அந்த தொகுதியில் ஜெயிக்கும் வேட்பாளரிடம் இருந்து பின்னர் வசூலிக்கபடும் 



           

      படம் : இணையத்திலிருந்து


எப்புடி நம்ம ஐடியா !!!

நீங்க கொலைவெறில என்னை தேடுறது புரியுது. நான் எஸ்கேப் ஆகுரங்கோ....



வியாழன், 17 ஏப்ரல், 2014

இயற்கை உணவு திருவிழா


எங்கள் பாசத்திற்குரிய குருஜி பாஸ்கர் அவர்கள்  இயற்கை உணவு திருவிழா அனுப்பிய பற்றி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். அதை உங்களுடன் பகிர அசை படுகிறேன்.


                              


"இயற்கைக்கு அடிமையாகிப் பாருங்கள். உங்களுக்குத் தேவையானதை யெல்லாம் நீங்கள் கேட்காமலே அது உங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கும். உங்கள் உழைப்பிற்கான கூலியையும் இயற்கை நமக்குக் கொடுக்கும்!. எல்லாவற்றுக்கும் மேலான ஈடில்லாத மனநிறைவைத் தரும்!"


வித்தியாசமான வெற்றி  பெற வாழ்த்துவோம்.  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம்..... 

புதன், 16 ஏப்ரல், 2014

7 C

7 C பற்றி அநேகருக்கு தெரிந்திருக்கும், தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன முன்னுரை,


7 C என்பது தமிழக அரசால் SETC (தொலைதூர பேருந்து) மூலமாக நடத்தப்படும் கூரியர் சேவை ஆகும். கடிதங்கள் மற்றும் சின்ன பார்சல் அனுப்ப 7 ரூபாய் மட்டுமே, ஒரே நாளில் டெலிவரி செயப்படும். 




கும்பகோணத்தில் உள்ள ஒரு கூரியர் அலுவலக புகைப்படம் இது..


காலைல 10 மணிக்கு கூரியர் அலுவலகம் திறக்கிறீங்க, நாங்க எப்படி காலை 7 மணிக்கு புக்கிங் பண்றது....


                         

ரெம்ப கன்புசனா இருக்குபா..........



திங்கள், 7 ஏப்ரல், 2014

சுற்றுச் சுழல் நட்பு பேருந்து

Eco-Friendlyய தான் சுற்றுச் சுழல் நட்பு பேருந்துன்னு மொழி  பண்ணினேன், தப்பாயிருந்தா திருத்துங்க....


விருந்தாவன் போருந்தப்போ ஒரு ஸ்கூல் பஸ் பார்த்தேன், ரெம்ப வித்தியாசமா இருந்தது, உங்கள் பார்வைக்கு...... 

விருந்தாவன் / பிருந்தாவனம் உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரிடமாகும். கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இது.....





இந்தியா முன்னேருதுங்கோ......................

புதன், 2 ஏப்ரல், 2014

பரிணாம வளர்ச்சி


குடிதண்ணிருக்காக வரிசையில் நின்றோம்:

தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், மாதம் மும்மாரி பொழிந்து வளமாக வாழ்ந்த என் நாட்டு மக்கள் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று....  




                                              படம் இணையத்திலிருந்து 

சினிமா டிக்கட்டுக்காக வரிசையில் நின்றோம்:

தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், வேலையை மறந்து இப்படி இருக்கிறார்களே என்று..




                                                படம் இணையத்திலிருந்து 

சாரயத்திற்க்காக வரிசையில் நின்றோம்:

தமிழ் அன்னை வருத்தப்பட்டாள், இவர்கள் நிலை என்னவாகும் என்று..


                                   
                                    படம் தட்ஸ்தமிழ்.காம் தளத்திலிருந்து


செவ்வாய், 1 ஏப்ரல், 2014

எங்கோ வாசித்தது - 1

பொதுவாக மாதங்களுக்கு 28, 29, 30 அல்லது 31 நாட்கள் இருக்கும்
ஒரு மாதத்திற்கு மட்டும் 19 நாட்கள் தான் இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா ?


உண்மைதான், 1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு தான் நிலைமை...
அதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போமா !



1752 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, இங்கிலாந்து நாட்டில் அது வரை நடைமுறையில் இருந்த ரோமன் ஜூலியன் காலண்டருக்கு பதிலாக கிரகோரியன் காலண்டர் பயன்படுத்த வேண்டும் என மன்னர் உத்தரவிட்டார்.


 ஜூலியன் காலண்டரில் கிரகோரியன் காலண்டரை விட 11 நாட்கள் அதிகம் இருந்தது. இரண்டாம் தேதிக்கு அடுத்த நாள் பதினான்காம் தேதி என மாற்றப்பட்டது. அதனால் இந்த மாதத்தில் 19 நாட்கள் மட்டுமே. 


மக்களுக்கு மூழுமாத சம்பளம் கிடைத்ததால், 


                               "குமுதா ஹாப்பி அண்ணாச்சி"


இப்படித்தான் பெய்ட் லீவ் (சம்பளத்துடன் கூடிய விடுப்பு) முறை வந்தது....    








அக்கரைச் சீமை அழகினிலே - 5

மே 1 ந் தேதி வெனிஸ் (Venice) போகலாம்னு முடிவு பண்ணினோம்.
எங்க கூட இருந்த மத்த எல்லாரும் வெனிஸ் பார்த்துடதால, நானும் அசோக்னு ஒருத்தரும் போனோம். 


ஒரு வாரத்துக்கு முன்னாடி வெனிஸ் போறதுக்கு ட்ரைன்லையும், சென்ட்ரல் ஸ்டேஷன் போறதுக்கு மெட்ரோலையும் ஓபன் டிக்கட் வாங்கி வச்சிட்டோம். காலை 7:25 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருந்து வெனிஸ்க்கு ட்ரைன் கிளம்பும். நாங்க தங்கி இருந்த ஹோட்டல்ல இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் 22 நிமிஷம் மெட்ரோ பயண தூரத்தில இருக்குது.


காலை 6.30 மணிக்கு மெட்ரோ ஸ்டேஷன் வந்து பார்த்தா, கதவு இழுத்து சாத்தி பூட்டி இருக்குது, அந்த ஏரியால ஒரு ஈ, காக்கா இல்லை. 

எங்களுக்கு ஒண்ணுமே புரியல. ஒரு 10 நிமிஷம் ஏதாவது தலை தென்படுதான்னு சுத்தி சுத்தி பார்த்தோம்.

ஒரு தாத்தா பொடி நடையா நடந்து வந்து கொண்டு இருந்தார்.


நாங்க அவர்கிட்ட மெட்ரோ பத்தி கேட்டோம், அவருக்கு நாங்க பேசுன இங்கிலீஷ் (??) புரியல, அவர் பேசுன இத்தாலி எங்களுக்கு புரியல, கடைசியா மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிகர்ணம் அடிக்காத குறையா நடிச்சி காட்டி புரிய வச்சோம்.


மேட்டர் என்னன்னா, அன்னைக்கு மே 1, உழைப்பாளர் தினம், மெட்ரோ சேவை 7 மணி முதல் ஆரம்பிக்குமாம். டாக்ஸில போனா கரைக்ட் டைமுக்கு போக முடியாது, மெட்ரோல போய் பார்ப்போம்னு வெயிட் பண்ணினோம். 6:50 க்கு மெட்ரோ கதவ திறந்து விட்டாங்க.


ஸ்டேஷன் உள்ள போய் டிக்கட் எடுக்க பேன்ட் பின்னாடி பாக்கெட்ல கை விட்ட வெறும் சீப்பு  வருது, டிக்கட்ட காணோம், அன்னிக்கு ஜீன்ஸ் பேன்ட் போட்டு இருந்தேன், நடக்கிறப்போ, சீப்பு கொஞ்ச கொஞ்சமா நகண்டு டிக்கட்ட தள்ளி விட்டுருச்சினு நினைக்கிறன். 


சாமி வரம் குடுத்தாலும் பூசாரி தடுக்குறாரே, சொக்கநாதா இது என்ன திருவிளையாடல், அவசரமா வெளியே தேடி ஓடினேன். 


      

மெட்ரோ டிக்கட் 


நல்ல வேலைய மெட்ரோ வாசல்ல கிடந்தது. எடுத்துட்டு உள்ள வந்து டிக்கட்ட  செக்-இன் பண்ணிட்டு மெட்ரோ ஏறியாச்சு.


நம்ம ஊர் மாதிரி மெட்ரோ இல்லைங்க, கரைக்டா 7:22 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. இறங்கி வேகமா (??) ஓடினோம். டிஸ்ப்ளேல 17 நம்பர் பிளாட்பார்ம்னு போட்டு இருந்தது.


நாங்க ஸ்டேஷன் ஆரம்பத்துல இருந்தோம், அவ்வளவுதான் ட்ரைன் கிளம்பிரும், பிளாட்பார்ம்  எங்க இருக்குன்னாவது  பார்த்துட்டு  வருவோம்னு கிட்ட போனோம். 

அதிர்ஷ்டவசமா நாங்க டிஸ்ப்ளே பார்த்ததே 17 நம்பர் பிளாட்பாரம் தான், ஓடி போய் ட்ரைன் ஏறினோம். 




நாங்க ஏறின உடனே ட்ரைன் கதவை சாத்திட்டாங்க, ட்ரைன் நகர ஆரம்பிச்சிருச்சி. கொஞ்ச நேரம் மூச்சி வாங்க உக்காந்தோம். அப்போதான் திடிர்னு ஒரு விஷயம் நியாபகம் வந்தது. 


நாங்க பயணம் பண்ணினது ஓபன் டிக்கட், அதை ட்ரைன் ஏறுறதுக்கு முன்னாடியே செக்-இன் பண்ணனும், இல்லை என்றால் வித்தவுட் என்று அர்த்தமாம். பைன் வேற ரெம்ப ஜாஸ்தியா போடுவாங்களாம்.


செக்கர் நம்மகிட்ட வர்றதுக்கு முன்னாடி, நாம அவர் தேடி போவோம்னு முடிவு பண்ணினோம், மறுபடியும் ட்ரைன்குள்ள ஓட்டம் ஆரம்பம். இந்த பஞ்சயத்த முடிச்சிட்டு வெனிஸ் நோக்கி பயணம் பண்ணினோம்.


வெனிஸ் பத்தி அனேகர் கேள்விபட்டிருக்கலாம், தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன முன்னுரை....


இத்தாலியின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 118 சின்ன தீவுகளால் அமைக்கப்பட்ட நகரம். ஒவ்வொரு தீவும் படகு அல்லது பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் கி.பி. 166 ஆம் ஆண்டுக்கு முன்பே நிர்மாணிக்க பட்டது...


                                                                                            - தொடரும் 


                                                                               மகேஷ் பிரபு விஜயராஜ்