புதன், 30 ஏப்ரல், 2014

டிராபிக் போலீஸ்

நேற்று மாலை நானும், என் நண்பர் அருணும் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தோம்.


போகின்ற வழியில் ஓர் நான்கு வழி சந்திப்பு. அதில் U-டர்ன் போடவேண்டும். நாங்கள் சர்விஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்ததால் U-டர்ன் போட, வண்டியை 90 டிகிரி திருப்பி, மறுபடியும் 90 டிகிரி திருப்ப வேண்டும்.



(இணையத்திலிருந்து)


வண்டியை 90 டிகிரி திருப்பி சிக்னலுக்காக காத்திருந்தோம். அப்பொழுது ஒரு போக்குவரத்து காவலர் எங்கள் அருகில் வந்து, சிரித்துக்கொண்டே ஹிந்தியில் எதோ கேட்டார்.


ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லி வந்தும் கூட ஹிந்தியை தமிழில் பேசினால் தான் எங்களுக்கு புரியும். 


எங்கள் வண்டி தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட வண்டி, அதை பற்றி ஏதோ கேட்கிறார் என நினைத்து, க்யாஜி என்றோம். 


லைசென்ஸ் லைசென்ஸ் என்றார்.


லைசென்சை எடுத்து கொடுத்தோம்.


ஹெல்மெட் என்று ஏதோ கூறினார். 


அருண் அப்பொழுது ஹெல்மெட் அணிந்திருந்தார், அது கொஞ்சம் பழைய ஹெல்மெட், wiser (கண்ணாடி) வேறு இல்லை. 


இதை ஹெல்மெட் கணக்குல சேக்க முடியாதுனு சொல்றார் போல நினைச்சிக்கிட்டு, ஹெல்மெட் ஹே னா (இருக்குது) என்றோம்.


அவர் பீச்சே ஹெல்மெட் நஹி என்று ஏதோ சொன்னார். (பின்னாடி அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியவில்லைன்னு சொல்றார்னு புரிஞ்சிகிட்டோம்).

ஜி, ஏ ரூல் நஹி மாலும், தமிழ் நாடு ஏ ரூல் நஹி (நாங்கள் சொல்ல முயற்சித்தது, இப்படி ஒரு ரூல் இருப்பது தெரியாது, எங்கள் ஊரில் இப்படி கிடையாது, அதனால் தான் தெரியாது என்று).


நஹி நஹி, பைன், ஏக் சோ ரூபாய் பைன் என்றார்.


சரி பைன கட்டுவோம், பில் தேதோ ஜி (நாங்கள் சொல்ல முயற்சித்தது, பில் கொடுங்கள் என்று).


அவரும், கிரெடிட் கார்டு தேக்கிற மிசின் மாதிரி ஒன்னு வச்சி, எல்லா விவரத்தையும் பதிவு பண்ணி முழங்கை நீளத்திற்கு ஒரு பில் கொடுத்தார்.


நங்கள் பில்லை வாங்கிட்டு காசு கொடுத்ததும், நன்றி என்று சொன்னார்.


ஒரு ஐந்து நிமிடம் அவருடன் பேசிக்கொண்டு இருந்திருப்போம்  இவ்வளவு நேரமும் நாங்கள் வண்டியை விட்டு இறங்க கூட இல்லை...


மொழி தெரியாத எங்களிடம் கூட நன்றாக பேசிய அந்த காவலர் எங்கே, 


நம் ஊரில் சிறு விதிமீறல்களுக்காக காவலரிடம் சிக்கும் பொழுது, வண்டி சாவியை பிடுங்கி கொண்டு, வாடா போடா  என ஒருமையில் அழைத்துக்கொண்டும், இந்தியன் பினால் கோடில் (Indiyan Penal Code) உள்ள அனைத்து கேசையும் நம் மீது போடுவதாக கூறி மிரட்டும் நம்ம ஊர் காவலர் எங்கே. 




குறிப்பு : நம்ம ஊர் காவலர் அனைவரும் இப்படித்தான் என நான் கூறவில்லை, என் அனுபவத்தில் நடந்ததை வைத்து கூறியிருக்கிறேன். 


உண்மையாய் வாழும் காவலர்களுக்கு ஒரு சலாம். அவர்களை பற்றி பேச எனக்கும் அருகதை இல்லை.........
  

       





2 கருத்துகள்:

  1. ஜி, அருமை ஜி. டெல்லிய, நம்ம டெல்லி மக்கள ரொம்ப மிஸ் பண்றேன் ஜி :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லிக்கு வாங்க ஜி, நீங்க இல்லாம போர் அடிக்குது...

      நீக்கு