வியாழன், 12 பிப்ரவரி, 2015

கன்னா பின்னா தத்துவங்கள்


தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..

வாக்கிங் போறது எளிதானது தான்...
வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட,
யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..

ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட

ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ...
#
டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம் 

இப்பெல்லாம் .டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம

ATM - Anju Time Mattum (
அஞ்சு டைம் மட்டும்)

குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..


பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?


என்னம்மா இப்படி பண்றிங்களேமா

தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1 & கேமரா 4


டிஸ்கி : நண்பர் ஒருவர் அனுப்பிய வாட்ஸ்அப்பில் வந்த தகவல்.......

புதன், 11 பிப்ரவரி, 2015

பயணங்கள் பலவிதம் - 3

இதுக்கு முன்னாடி

இதுக்கு முன்னாடி 

அந்த அதிர்ச்சியான சம்பவம் என்னா.......

நம்மள வளரும் நாடுன்னு சொல்றாங்க, விமானம் மற்றும் ரயில் டிக்கட்ட மொபைல்ல காட்டுனாலே போதும், ஐரோப்பா நாடுகளை வளர்ந்த நாடுகள்ன்னு சொல்றாங்க அங்க டிக்கெட் ஆன்லைன்ல எடுத்தா, பயணத்துக்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷன்ல போய் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கணுமாம்.

சாயங்காலம் தானே பயணம், பயணத்துக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கே, ஸ்டேஷனுக்கு போய் அழகா போய் பிரிண்ட் அவுட் எடுத்துக்கலாமே இப்போ என்ன பிரச்சனை, அது தானே உங்க கேள்வி.

நாங்க டிக்கட் எடுத்தது இத்தாலியன் ரயில் வலைத்தளத்தில், அந்த டிக்கட்டை இத்தாலி நாட்டுக்குள் வைத்து தான் பிரிண்ட் எடுக்க முடியுமாம். நாங்கள் இருப்பதோ வியன்னாவில், அந்த நாட்டு வலைத்தளத்தில் எடுத்த டிக்கட்டை மட்டும்தான் பிரிண்ட் எடுக்க முடியுமாம். ஒரே ரயில் இரண்டு நாடுகளுக்குள் ஓடுகிறது, ஆனால் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வு இல்லை.

நாங்கள் ஆன்லைனில் டிக்கட் எடுத்த போது வந்த மின்னஞ்சலை வைத்து தகவல் மையத்தில் விசாரித்து பார்த்தோம். இந்த மின்னஞ்சலை குப்பையில் போடுங்கள், இது செல்லாது, இதை வைத்து பயணித்தால் டிக்கட் தொகையுடன், மூன்று மடங்கு அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என்றார்கள்.

டிக்கட்டின் அப்போதைய விலை 100 இரோ (8000 ரூபாய்), அபராதத்துடன் 32000 ரூபாய் வரும். எங்களுக்கு ஒரே டரியலாகி போய் விட்டது. ரெம்ப நேரம் ரயில்வே நிலையத்திலிருந்து உக்காந்து உக்காந்து யோசித்து பார்த்தோம். நானும் இன்னொருவரும், நாங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த டிக்கடிலே பயணம் செய்து பார்போம். டிக்கட் பரிசோதகரை கிழக்கே பார்த்து நிற்க வைத்து காலில் விழுந்தாவது சமாளிப்போம் என தோன்றியது. மீதி இருவர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் 8000 ரூபாயை பார்த்தால், 32000 ரூபாய் போய்விடும் என்றார்கள்.

ரெம்ப நேரம் பேசி பேசியும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
இறுதியில், ரயில் கிளம்பும் முன் டிக்கட் பரிசோதகரிடம் கேட்டு பார்க்கலாம். அவர் முடியாது என்றால், 100 ஈரோவிற்கு டிக்கட் எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்தோம்..........

பிறகு வியன்னா நகரை சுத்தி பார்த்தோம்.

அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு........


வியன்னா நகரில் ஒரு சர்ச் 


ஆஸ்திரியா பாராளுமன்றம் 

\

அரண்மனை 


கயிறு வைத்து ஒரு நீர்குமிழி உருவாக்கிக்கொண்டிருந்தார் 


மாற்றொரு அரண்மனை 




அன்று மாலை என்ன நடந்தது, அடுத்த பதிவில் பாருங்கள்.....


டிஸ்கி : கொஞ்சம் நீளமாகிவிட்டது அடுத்த பதிவோடு முடித்து கொள்கிறேன்.......