புதன், 29 அக்டோபர், 2014

சென்னை to தூத்துக்குடி

 எந்த வருஷ தீபாவளிக்கு இல்லாத சிறப்பு இந்த வருஷ தீபாவளிக்கு உண்டு. அது என்னானு கேக்குறீங்களா....

 

+2 முடிச்சிட்டு, காலேஜ், வேலைன்னு வெளியூர் வந்ததுக்கு அப்புறம் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஊருக்கு போறதுக்குள்ள நொந்து நூடுல்ஸ் ஆகிருவேன்.

 

ஒன்னு டிக்கெட் புக் பண்றதுல ஏகப்பட்ட போராட்டம் நடக்கும், இல்ல டிக்கெட் புக் பண்ணாம டிராவல்ல போராட்டம், ரெண்டும் இல்லைனா டிக்கெட் புக் பண்ணியும் டிராவல்ல போராட்டம், இப்படி ஏதாவது காமெடி நடக்கும்.

 

ஒரு கொசுவத்தி சுருள் பத்தவச்சிகோங்க...................

 

இப்படிதான் 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ட்ரைன்ல டிக்கெட் புக் பண்ணன கூத்த கேளுங்க.............

 

அந்த வருஷம் தீபாவளி வியாழகிழமைனு நினைக்கிறன். செவ்வாய்கிழமை நைட் தூத்துக்குடிக்கு கிளம்புற முத்து நகர் அதிவிரைவு வண்டில (22 இல்ல 23 ஸ்டாப்ன்னு நினைக்றேன்)  டிக்கெட் புக் பண்ணறதுக்கு 60 நாளை குத்து மதிப்பா கணக்கு போட்டுக்கிட்டு அதுக்கு முத நாள் அலாரம் வச்சிட்டு படுத்தேன்.

 

எத்தன மணிக்கு அலாரம் வச்சேன் தெரியுமா காலைல 7 மணிக்கு. நான் தங்கி இருந்த வீட்ல இருந்து St. தாமஸ் மௌண்ட் ரயில்வே புக்கிங் ஸ்டேஷன் 100 மீ தான் இருக்கும்.

 

குளிக்காம கொள்ளாம ஸ்டேஷன் போனா எனக்கு முன்னாடி ஒரு 30 பேரு நின்னாங்க. Q-ல வெயிட் பண்ணி டிக்கட் புக் பண்ணிட்டு வந்தாச்சு.

 

தீபாவளி வியாழகிழமைங்கிறதால ஊருக்கு போறவைங்க செவ்வாய் அல்லது புதன்கிழமை போவாங்க, ஆனா திரும்பி வரவிங்க எல்லாம் ஞாயிற்றுகிழமை தான் வருவாங்கன்னு ப்ரில்லியண்டா (?????) யோசிச்சி காலைல 5:30க்கே ஸ்டேஷன் போனேன்.

 

 அங்க போனா எனக்கு முன்னாடி சுமார் ஒரு 90 பேரு நின்னுகிட்டு இருந்தாங்க, தம் கட்டி எண்ணுனோம்ல, 8 மணி வரைக்கும் பொழுது போக வேற வழி. அதுல ரெண்டு தெரிஞ்ச மூஞ்சி இருந்தது.

 ஒருத்தன் 10 வது ஆளா நின்னுகிட்டு இருந்தான், இருத்தன் 18 வது ஆளா நின்னுகிட்டு இருந்தான். ரெண்டு பெரும் ஒரே ரூம் தான்.

 

 

 

 

எதுக்கு ரெண்டு பேரும் புக் பண்ண வந்தாங்கன்னா ரெண்டு பேரும் வேற வேற ஊர். ஒருத்தரே 2 form குடுக்கலாம் சில சமயம் புக் பண்ற அதிகாரி ஸ்ட்ரிக்டா இருந்தார்னா ஒரு formக்கு மேல வாங்க மாட்டார். அதனால ஒருத்தன் பின்னாடி ஒருத்தன் வந்து இருக்காங்க.

 

விடாபிடியாக ரெண்டரை மணி நேரத்தை தள்ளின பிறகு, புக்கிங் ஆரம்பிச்சது.....

 

கவுன்ட்-டான் ஸ்டார்ட்ஸ்....

 

நல்லவேளையா, 10 வது ஆளா நின்ன நண்பன்கிட்டயே 2 formயும் வாங்கிட்டாரு, அதனால நான் 18 வது ஆளா நின்ன நண்பன் இடத்தில போய் நின்னுட்டேன்.

 

என்னோட முறை வரப்போ 8:21am (இன்னும் நல்ல நியாபகம் இருக்குது),

 

புக்கிங் கிளார்க் டொங்கடி டொங்கடி எங்க பேர் ஊர் எல்லாம் அடிச்சார்,

அது என்ன மாயமோ தெரியல, என்ன மந்திரமோ தெரியல, ஊரெல்லாம் விண்டோஸ் 7, 8, 8.1, XP என்னென்னமோ வந்தாலும் கூட இன்னும் ரயில்வே ரிசர்வேசன் மட்டும் DOS-MODE ல தான் ஆபரேட் ஆகிட்டு இருக்குது... 

 

டிக்கட் வெயிட்டிங் லிஸ்ட் 17ல இருக்கு புக் பண்ணவானு கேட்டார்.

 

உடனே, நான் புக் பண்ணுங்கனு சொன்னேன்.

 

பிரிண்ட்டான டிக்கட்ல பார்த்தா வெயிட்டிங் லிஸ்ட் 23. 

 

அவர் கேட்டதுக்கும், நான் புக் பண்ணுங்க சொன்னதுக்கும் நடுவில அரை  செகண்ட் ஆகிருக்குமாங்க ?

 

அந்த கேப்ல 6 பேர் உள்ள புகுந்திருக்காங்க..........  

 

எனக்கு அப்பவோ கண்ண கட்டிருச்சி....................             

 

அன்னிக்கு சாயங்காலம் மாலை மலர்ல, சென்னை எக்மோரில் முதல் டிக்கட் வாங்கிய 2 பெண்மணின்னு பேட்டி போட்டோவோட வந்திருந்தது.

 

எனக்கு சத்தியமா மன்னன் படம் நியாபகம் வரலைங்கோ சொன்னா நீங்க நம்பவா போறீங்க............

 

      

டிஸ்கி : என்னடா அந்த சிறப்ப சொல்லவே இல்லைங்றீங்களா,

இந்த வருஷம் தீபாவளிக்கு டிக்கட் புக் பண்ண வேண்டிய அவசியம் இல்லாம போச்சு, ஏன்னா தீபாவளி நேரத்தில இத்தாலில மாட்டிகிட்டேன்......

 

வெள்ளி, 24 அக்டோபர், 2014

தமிழன் தோன்றிய இடம் !!!!!

தமிழன் முதன் முதலில் எந்த ஊரில் வாழ்ந்திருப்பான் ???

 

சென்னை -

 

சென்னை இன்னைக்கு தான் தமிழ் நாட்டோட தலை நகர். அதோட வரலாறு வெறும் 396 வருஷம் தான், அதனால இப்போதைய தலைநகரத்தை விட்டு விடுவோம், பழைய தலைநகரம் எதாவது இருக்குமா,

 

சோழ தலைநகர் தஞ்சாவூரா , பாண்டிய தலைநகர் மதுரையா, சேரர்களின் தலைநகர் வஞ்சியா இல்லைனா பல்லவர்களின் தலைநகர்  காஞ்சியா ?????

 

ரெம்ப குழப்பமா இருக்குதுல்ல......

 

குழம்பவே வேண்டாம்,

 

தமிழன் தோன்றிய இடம் பழனியாகத்தான் இருக்கணும்..

 

எல்லாரும் திருவிளையாடல் படம் பார்த்திருப்போம்

 

மாம்பழத்துக்காக பிரச்சனை வந்தப்பொழுது, முருகன் கோவிச்சிக்கிட்டு சொன்ன வார்த்தை, 

 

"எனக்குன்னு ஒரு மக்கள், எனக்குன்னு ஒரு நாடு உருவாக்கிகிட்டு, என் நாடு என் மக்கள்ன்னு வாழப்போறேன்னு" முருகன் சொல்லிட்டு வந்து நின்ன இடம் எது ???

  

பழனி 

 


 
 

 
 

நாம முருகனையே ஆதி தமிழனா நினைச்சி வணங்குறோம்,

அதனால  தமிழன் தோன்றிய இடம் பழனியாகத்தான் இருக்கணும்..

 
 
டிஸ்கி - பெருமாள்ன்னு ஒரு நண்பர் சொன்ன விஷயம் இது, பிடிச்சிருந்ததால வலையுலகத்துகுள்ள கொண்டு வந்துட்டேன்..... 

புதன், 15 அக்டோபர், 2014

ரோமானிய சதுக்க பூதம்

நமக்கு தெரிஞ்ச சோழ வரலாற்றில் கவேரிபூம்பட்டிணம் அப்படின்னு கேட்டா முதல்ல நினைவுக்கு வர்றது நாளங்காடி அப்புறம் சதுக்க பூதம் சிலை.


சதுக்க பூதத்தை சாட்சியா வச்சிக்கிட்டு பொய் சொன்னா, அந்த பூதம் தண்டனை தரும் அப்படிங்கிறது அந்த கால மக்களோட நம்பிக்கை.


சதுக்க பூதத்தை பற்றி எனக்கு தெரிந்த கதை,,


விவசாயி ஒருவர் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. கள்வர்களின் தொந்தரவு அதிகம் இருந்ததால் தன்னிடம் உள்ள 100 பொற்காசுகளை தன் நண்பரிடம் கொடுத்து விட்டு, திரும்ப வந்து பெற்று கொள்கிறேன் என கூறி சென்றார்.


ஊர் திரும்பிய பிறகு, நண்பரை பொது இடத்தில் சந்தித்தார், பயணம் குறித்து இருவரும் பேசிக்கொண்டுயிருந்தார்கள், நண்பராக பொற்காசுகளை தருவார், நாம் கேட்டால் மரியாதையாக இருக்காது என விவசாயி ஏதும் கேட்க்காமல் வீடு திரும்பி விட்டார்.


நண்பர் பொற்காசுகளை பற்றி மூச்சு விடவில்லை, நாட்கள் சென்றது, விவசாயி வேறுவழி இல்லாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.


"ஏனப்பா என் பொற்காசுகளை எப்போது கொண்டு வந்து தருவாய்" என விவசாயி கேட்டார்.


"நான் பொது இடத்தில வைத்து சந்தித்த பொழுதே அதை கொடுத்து விட்டேனே" என்றார் நண்பர்.


இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஊர் சபைக்கு இந்த வழக்கை எடுத்து சென்றனர்.


ஊர் சபையினரால் ஒரு முடிவுக்கு வர  முடியவில்லை.


நீங்கள் இருவரும் சதுக்க பூதத்தை சாட்சியாக வைத்து உங்கள் தரப்பு நியாங்களை கூறுங்கள், பொய் சொல்பவர்களை அந்த பூதமே தண்டிக்கட்டும் என்றனர்.


சதுக்க பூதத்தின் முன்னிலையில்  முதலில் விவசாயி, நண்பர் 100 பொற்காசுகளை தரவில்லை என்றார்.


நண்பர் கையில் ஓரூ தடி வைத்திருந்தார், அதை விவசாயிடம் கொடுத்துவிட்டு, நான் 100 பொற்காசுகளை விவசாயிடம் கொடுத்து விட்டேன் என்று கூறிவிட்டு கைதடியை வாங்கிக்கொண்டார்.  


பொய் சொன்னவரை சதுக்க பூதம் தண்டிக்கும், சபை நாளை கூடி விசாரிக்கும் என்று ஊர் சபை களைந்து விட்டது.


மறுநாள் இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சதுக்க பூதம் பொய் சொன்னவரை தண்டீத்திருக்க வேண்டுமே, ஒன்றும் ஆகவில்லையே என ஊர் சபை வியந்தது. 


நண்பர் வைத்திருந்த கைதடியை சந்தேகப்பட்டு உடைத்து பார்த்த பொழுது, அதில் 100 பொற்காசுகள் ஒழித்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைத்தது.  

 
அதேப்படி ஒரு சிலை தண்டனை தரும், வேற எந்த நாட்டிலையாவது இப்படி டுபாக்கூர் கதை விடுவாங்களா நம்ம தமிழ் நாட்லதான்யா லாஜிக்கே இல்லாமா கதை சொல்லுவாங்க அப்படின்னு அந்த மாதிரி கதைகள கிண்டல் பண்ணி மறக்க ஆரம்பிச்சிட்டோம்.....


இத்தாலி தலைநகர் ரோம்லையும் இதே மாதிரி ஒரு சிலை இருக்கு, அதன் பெயர் "போக்க டெல் வெரிட்டா" (உண்மையின் வாய்).  



இந்த சிலை ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்டுகிறது...


இந்த சிலையின் வாயில் கை வைத்து உண்மை பேச வேண்டும், பொய் சொன்னால் அந்த சிலை கையை கடித்து விடும் என்பது நம்பிக்கை.


இங்கேயும் ஒரு சுவாரசியமான கதை இருக்கு,,,,


ஒரு கணவனுக்கு தன் மனைவி இன்னொரு ஆடவனுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என சந்தேகம் வந்தது.


மனைவியை சிலையின் வாயில் கை வைத்து நிரூபிக்க சொன்னான்.
மனைவி சிலையின் வாயில் கை வைக்கும் பொழுது, அங்கு அமர்ந்திருந்த ஒரு பிச்சைகாரன் மனைவிக்கு முத்தம் குடுத்துவிட்டு வேகமாக ஓடி விட்டேன். அருகில் இருந்தவர்கள் அவனை துரத்திச்சென்றனர்.


இந்த நேரத்தில் மனைவி, சிலையின் வாயில் கையை வைத்து, "இது வரையில் எனக்கு என் கணவன் மற்றும் அந்த பிச்சைக்காரன் மட்டுமே முத்தம் கொடுத்திருக்கிறார்கள்" என்றாள்.


அவள் கைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. கணவனுக்கு ஒரே ஆச்சர்யம்..


இந்நிலையில் அந்த பிச்சைகாரனை துரத்தி சென்றவர்கள், அவனை பிடித்து விசாரித்த பொழுது தான் தெரிந்து, அவன் தான் அந்த மனைவியின் காதலின் என்றும், அவளை காக்கவே பிச்சைகாரன் வேடம் போட்டு உக்காந்திருந்தான் என்று.


இன்று ரோமில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசயில் நின்று அந்த சிலையை பார்கிறார்கள். வரலாற்றை அறிந்து வியக்கின்றார்கள்.


நம்மிடையே இதே போல் ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு, வரலாறு உண்டு. நாமே நம்மை மறந்து விட்டோம், மற்ற நாட்டவர்களுக்கு எங்கிருந்து சொல்ல............... 


இனிமேல் சொல்ல முயற்சிப்போம், வருங்காலத்திற்கு எடுத்து சொல்வோம்.


பின்குறிப்பு : அந்த சிலையை பார்த்து வருத்தத்தில் எழுதிய பதிவே இது..........

- மகேஷ் பிரபு விஜயராஜ் 




After a short Break

ஒரு பதிவு போட்டு ரெம்ப நாளாச்சு,,,,


 நான் ரெம்ப பிஸி அப்படின்னு சொன்னா இந்த உலகம்............

                       




உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது......


நான் மறுபடியும் ஆட்டத்துக்குள்ள வந்துட்டேன், 


அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம்...

- மகேஷ் பிரபு விஜயராஜ்