புதன், 29 அக்டோபர், 2014

சென்னை to தூத்துக்குடி

 எந்த வருஷ தீபாவளிக்கு இல்லாத சிறப்பு இந்த வருஷ தீபாவளிக்கு உண்டு. அது என்னானு கேக்குறீங்களா....

 

+2 முடிச்சிட்டு, காலேஜ், வேலைன்னு வெளியூர் வந்ததுக்கு அப்புறம் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஊருக்கு போறதுக்குள்ள நொந்து நூடுல்ஸ் ஆகிருவேன்.

 

ஒன்னு டிக்கெட் புக் பண்றதுல ஏகப்பட்ட போராட்டம் நடக்கும், இல்ல டிக்கெட் புக் பண்ணாம டிராவல்ல போராட்டம், ரெண்டும் இல்லைனா டிக்கெட் புக் பண்ணியும் டிராவல்ல போராட்டம், இப்படி ஏதாவது காமெடி நடக்கும்.

 

ஒரு கொசுவத்தி சுருள் பத்தவச்சிகோங்க...................

 

இப்படிதான் 2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ட்ரைன்ல டிக்கெட் புக் பண்ணன கூத்த கேளுங்க.............

 

அந்த வருஷம் தீபாவளி வியாழகிழமைனு நினைக்கிறன். செவ்வாய்கிழமை நைட் தூத்துக்குடிக்கு கிளம்புற முத்து நகர் அதிவிரைவு வண்டில (22 இல்ல 23 ஸ்டாப்ன்னு நினைக்றேன்)  டிக்கெட் புக் பண்ணறதுக்கு 60 நாளை குத்து மதிப்பா கணக்கு போட்டுக்கிட்டு அதுக்கு முத நாள் அலாரம் வச்சிட்டு படுத்தேன்.

 

எத்தன மணிக்கு அலாரம் வச்சேன் தெரியுமா காலைல 7 மணிக்கு. நான் தங்கி இருந்த வீட்ல இருந்து St. தாமஸ் மௌண்ட் ரயில்வே புக்கிங் ஸ்டேஷன் 100 மீ தான் இருக்கும்.

 

குளிக்காம கொள்ளாம ஸ்டேஷன் போனா எனக்கு முன்னாடி ஒரு 30 பேரு நின்னாங்க. Q-ல வெயிட் பண்ணி டிக்கட் புக் பண்ணிட்டு வந்தாச்சு.

 

தீபாவளி வியாழகிழமைங்கிறதால ஊருக்கு போறவைங்க செவ்வாய் அல்லது புதன்கிழமை போவாங்க, ஆனா திரும்பி வரவிங்க எல்லாம் ஞாயிற்றுகிழமை தான் வருவாங்கன்னு ப்ரில்லியண்டா (?????) யோசிச்சி காலைல 5:30க்கே ஸ்டேஷன் போனேன்.

 

 அங்க போனா எனக்கு முன்னாடி சுமார் ஒரு 90 பேரு நின்னுகிட்டு இருந்தாங்க, தம் கட்டி எண்ணுனோம்ல, 8 மணி வரைக்கும் பொழுது போக வேற வழி. அதுல ரெண்டு தெரிஞ்ச மூஞ்சி இருந்தது.

 ஒருத்தன் 10 வது ஆளா நின்னுகிட்டு இருந்தான், இருத்தன் 18 வது ஆளா நின்னுகிட்டு இருந்தான். ரெண்டு பெரும் ஒரே ரூம் தான்.

 

 

 

 

எதுக்கு ரெண்டு பேரும் புக் பண்ண வந்தாங்கன்னா ரெண்டு பேரும் வேற வேற ஊர். ஒருத்தரே 2 form குடுக்கலாம் சில சமயம் புக் பண்ற அதிகாரி ஸ்ட்ரிக்டா இருந்தார்னா ஒரு formக்கு மேல வாங்க மாட்டார். அதனால ஒருத்தன் பின்னாடி ஒருத்தன் வந்து இருக்காங்க.

 

விடாபிடியாக ரெண்டரை மணி நேரத்தை தள்ளின பிறகு, புக்கிங் ஆரம்பிச்சது.....

 

கவுன்ட்-டான் ஸ்டார்ட்ஸ்....

 

நல்லவேளையா, 10 வது ஆளா நின்ன நண்பன்கிட்டயே 2 formயும் வாங்கிட்டாரு, அதனால நான் 18 வது ஆளா நின்ன நண்பன் இடத்தில போய் நின்னுட்டேன்.

 

என்னோட முறை வரப்போ 8:21am (இன்னும் நல்ல நியாபகம் இருக்குது),

 

புக்கிங் கிளார்க் டொங்கடி டொங்கடி எங்க பேர் ஊர் எல்லாம் அடிச்சார்,

அது என்ன மாயமோ தெரியல, என்ன மந்திரமோ தெரியல, ஊரெல்லாம் விண்டோஸ் 7, 8, 8.1, XP என்னென்னமோ வந்தாலும் கூட இன்னும் ரயில்வே ரிசர்வேசன் மட்டும் DOS-MODE ல தான் ஆபரேட் ஆகிட்டு இருக்குது... 

 

டிக்கட் வெயிட்டிங் லிஸ்ட் 17ல இருக்கு புக் பண்ணவானு கேட்டார்.

 

உடனே, நான் புக் பண்ணுங்கனு சொன்னேன்.

 

பிரிண்ட்டான டிக்கட்ல பார்த்தா வெயிட்டிங் லிஸ்ட் 23. 

 

அவர் கேட்டதுக்கும், நான் புக் பண்ணுங்க சொன்னதுக்கும் நடுவில அரை  செகண்ட் ஆகிருக்குமாங்க ?

 

அந்த கேப்ல 6 பேர் உள்ள புகுந்திருக்காங்க..........  

 

எனக்கு அப்பவோ கண்ண கட்டிருச்சி....................             

 

அன்னிக்கு சாயங்காலம் மாலை மலர்ல, சென்னை எக்மோரில் முதல் டிக்கட் வாங்கிய 2 பெண்மணின்னு பேட்டி போட்டோவோட வந்திருந்தது.

 

எனக்கு சத்தியமா மன்னன் படம் நியாபகம் வரலைங்கோ சொன்னா நீங்க நம்பவா போறீங்க............

 

      

டிஸ்கி : என்னடா அந்த சிறப்ப சொல்லவே இல்லைங்றீங்களா,

இந்த வருஷம் தீபாவளிக்கு டிக்கட் புக் பண்ண வேண்டிய அவசியம் இல்லாம போச்சு, ஏன்னா தீபாவளி நேரத்தில இத்தாலில மாட்டிகிட்டேன்......

 

2 கருத்துகள்: