வெள்ளி, 27 ஜூன், 2014

மெட்ரிக் யூனிட் சிஸ்டம்

நண்பர்கள் அனைவரும் மெட்ரிக் யூனிட் (Metric Unit) சிஸ்டம் பற்றி கேள்வி பட்டிருப்பிர்கள்.

உதாரணமாக, நீளம் மற்றும் உயரத்தை மீட்டர் கணக்கில் அளப்பது.


உலகில் அனைத்து நாடுகளும் இந்த முறையை பயன்படுத்தும் பொழுது மூன்று நாடுகள் மட்டும் பிடிவாதமாய் பயன்படுத்தாமல் இருக்கிறது.
அவை எந்த நாடுகள் என தெரிந்தால் ஆச்சர்யபடுவீர்கள்.

1. ஐக்கிய அமெரிக்க இராச்சியம் (United States of America)     
2. பர்மா (அ) மியன்மார் (Burma)
3. லிபீரியா (Liberia)



படம் - இணையத்திலிருந்து 



திங்கள், 16 ஜூன், 2014

இது எப்புடி இருக்கு

இது எப்புடி இருக்கு, பாருங்களேன்...........

இடம் : பாரிஸ் நகரில் ஒரு பூங்கா....




மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு இந்தியர்கள் புல்வெளியில் அமர்ந்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். 


ஒருவர் ஆஷிஷ், பீகாரை சேர்ந்தவர், இன்னொருவர் நம்ம ஊர் சிங்க குட்டி ஆனந்த்.


இருவரும் மூன்று மாத காலத்திற்கு, பாரீஸில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

இவர்களின் உரையாடல்களை ரெம்ப நேரம் கவனித்து கொண்டிருந்த ஒரு பாகிஸ்தானியர் இவர்களை அணுகினார். அறிமுக படலம் முடிந்ததும், நம்ம ஆனந்தை பார்த்து, நீ தமிழ் நாட்டை சேர்ந்தவனா என கேட்டார்....


ஆனந்துக்கு ஆச்சர்யம் தாளவில்லை, வாய்விட்டே கேட்டுவிட்டார் எப்படி கண்டுபிடித்தார் என்று.


அதற்கு அந்த பாகிஸ்தானியர், "இரண்டு இந்தியர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தால், அதில் ஒருவர் கட்டாயமாக தமிழ் நாட்டை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும், ஸ்கின் கலரை வைத்து ஆனந்த் தமிழராக இருக்கலாம் என கணித்தேன்", என்றார்.


இது எப்புடி இருக்கு........



தமிழ், தமிழ் என பேசி தேசிய நிரோட்டத்தில் கலக்காமல் விட்டு விட்டோம், கொஞ்சமாவது ஹிந்தியை கற்று இருந்திருக்கலாம். தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய நிலைமை வந்தால் தடுமாற வேண்டிய அவசியமில்லை.

ஒரு காலத்தில் எதற்கு ஹிந்தி, ஏன் ஹிந்தி, வேனும்னா அவங்கள தமிழ் கத்துக்க சொல்லு என்று வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் வாய் சவடால் விட்டு இருக்கிறேன். 

இப்பொழுது ஆத்தா ஹய், தாத்தா ஹய் என டெல்லி வீதியில் காமெடி பண்ணிக்கிட்டு இருக்கிறேன். நான் டைலாக் விட்டவன் எல்லாம் திருப்பி என்னை கலாய்க்குறாங்க... 

சும்மாவா சொன்னங்க பட்டால் தான் நமக்கு புரியும் என்று........  

இப்போ எனக்கு புரிஞ்சிருச்சி, நீங்க இன்னா சொல்றீங்க பாஸ்...    


டிஸ்கி : என் நண்பர் ஒருவருக்கு அயல்நாட்டில் ஏற்பட்ட அனுபவத்தோடு, என் புலம்பல்களையும் மிக்ஸ் பண்ணி ஒரு பதிவு ஆக்கியாச்சு ..... 

புதன், 11 ஜூன், 2014

தலையின் மேல் விதி - 2


இந்த பதிவின் முந்தைய அத்தியாயைத்தை படிக்க இந்த சுட்டியை சொடுக்கவும்



இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டெல்லி உயர் நிதிமன்ற நிதிபதி ரமேஷ் சந்திரா லகோடி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்க பட்டது.

இரண்டு விமான உடைபாடுகளுக்கு நடுவில் கண்டு எடுக்க பட்ட கருப்பு பெட்டியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், கஜகஸ்தான் விமானி கன்ட்ரோல் டவரின் அதிகாரியின் தரை இறங்குதல் அறிவுரைகளை முழுவதுமாக பின்பற்றாது தான் விமான விபத்திற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.

இந்த விபத்திற்கு மேலும் சில காரணங்கள் கண்டறியப்பட்டது, அவை,

1. நிறைய கஜகஸ்தான் விமானிகள் ஆங்கில உரையாடல்களில் நன்கு  தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தார்கள், அதனால் அவர்கள் கன்ட்ரோல் டவருடன் நடைபெறும் உரையாடலுக்கு ரேடியோ ஆப்பரேட்டர்களையே பெரிதும் நம்பி இருக்க வேண்டி இருந்தது. ரேடியோ ஆப்பரேட்டர்களுக்கென்று தனியாக கருவிகள் கிடையாது, தேவை என்றால் விமானியின் கருவியை தான் ரேடியோ ஆப்பரேட்டர் பார்த்துக்கொள்ளலாம், அதனால் எப்பொழுதும் கன்ட்ரோல் டவர் உரையாடலுக்கும், விமானியின்  செயல்பாட்டுக்கும் சிறுது நேர இடைவெளி இருக்கும். 

 2. பொதுவாக விமானங்களில் FPS யூனிட் சிஸ்டம் பின்பற்றபடும் (உயரம், 'அடி' கனக்கில் அளவிடப்படும்), அனால் ஜகஸ்தான் விமானங்களில் உள்ள கருவிகளில் மெட்ரிக் (Metric) யூனிட் சிஸ்டம் பின்பற்றபடுகிறது (உயரம், 'மீட்டர்' கனக்கில் அளவிடப்படும்). 

3. புது டெல்லி விமான நிலையத்திற்கு பல காற்றுப்பாதைகள் (Airway) இருந்தாலும், அதில் ஒரு பாதை மட்டுமே வர்த்தக போக்குவரத்துக்காக   பயன்படுத்தப்பட்டது, மற்ற பாதைகள் வான்பாதுகாப்பு படை வசம் இருந்தது. இதனால் ஒரே காற்று பாதையில் தான் விமான நிலையத்திற்கும் உள்ளே வரும் விமானமும் வெளியே போகும் விமானமும் பயன்படுத்த வேண்டும்.   

4. விபத்து நடந்த பொழுது, புது டெல்லி விமான நிலையத்தில் முதல்  கட்ட  கண்காணிப்பு ராடார் மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. இந்த ராடார்  உதவியால்  விமானம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே கண்டறியலாம் இரண்டாம் கட்ட கண்காணிப்பு  ராடார் இல்லாததால் விமானத்தின் உயரத்தை கண்டறிய முடியாது.          

இப்படியாக வரிசையாக காரணங்களை அடுக்கியது விசாரணை அறிக்கை, மேலும் சில அறிவுரைகளை வழங்கியது, அவை,

1. புது டெல்லி விமான நிலையத்திற்கு உள்ளே வரும் விமானத்திற்கும், வெளியே போகும்   விமானத்திற்கும் தனி தனி காற்றுப்பதை (Airway) அமைக்கவேண்டும்.

2. விமான நிலையத்தின் சுற்றுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும்  விமானங்களின் உயரத்தை அளவிட, இரண்டாம் கட்ட கண்காணிப்பு  ராடார் நிறுவப்பட வேண்டும்.

3. மோதல் தவிர்ப்பு இயந்திரம் (TCAS - Traffic Collision Avoidance System)அனைத்து விமானத்திலும் நிறுவப்பட வேண்டும். இந்த இயந்திரம் விமானத்தை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை உள்ள விமானம் குறித்து தகவல்களை அளிக்கும். 

இரு விமானத்தில் உள்ள பயணிகள் தங்களது விலைமதிப்பில்லா உயிரை கொடுத்து, மேல கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 



மலேசிய விமான விபத்திற்க்கு கூட இதே போல் எதோ காரணம் இருக்கும், அது என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், வருங்காலத்தில் விபத்தில்ல பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

வந்தபின் சிகிச்சை என்பதை விட வரும்முன் காப்போம் என்பது சாலச்சிறந்தது....

தலையின் மேல் விதி - 1

MH-370, மலேசியன் விமானம் மனிதர்களின் கண்களில் இருந்து காணாமல் போய் மூன்று மாதத்திற்கு மேலாகியும் இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது.


தொழில்நுட்பங்களில் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும், வரலாறு நமக்கு சொல்வது, தவறுகளில் இருந்துதான் பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம், அதற்கு விலையாக, விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலி ஆகின்றது.


நாம் இன்று அனுபவிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், யாரோ ஒரு சக மனிதனின் அனுபவித்த வலியின் பலன் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு உதாரணமாக ஜர்க்கி-தத்ரி (Charkhi-Dadri) விமான விபத்தை எடுத்துக்கு கொள்ளலாம்.


வலைதளத்தில் மேய்ந்த பொழுது இந்த விபத்தை பற்றி படிக்க நேர்ந்தது, அது உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்களுக்கு இதே எண்ணம் ஏற்பட்டால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.


1996 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 12ந் தேதி மாலை 6:40 மணிக்கு டெல்லிக்கு அருகில் ஜர்க்கி-தத்ரி (Charkhi-Dadri), ஹரியானா மாநிலத்தில், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 747-168B மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் llyushin II-76TD (தமிழாக்கம் கண்ணை கட்டியதால் ஆங்கிலத்தில் விட்டு விட்டேன்) இரண்டும் ஆகாயத்தில் மோதி விபத்துக்குள்ளனது.    
      
சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், புது டெல்லியில் இருந்து டெஹ்ரானுக்கு (சவுதி அரேபியா) 289 பயணிகள் + 23 விமான பணியாளர்களுடன் மாலை 6:32 மணிக்கு கிளம்பியது.





அதே நேரத்தில் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் Shymkentயில் (கஜகஸ்தான்) இருந்து புது டெல்லியிலக்கு  27 பயணிகள் + 10 விமான பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது.

      

கன்ட்ரோல் டவரின் அதிகாரி, கஜகஸ்தான் விமானத்தை, புது டெல்லி விமான நிலையம் அடைய சுமார் 117 கி.மீ. தூரம் இருக்கும் பொழுது பறத்தலை 15000 அடிக்கு குறைத்து அந்த உயரத்திலே பறக்க சொன்னார், ஏனென்றால் அதே காற்றுபாதையில் (Airway) சவுதி அரேபியன் விமானம் 14000 அடி உயரத்தில் கஜகஸ்தான் விமானத்திற்கு எதிர் திசையில் பறந்து வந்து கொண்டு இருந்தது. இரு விமானங்களும் ஒன்றை ஒன்று கடக்கும் பொழுது செங்குத்தாக 1000 அடி உயர வித்தியாசம் இருக்கும் என்பது கணிப்பு.

எட்டு நிமிடங்கள் பிறகு,

ராடார் அதிகாரிக்கும், கஜகஸ்தான் விமான ரேடியோ ஆப்பரேட்டருக்கும் நடந்த உரையாடல்...

"ராஜர், விமானம் 15000 அடி உயரத்திற்கு வந்து விட்டது", கஜகஸ்தான் விமான ரேடியோ ஆப்பரேட்டர்.

"ராஜர், விமான உயரத்தை 15000 அடி உயர்த்தில் பறத்தலை மேற்கொள்ளுங்கள், நேர் எதிரில், 14000 அடி உயரத்தில் சவுதி போயிங் 14 மையில் தூரத்தில் வந்து கொண்டு இருக்கிறது", டவர் அதிகாரி.

அனால் அப்பொழுது கஜகஸ்தான் விமானம் 14500 அடியில் இருந்தது, அது மேலும் மேலும் கிழே இறங்கி கொண்டு இருந்தது.    

"ராஜர், எவ்வளவு தூரம்", ரேடியோ ஆப்பரேட்டர்.

"ராஜர், 14 மையில்", டவர் அதிகாரி.

விமானத்தில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

"ராஜர், 13 மையில், உயரம் 14000 அடி", டவர் அதிகாரி.  

"ராஜர்", ரேடியோ ஆப்பரேட்டர்.

மோதலுக்கு 38 நொடிகளுக்கு முன்பு,

"ராஜர், 8 மையில் தூரத்தில் போயிங் விமானம் உள்ளது", டவர் அதிகாரி.  

மோதலுக்கு 25 நொடிகளுக்கு முன்பு ரேடியோ ஆப்பரேட்டர், உயரம் காட்டும் கருவியை பார்த்தார் (அவருக்கென்று தனியாக கருவிகள் கிடையாது, அவரின் பணி ரேடியோ தொடர்பு மட்டுமே, தேவை என்றால் விமானியின் கருவியை தான் பார்த்துக்கொள்ளலாம்).

உயரத்தை 15000 அடிக்கு உயர்த்துங்கள் என விமானியிடம் கூறினார், விமானி உயரத்தை கூட்டும் லிவரை உபயோகித்தார். விமானம் மேல் எழும்பத்தொடங்கியது.  

இந்த நேரத்தில் கஜகஸ்தான் விமானம், சவுதி விமானத்தை விட கொஞ்சம் தாழ்வாக எதிர் திசையில் பறந்து வந்து கொண்டு இருந்தது.     




மேல் எழும்பிய கஜகஸ்தான் விமானத்தின் வால் பகுதி, போயிங்ன் இடது புற இறக்கையை வெட்டுவது போல் போய் இடித்தது, மற்றும் Horizontal Stabilizer (கிடைமட்ட நிலைபடுத்தி - தமிழ் மொழிபெயர்ப்பு கூகிள் உதவியுடன்) பகுதியையும் இடித்தது.




போயிங் இடது புற இறக்கையில் தீ பிடித்து எரிந்தது, நிலை குலைந்து சுழன்றபடியே, தரையை 1134 கி.மீ. வேகத்தில் நோக்கி சென்றது. இந்த வேகத்தில் தரையை நோக்கி சென்றதால், காற்றின் அழுத்தத்தால் விமானம் தரையில் விழும் முன்பே துண்டு துண்டாக உடைந்தது. விமானத்தில் உள்ள அனைவரும் கொல்லப்பட்டனர்.



கஜகஸ்தான் விமானம் பெரிதாக நிலை குலையவில்லை என்றாலும் கட்டுப்பாடு இழந்து வேகமாக தரையில் மோதி வெடித்தது. இந்த விமானத்தில் இருந்து நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், சிகிச்சை பலனின்றி அவர்களும் இறந்தார்கள்.

கஜகஸ்தான் விமானம் அதே உயரத்தில் பறந்திருந்தால் கூட, சவுதி விமானத்திற்கு அடியில் பறந்திருக்கும், இந்த விபத்தும் தவிர்க்கபட்டிருக்கும். 

கஜகஸ்தான் விமானம், சவுதி விமானத்தை இடிப்பதற்காகவே உயரந்தது போல் ஆகி விட்டது. 

சவுதி விமானம் தாணி  (Dhani Village, Bhiwani District) என்னும் இடத்தில் விழுந்தது. இது ஜர்க்கி-தத்ரியிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கஜகஸ்தான் விமானம், பிரோகர் (Birohar Village, Rohtak District) என்னும் இடத்தில் விழுந்து. இது ஜர்க்கி-தத்ரியிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது.     

இரு விமானங்களும் 70 கி.மீ. இடைவெளி தூரத்தில் தரையில் விழுந்துள்ளது. 


பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், இதன் முடிவு அடுத்த பதிவில் வரும்.............



டிஸ்கி - 1 : இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் 
விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது..  

டிஸ்கி - 2 : விமானத்தை பற்றி ஏதும் தெரியாமல் இருந்த எனக்கு ஆர்வம் உண்டாக்கியது விறுவிறுப்பு.காமில் திரு. ரிஷி அவர்கள் எழுதும் விமான சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தான்.