சனி, 30 நவம்பர், 2013

கர்நாடகா ஸ்பெஷல்

யாரோ எவரோ எங்கோ (கர்நாடகாவில் தான்) எடுத்த படங்கள் 


Liquid Teaயாம், மத்த கடைல கட்டியாவா (Solid ) தர்றாங்க 



நான் நடந்தா, இவனும் நடக்கிறான், நான் நின்னா இவனும் நிக்கிறான்,   இப்போ நடக்கிறதா, நிக்கிறதா தெரியலையே டா. Traffic Policeக்கு நல்ல வருமானம்.


கடைசி வரைக்கும் கமல் மாதிரி புரியாம பேசுறீங்களே டா.




அப்படியே அந்த லீவ் நாள் அன்னிக்கு ஸ்ரீதேவி கிட்ட இங்கிலீஷ் படிங்க டா அப்ப்ரசெண்டிஸ் பசங்கள.


                                        

இவங்களையும் கூட்டிக்கிட்டு போங்க பாஸ்.


இந்தியால இத்தாலில எழுதி இருக்கீங்களே

சிகப்பு லைன், பட்டய கிளப்படீங்க போங்க. இனிமே எல்லா புருஷனுக்கும் ஜாலிதான்.
நிசமாத்தான் சொல்றியா ???


இன்னுமாட நீங்க திருந்தல !!!


புதன், 20 நவம்பர், 2013

மரண பயம்


பிரிட்டிஷ் அரச வம்சத்தைப் பற்றிப் படித்தபோது கண்ணில்பட்ட சுவாரஸ்யமான விஷயம். 

1653-இல் முதலாம் சார்லஸ் அரசனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்ய உத்தரவிட்டுவிட்டு, "மக்களின் பாதுகாப்பாளன்' என்ற பெயரோடு தடபுடலாகப் பதவியேற்ற கிராம்வெல் ஐந்து வருடமே ஆண்டுவிட்டுப் பிராணனை விட்டதும் மறுபடி முடியாட்சி. 

பதவியேற்ற இரண்டாம் சார்லஸ் மன்னன் செய்த முதல் காரியம் கிராம்வெல்லின் எலும்புகளைத் தோண்டி எடுத்து சம்பிரதாயமாக அவருக்கு மரண தண்டனை விதித்து அந்த எலும்புகளைக் கொண்டு அதை நிறைவேற்றியது.

 அதன் பின் பிராண பயம் பிரிட்டிஷ் அரசர்களையும் அரசிகளையும் தொடர்ந்து வந்திருக்கிறது. இன்னும் இங்கிலாந்து பாராளுமன்றத்தைத் தொடங்கி வைத்துப் பேருரையாற்ற ராணியம்மா அங்கே போகும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரைப் பிணைக் கைதியாகப் பிடித்து வைத்திருந்து, அரசியார் பத்திரமாகத் திரும்பிப் போனதும் விடுவிக்கும் பழக்கம் இருக்கிறதாம்! 



உசுரோட இன்னைக்கு வீட்டுக்கு போகமுடியுமா மை லார்ட் 


கிரேட் எஸ்கேப், முப்பாஸ், ஐ யாம் வெரி ஹாப்பி !!!

செவ்வாய், 19 நவம்பர், 2013

டெல்லி - இதுவும் நம்ம மண்ணுதான் - 1


டெல்லி எல்லா இந்தியர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் இடம். டெல்லிக்கு நிகராக நம் தாய் திருநாட்டில் பல நகரங்கள் இருந்தும், டெல்லி எப்படி தலைநகரானது. நம்மில் பலர் டெல்லி தெருக்களில் நடமாடி இருக்கலாம், இந்த கேள்வி உதித்திருக்கலாம். அப்படி தேடியதின் விளைவே இந்த முயற்சி.

டெல்லி என்றால் நம் நினைவுக்கு வருவது,



                                   பாராளுமன்றம் (நம்ம மொபைல்ல எடுத்தது),


                 ஜனாதிபதி மாளிகை (ஒளி உபயம் - எங்கள் சத்தியராஜ்),


                                          சுப்ரீம் கோர்ட் - இணையத்தில் சுட்டது



மவுன சாமியார், சிரிப்பு சூப்பர் ஸ்டார் மன்மோகன் சிங் - இணையத்தில் சுட்டது

டெல்லியின் வரலாற்றை தெரிந்து கொள்ள நாம் 3000 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

(என்ன தசாவதாரம் கமல்னு நினைப்போ,  அடிங் கொய்யாலே !!!
என்னங்கன்ன  பண்றது, மொக்கை போட்டே காலத்தை ஒட்டியாச்சு).

இந்த 3000 ஆண்டுகளில் டெல்லியை போல் ஏற்றமும் தாழ்வும் அடைந்த இடம் ஏதுமில்லை எனலாம். டெல்லி என்பது வெறும் மக்கள் வாழ்ந்த, வாழுகின்ற இடம் மட்டுமில்லை, இது மன்னர்களின் நகரம்.

இது நகரத்தின் நகரம். இது ஏழு நகரங்கள் கொண்டது (பதினைந்து நகரம் உள்ளது என்றும் சிலர் கூறுவர்). இந்தியாவின் மீது காதல் கொண்ட பல அயல் தேசத்து மன்னர்கள், போர் நடத்தி கைப்பற்றியது இந்த இடத்தை தான். கபடி ஆடியதும் இங்கேதான்.


Flashback-1

1450 B.C., மகாபாரதத்தில் பாண்டவர்கள் - கெளரவர்கள் இடையே நடந்த உரசல்களை தடுக்க, பாண்டவர்களை ஹஸ்தினபுரத்தில் இருந்து காண்டவபிரஸ்தம் எனும் இடத்திற்கு திருதாஷ்டிரன் அனுப்பி வைத்தார். காண்டவபிரஸ்தம் வனங்களுக்கு நடுவில் பாழடைந்து, மனிதர்கள் வசிக்க இயலாத இடமாக இருந்தது. தர்மர் தன் தம்பிகளை அழைத்துச் சென்றார், கண்ணபிரானும் உடன் சென்றார். அவர் தேவலோக சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து, இந்த காட்டை அழித்து, மூவுலகிலும் எங்கும் இது வரை இல்லாதபடி ஒரு அழகிய நகரை நிர்மாணிக்கச் சொன்னார். தேவலோக அதிபதி இந்திரனை மேற்பார்வை பார்க்கச் சொன்னார். தேவலோகத்தையும் மிஞ்சும் அழகில் அமைந்த அந்த நகரத்திற்கு இந்திரனின் நினைவாக  இந்திரபிரஸ்தம் என பெயர் வைத்தார் (இதே பெயரில் இன்றளவும் டெல்லியில் ஒரு இடம் உள்ளது). யமுனை ஆறு இந்த இடத்தின் கிழக்கில் இரண்டு கீ.மீ. தூரத்தில், வடக்கிலுருந்து தெற்கு மார்க்கமாக பாய்கிறது. இந்த இடத்தின் செழிப்பை கண்டு மக்கள் இங்கு குடி ஏறினர். பாலாறும் தேனாறும் ஓடியது(?). இது தனி நாடு ஆனது. பிறகுதான் சூது - நாடிலந்தது - வனவாசம் - குருஷேத்திர போர். மகாபாரத போரின் வெற்றிக்கு பிறகு, தர்மர் ஹஸ்தினாபுரம் சென்று விட்டார். அர்ஜுனனின் வாரிசுகளே சில காலம் ஆண்டு வந்தனர். அதன் பிறகு இந்திரபிரஸ்தம் என்ன ஆனது. அதை ஆண்ட மன்னர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கான காலச்சுவடுகள் இல்லை.

தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கணிப்புப்படி, கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே அங்கு நகரம் இருந்தது என்றும், அது ஹுமாயுன் சமாதி (Tomb) மற்றும் பெரோ ஷா கோட்டைக்கு இடைப்பட்ட இடத்தில் தான் இருந்திருக்க வேண்டும் என்கின்றனர். இன்றைய இந்திரபிரஸ்தம் என்று அழைக்க படும் இடம் தான் அது என நம்பப்டுகிறது.

கிறிஸ்து பிறப்பிற்க்கு முந்தைய கிரேக்க பயணதுறவிகள் நீயர்ச்சுஸ் (Nearchus), மெகஸ்தீநீஸ் (Megasthense) மற்றும்  அவர்களுக்கு அடுத்து இந்திய வந்த சீன பயணதுறவிகள் பா ஹியான் (Fa Hian), ஹீயுன் டசங் (Hiuen Tsang) இந்திரபிரஸ்தத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஹீயுன் டசங், டெல்லியை சுற்றி உள்ள ஏறக்குறைய முக்கியமான ஊர்களை பற்றி குறிப்பிட்டு உள்ளார். அவர்கள் காலத்தில் இந்திரபிரஸ்தம் எனும் நகரம் அழிந்து மறைந்து இருக்கலாம் என நாம் நம்பலாம். முதலாம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவை  சேர்ந்த படோல்மி (Ptolemy)எனும் புவியல் வல்லுநர் இந்திரபிரஸ்தத்திற்கு பத்து கீ.மீ. தொலைவில் தற்போதைய குதீப் மற்றும் துக்ளக்கபாத் இடத்திற்கு நடுவில் 'டைடாலா' எனும் நகரை பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த நகர் 'ராஜா டேலு' எனும் கன்னோஜ் மன்னனால் 57 B.C. ஆம் ஆண்டு உருவாக்க பட்டது. படோல்மி டெல்லியை தான் டைடாலா என குறிப்பிட்டு இருக்கலாம். டைடாலா (டெல்லி) வின் மிச்சங்களோ, அந்த மன்னரை பற்றி குறிப்புகளோ நமக்கு கிடைக்க பெறவில்லை.

                                                                                                                       - தொடரும்

                                                                                 நாங்களும் தொடர் எழுதுவோம்ல

மகேஷ் பிரபு விஜயராஜ்
                                                                                                 

வியாழன், 14 நவம்பர், 2013

தடபுடலும், ஆரவாரமும்

'எதிலும் தடபுடலும், ஆரவாரமும் இருந்தால், அதற்கென்று ஒரு தனிப் பலன் உண்டு. நான் சொல்வதைக் கேட்டு, உண்டா, இல்லையான்னு சொல்லு...' என்ற குறிப்போடு அன்று ஆரம்பித்தார் குப்பண்ணா.
'
நம்ம கொள்கைக்கு எதிராக இருக்கிறதே... மனிதர் என்ன சொல்ல வருகிறார், கேட் போம்...' என, காதைத் தீட்டினேன்.
'
ஒரு இல்லத்தரசி சொன்னதை அப்படியே, அவர் கூறுவது போலவே சொல்கிறேன்...' என்றவர், சொல்ல ஆரம்பித்தார்:
எங்கள் வீட்டுச் சின்னப் பையன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, ஊறுகாய் பாட்டிலை கீழே தள்ளி உடைத்து விட்டான். அடுப்பங்கரை முழுவதும் ஊறுகாய் சிதறியது. உடைந்த கண்ணாடித் துண்டுகள் அங்கும், இங்குமாக இறைந்து கிடந்தன. ஒரே களேபரம். 'ஜாடி தானே உடைந்து விட்டது... பையனுக்கு ஒன்றும் நேரவில்லையே போனால் போகட்டும். நாம் பொறுமையாக இருப்போம் என்று, பையனைக் கடிந்து கொள்ளாமல், மெதுவாக எழுந்து, பையனை அப்புறப்படுத்தப் போனேன்.
என் நிதானத்தைக் கண்டு, என் கணவர், மிகுந்த ஆத்திரத்துடன், 'என்ன... ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொள்கிறாயே...' என்று, எரிந்து விழுந்தார்.
எத்தனையோ முறை, நான் பொறுமையாக நடந்து கொண்டு மிகவும் அவதிப்பட்டிருக்கிறேன். அதன்பின், இப்பொழுதெல்லாம், எதிலும், பொறுமையாக நடக்க வேண்டும் என்று சொல்பவரைக் கண்டால், எனக்குக் கட்டோடு பிடிப்பதில்லை.
எந்தச் சிறு காயத்துக்கும், ஒரு நாடகமாடி விடுவது அல்லது அழுது தீர்த்து விடுவது என்று தீர்மானித்து விட்டேன். 
ஒரு முறை என்னுடைய கைப்பையை எங்கோ தொலைத்து விட்டேன். அது, விலை உயர்ந்த சரக்கு அல்ல. மிஞ்சிப் போனால், 50 ரூபாய் பெறும். இருந்தாலும் என் கணவரிடம் அழுது தீர்த்து விட்டேன். 'நம் லலிதா கல்யாணத்தின் போது (லலிதா அவர் தங்கை) நீங்கள், எனக்கு வாங்கித் தந்தீர்கள். மூன்று வருஷமாகப் பத்திரமாக வைத்திருந்தேன். எவ்வளவுப் பணம் கொடுத்தாலும், அந்தப் பை மாதிரி வருமா...' என்றெல்லாம் முகத்தை சுளித்து, கண்ணீரை வரவழைத்து அழுதேன்.
உடனே அவர், 'ஏன் வீணாக அழுகிறாய்? சாதாரண கைப்பை தானே... இன்னொன்று வாங்கினால் போச்சு...' என்று, என்னை சமாதானம் செய்ய ஆரம்பித்து விட்டார். இருந்தும் நான் விடவில்லை. இன்னம் இரண்டு கேவுக் கேவி, மெதுவாகத் தான் அழுகையை நிறுத்தினேன்.
ஆனால், பையை எங்கோ தவறி வைத்து விட்டேன் என்று கொஞ்சம் நிதானமாக அவரிடம் சொல்லியிருந்தால், பதில் வேறுவிதமாக இருந்திருக்கும். 'நீ எப்போதுமே இப்படித்தான். உனக்குத் துட்டுக் கஷ்டம் கொஞ்சங்கூடத் தெரிவதில்லை. நான் சம்பாதிக்கும் பணமெல்லாம், உன் கைப்பை வாங்கத் தான் காணும்...' என்றெல்லாம், வசைமாரி, பொழிந்திருப்பார். ஆகவே தான், எதிலும் நிதானமாக இருக்க வேண்டாம் என்று சொல்கிறேன்.
ஒரு முறை, அவர் எனக்கு, ஒரு அழகான பிளவுஸ் துணி வாங்கி வந்தார். எப்போதும் தான் இப்படி பிளவுஸ் துணி வாங்கி வருகிறாரே என்று, 'நல்ல துணியாகத் தான் இருக்கிறது...' என்று சொல்லிவிட்டு, என் வேலைகளை பார்க்க போய் விட்டேன்.
அவர் என்ன நினைத்துக் கொண்டாரோ... கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது, 'ஏகப்பட்ட காசு போட்டு, அழகான வெல்வெட் துணி வாங்கி வந்திருக்கிறேன். நல்ல துணியாகத்தான் இருக்கிறது என்று பேசாமல் போகிறாயே... அவ்வளவுதானா...' என்று அங்கலாய்த்துக் கொண்டார்.
ஆனால் நான் மட்டும், 'ஆஹா, எவ்வளவு நல்ல துணி. எங்கே வாங்கினீர்கள்? அழகாக இருக்கிறதே... இவ்வளவு விலை உயர்ந்த துணியை, பணமில்லாத இந்த நாளில் ஏன் வாங்கினீர்கள்... சாதாரண துணி வாங்கியிருந்தால் போதாதா...' என்று, முச்சு விடாமல் அடுக்கிக் கொண்டு ஒரு குதி, ஒரு ஆட்டம், ஒரு நாடகம் ஆடியிருந்தால் சரியாக இருந்திருக்கும் அல்லவா?
அதிலிருந்து, எதற்கும் ஒரு நாடகமாடி விடுவது என்று தீர்மானித்து விட்டேன். இந்த ரகசியத்தை, நான் எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன்.
உங்கள் பக்கத்து வீட்டுக் குழந்தை, கட்டிலிலிருந்து கீழே விழுந்து விட்டது என்று சொல்கின்றனர். உடனே, நீங்கள், 'பரவாயில்லை; நெற்றியில் சற்று வீங்கியிருக்கிறது. வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள்; சரியாகி விடும்...' என்று சாதாரணமாகச் சொல்லுங்கள். சில சமயம், இது விபரீதத்தை விளைவித்து விடும். 'உங்களுக்கென்ன நஷ்டம்... குழந்தை எங்களுடையது தானே...' என்று முகத்தை முறிப்பது போல், பேசி விடுவர். நீங்கள் வருந்த நேரிடும்.
இதற்கு மாறாக, 'ஐயையோ... அடி மிகவும் பலமாகப் பட்டிருக்கிறதோ... ரொம்ப உயரத்தில் இருந்தல்லவா விழுந்திருக்கிறான் குழந்தை... நீங்கள் அவசியம் டாக்டரிடம் எடுத்துக் போங்கள். மண்டையில் அடிபட்டால் ஆபத்து. உடனே, 'ஸ்கேன்' எடுத்துப் பாருங்கள். எதற்கும் கொஞ்சம் ஒத்தடம் கொடுத்து விட்டு, நேராக டாக்டரிடம் போகலாம்... வாருங்கள்...' என்று படபடவென்று உப்பு, புளி, மிளகுடன் நீங்கள் சொல்லியிருந்தால், அவர்களுக்கு மிக ஆறுதலாக இருந்திருக்கும்.
உடனே, அவர்கள், 'பரவாயில்லை. உட்காருங்கள். ஒத்தடம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடும்...' என்று நம்மைச் சமாதானப்படுத்த ஆரம்பித்து விடுவர். இம்மாதிரி மிகைப்படுத்தி கூறுவதை, எல்லாரும் விரும்புகின்றனர். இதை விட்டு சாந்தமாகவும், நிதானமாகவும் நடந்து கொண்டால், நீங்கள் தோல்வியடைய வேண்டியது தான்!
'
இப்படி அந்த மாமி சொல்கிறார். நீ என்ன சொல்றே?' என்ற கேள்வியுடன் முடித்தார்.
நீங்க என்ன சொல்றீங்க


அந்துமணி