செவ்வாய், 19 நவம்பர், 2013

டெல்லி - இதுவும் நம்ம மண்ணுதான் - 1


டெல்லி எல்லா இந்தியர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் இடம். டெல்லிக்கு நிகராக நம் தாய் திருநாட்டில் பல நகரங்கள் இருந்தும், டெல்லி எப்படி தலைநகரானது. நம்மில் பலர் டெல்லி தெருக்களில் நடமாடி இருக்கலாம், இந்த கேள்வி உதித்திருக்கலாம். அப்படி தேடியதின் விளைவே இந்த முயற்சி.

டெல்லி என்றால் நம் நினைவுக்கு வருவது,



                                   பாராளுமன்றம் (நம்ம மொபைல்ல எடுத்தது),


                 ஜனாதிபதி மாளிகை (ஒளி உபயம் - எங்கள் சத்தியராஜ்),


                                          சுப்ரீம் கோர்ட் - இணையத்தில் சுட்டது



மவுன சாமியார், சிரிப்பு சூப்பர் ஸ்டார் மன்மோகன் சிங் - இணையத்தில் சுட்டது

டெல்லியின் வரலாற்றை தெரிந்து கொள்ள நாம் 3000 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.

(என்ன தசாவதாரம் கமல்னு நினைப்போ,  அடிங் கொய்யாலே !!!
என்னங்கன்ன  பண்றது, மொக்கை போட்டே காலத்தை ஒட்டியாச்சு).

இந்த 3000 ஆண்டுகளில் டெல்லியை போல் ஏற்றமும் தாழ்வும் அடைந்த இடம் ஏதுமில்லை எனலாம். டெல்லி என்பது வெறும் மக்கள் வாழ்ந்த, வாழுகின்ற இடம் மட்டுமில்லை, இது மன்னர்களின் நகரம்.

இது நகரத்தின் நகரம். இது ஏழு நகரங்கள் கொண்டது (பதினைந்து நகரம் உள்ளது என்றும் சிலர் கூறுவர்). இந்தியாவின் மீது காதல் கொண்ட பல அயல் தேசத்து மன்னர்கள், போர் நடத்தி கைப்பற்றியது இந்த இடத்தை தான். கபடி ஆடியதும் இங்கேதான்.


Flashback-1

1450 B.C., மகாபாரதத்தில் பாண்டவர்கள் - கெளரவர்கள் இடையே நடந்த உரசல்களை தடுக்க, பாண்டவர்களை ஹஸ்தினபுரத்தில் இருந்து காண்டவபிரஸ்தம் எனும் இடத்திற்கு திருதாஷ்டிரன் அனுப்பி வைத்தார். காண்டவபிரஸ்தம் வனங்களுக்கு நடுவில் பாழடைந்து, மனிதர்கள் வசிக்க இயலாத இடமாக இருந்தது. தர்மர் தன் தம்பிகளை அழைத்துச் சென்றார், கண்ணபிரானும் உடன் சென்றார். அவர் தேவலோக சிற்பி விஸ்வகர்மாவை அழைத்து, இந்த காட்டை அழித்து, மூவுலகிலும் எங்கும் இது வரை இல்லாதபடி ஒரு அழகிய நகரை நிர்மாணிக்கச் சொன்னார். தேவலோக அதிபதி இந்திரனை மேற்பார்வை பார்க்கச் சொன்னார். தேவலோகத்தையும் மிஞ்சும் அழகில் அமைந்த அந்த நகரத்திற்கு இந்திரனின் நினைவாக  இந்திரபிரஸ்தம் என பெயர் வைத்தார் (இதே பெயரில் இன்றளவும் டெல்லியில் ஒரு இடம் உள்ளது). யமுனை ஆறு இந்த இடத்தின் கிழக்கில் இரண்டு கீ.மீ. தூரத்தில், வடக்கிலுருந்து தெற்கு மார்க்கமாக பாய்கிறது. இந்த இடத்தின் செழிப்பை கண்டு மக்கள் இங்கு குடி ஏறினர். பாலாறும் தேனாறும் ஓடியது(?). இது தனி நாடு ஆனது. பிறகுதான் சூது - நாடிலந்தது - வனவாசம் - குருஷேத்திர போர். மகாபாரத போரின் வெற்றிக்கு பிறகு, தர்மர் ஹஸ்தினாபுரம் சென்று விட்டார். அர்ஜுனனின் வாரிசுகளே சில காலம் ஆண்டு வந்தனர். அதன் பிறகு இந்திரபிரஸ்தம் என்ன ஆனது. அதை ஆண்ட மன்னர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கான காலச்சுவடுகள் இல்லை.

தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கணிப்புப்படி, கிறிஸ்து பிறப்பிற்கு முன்பே அங்கு நகரம் இருந்தது என்றும், அது ஹுமாயுன் சமாதி (Tomb) மற்றும் பெரோ ஷா கோட்டைக்கு இடைப்பட்ட இடத்தில் தான் இருந்திருக்க வேண்டும் என்கின்றனர். இன்றைய இந்திரபிரஸ்தம் என்று அழைக்க படும் இடம் தான் அது என நம்பப்டுகிறது.

கிறிஸ்து பிறப்பிற்க்கு முந்தைய கிரேக்க பயணதுறவிகள் நீயர்ச்சுஸ் (Nearchus), மெகஸ்தீநீஸ் (Megasthense) மற்றும்  அவர்களுக்கு அடுத்து இந்திய வந்த சீன பயணதுறவிகள் பா ஹியான் (Fa Hian), ஹீயுன் டசங் (Hiuen Tsang) இந்திரபிரஸ்தத்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஹீயுன் டசங், டெல்லியை சுற்றி உள்ள ஏறக்குறைய முக்கியமான ஊர்களை பற்றி குறிப்பிட்டு உள்ளார். அவர்கள் காலத்தில் இந்திரபிரஸ்தம் எனும் நகரம் அழிந்து மறைந்து இருக்கலாம் என நாம் நம்பலாம். முதலாம் நுற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியாவை  சேர்ந்த படோல்மி (Ptolemy)எனும் புவியல் வல்லுநர் இந்திரபிரஸ்தத்திற்கு பத்து கீ.மீ. தொலைவில் தற்போதைய குதீப் மற்றும் துக்ளக்கபாத் இடத்திற்கு நடுவில் 'டைடாலா' எனும் நகரை பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த நகர் 'ராஜா டேலு' எனும் கன்னோஜ் மன்னனால் 57 B.C. ஆம் ஆண்டு உருவாக்க பட்டது. படோல்மி டெல்லியை தான் டைடாலா என குறிப்பிட்டு இருக்கலாம். டைடாலா (டெல்லி) வின் மிச்சங்களோ, அந்த மன்னரை பற்றி குறிப்புகளோ நமக்கு கிடைக்க பெறவில்லை.

                                                                                                                       - தொடரும்

                                                                                 நாங்களும் தொடர் எழுதுவோம்ல

மகேஷ் பிரபு விஜயராஜ்
                                                                                                 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக