சனி, 26 அக்டோபர், 2013

காதலை தேடி

 காதலை தேடி !!!!!

ஒரு இனிய (fine!!!) சனிக்கிழமை காலையில் நானும் என்னோட நண்பன் விக்னேஷும் நிஜாமுதின் ரயில்வே நிலையதிலுருந்து தாஜ் மஹாலை தேடி கிளம்பினோம். (தலைப்புக்கு சம்பந்தமா எழுதியாச்சு).

நான் ஏற்கனவே ஒரு தடவை தாஜ் மஹால் பார்த்திருந்தாலும், நண்பன் வெளி ஊரிலிருந்து வந்து இருக்கான், பார்க்கலாம்னு சொன்னான். நான் இரண்டு தடவை பார்த்தேன், மூன்று தடவை பார்த்தேன் ஒரு build-up விடலாம்னு அவன் கூட கிளம்பி போனேன்.

திருக்குறள் அதிவிரைவு வண்டி கன்னியாகுமரி வரைக்கும் போறது, போன போகுதுன்னு சொல்லி ஒரு மூணு மணி நேரத்துல Agra Cantonment Stationல இறக்கி விட்டது. திருக்குறள்ங்கிற வார்த்தைய North India stationல announce பண்ணுவாங்க பாருங்க கேக்குறதுக்கு இரண்டு காது வேணும்.

Agraல இரண்டு station இருக்கு. Agra Cantonment மற்றும் Agra Fort, நம்ம ஊர்ல இருந்து வடக்க போற train எல்லாம் Agra Cantonment தான் போகும்.

நாங்க  உக்காந்து இருந்து இடத்துக்கு பக்கத்துல ஒரு பொண்ணு Train கிளம்பினதுலது இருந்து, Agra போற வரைக்கும் mobileல பேசிகிட்டு வந்தது. எனக்கு ஒரு இடத்துல நின்னு பேசினாலே மொபைல் போன்ல ஒம்போது தடவை கட் ஆகுது. இவங்களுக்கெல்லாம் எப்படித்தேன் சிக்னல் கிடைக்குதோ, எந்த புண்ணியவான் ரோமிங் callக்கும் சேர்த்து பில் கட்றானோ, Million Dollar கேள்வி தான்.

Agra Cantonmentல இறங்கின உடனே தலை தீபாவளிக்கு வர்ற மாபிள்ளைய வரவேற்கிற மாதிரி Auto driversம், Taxi driversம் என் வண்டில வாங்க, என் வண்டில வாங்கனு ஒரே பாச மழை, அந்த மழைல குடை பிடிச்சி நனையாம வெளியே வந்தா Prepaid Auto / Taxi stand இருக்குது. நிறைய package options இருக்குது. ஆறு மணி நேரம் Taj Mahal மற்றும் Agra Fort போறதுக்கு 400 ரூபாய், எட்டு மணி நேரம் Taj Mahal, Agra Fort மற்றும் Fathehpur Sikhri போறதுக்கு 800 ரூபாய், மூணு பேர் போகலாம், இந்த மாதிரி நெறைய options. நானும் நண்பர் விக்னேஷ்ம் 400 ரூபாய் packageல போனோம்.

நான் ஏற்கனவே Fathehpur Sikhri எனது அலுவலக நண்பர்களோட (தமிழ் நாட்டிலிருந்து டெல்லிக்கு ஒரு வருஷத்துக்கு புலம் பெயர்ந்தோர் சங்கம்) ஒரு பாட்சா வேன்ல போனோம்.

Fathehpur  Sikhriல ஒரு guide அந்த அரண்மணைய பத்தி சொன்னது தான் என்னை தமிழ் சினிமா மாதிரி Flashback சொல்ல வச்சிருச்சி, என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவ  பார்த்து வளர்ந்த பயபுள்ளக தானே நாம.

அக்பர் கல்யாணமாகி  குழந்தையில்லாம இருந்த சமயத்துல, மூணு சாமியார பார்த்து இருக்காரு, ஒருத்தர் காஷ்மீர் ஆளு அங்க வேலைக்கு ஆகல அப்புறம் ராஜஸ்தான் சுவாமிஜி அங்கையும் வேலைக்கு ஆகல, கடைசிய ஆக்ராவிலுருந்து சுமார் 37 கி. மீ. தூரமுள்ள Fatherpur  Sikhri ல உள்ள சாமியார் மூலமா லக்கி prize அடிச்சிருக்கு. அக்பருக்கும், ஜோதபாய்க்கும் சலீம் (ஜஹாங்கீர்) பிறந்தார்.அதனால அங்கேயே ஒரு கோட்டைய கட்டி Fathepur Sikhriனு  பெயர் வச்சுட்டாரு. (Fathepur Sikhriன வெற்றியின் அடையாளமாம், எந்த வெற்றின்னு தெரியல).

Fathehpur Sikhri  இல்லேன்னா Taj  Mahal இல்லையாம், ஏன்னா ஜஹாங்கீர் பையன்தான் (ஷாஜஹான்) Taj Mahal கட்டினது.

அக்பரோட நவரத்தினங்கள் ஒருத்தர் தான் பீர்பால், அவரோட இயற்பெயர் மகேஷ் தாஸ், அவர் ஒரு நல்ல காமெடியனாம், இதை வச்சு எல்லாரும் என்னை ஓட்டினது தனி track.


               (Fathehpur Sikhri அரண்மணை : ஒளிஓவியம் எங்க P.C. Shriram சத்தியராஜ்)

Flashbackங்கிற பெயர்ல மொக்கை போட்டது  போதும்னு நினைகிறேன், நாம இப்போ Taj Mahalக்கு வருவோம்.

Auto நேரா Taj Mahal south gateக்கு போச்சு, வண்டில போறப்ப driver அங்க சாப்பாடு நல்லா இருக்கும், இங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொன்னாரு, Risk எல்லாம் எனக்கு Rusk சாப்பிடற மாதிரி மாதிரினு சொல்றவங்க try பண்ணுங்க, நாங்க யாரு, சோத்த கண்டா சொர்கத்த கண்ட மாதிரி feel பண்ற கோஷ்டி, வேணச்சாமி west gate பக்கத்துல இருக்குற உடுப்பி hotelக்கே போய்கிறோம்னு சொன்னோம்.

Taj Mahalல மொத்தம் மூணு gate இருக்கு, East gate(VIP gate, இதுக்கு முன்னாடி போனப்ப guide, உங்கள VIP gate வழிய கூப்பிட்டு போறேன்னு சொல்லி டகால்ட்டி விட்டாரு, நாங்க கூட Guide பெரிய ஆள்னு நினைச்சோம், அப்புறம் தான் தெரிஞ்சது நார்மல் நாள்ல எல்லாரயும் அந்த gate வழிய உள்ள விடுவாங்கன்னு). அடுத்தது West மற்றும் South gate (நம்மள மாதிரி பொது ஜணம் எப்போவுமே போறது). North sideல தான் யமுனா ஓடுது.

Taj Mahal உள்ள போறதுக்கு Entry Ticket 20 ரூபாய், பக்கத்துல shoe cover ஒரு pair 5 ரூபாய் அதையும் வாங்கினோம். shoe cover எதுக்குன shoe, chappal மாட்டிகிட்டு Taj Mahalகுள்ள உள்ள போக கூடாது, அதுக்கு மேல cover மாட்டின shoe போட்டுட்டு போகலாம். அதாவது shoeகுள்ள மட்டுமில்ல shoeக்கு வெளியேவும் உறை போடணும். இல்லே வெறுங்காலோடவெயில்  நடந்து போனா காலு ரெண்டும் நவ்வாபழம் போல பழுத்துரும்.

மூணு gate வழியா உள்ள நுழையற எல்லாரும் எல்லாரும் ஒரு பொது வழியில நுழையணும். அந்த நுழைவாயில் மேல 21 கும்பம் வச்சி இருக்காங்க, அது Taj Mahal கட்டி முடிக்க 21 வருஷம் ஆனத குறிக்குது. இது மொஹல் .

அந்த நுழைவாயில்ல நுழைஞ்ச உடனே ஒரு பளிங்கு அரண்மணை எங்க கண்களுக்கு விருந்தாச்சு. உடனே மனசுக்குள்ளே ஒரு A.R. Rahman melody பீறிகிட்டு வந்து ஒரே feelings போங்க. அங்க நின்னு வளைச்சி வளைச்சி போட்டோ எடுத்தோம். sampleக்கு ஒரு போட்டோ கிழே,



அப்படிக்க கொஞ்சமா முன்னாடி போனா Diana மேடை இருக்குது, அட நிசமாத்தாங்க, எப்படின்னா நம்ம Dianaம்மா 1992ல Taj Mahal வந்தப்போ அங்க உக்காந்து தான் photo எடுத்தாங்களாம். அவுங்க நினைவா அந்த பேர் வச்சுட்டங்கள்ளாம். என்ன ஒரு வில்லத்தனம்.

 


Taj Mahala பாக்கிறப்போ லைட்டா brown shade அடிச்சது, சே என்ன கொடுமை சரவணன் இது, இந்த Madhura Refinery pollute பண்ணி Taj Mahaloda கலரா மாத்திருச்சேனு ஒரே feelings(இது hard feelings, முன்னாடி சொன்ன feelings இல்ல). அது Madhura pollution மட்டுமில்லை, என்னோட power glasso Auocool effectயும் கூட..

தூரத்திலுருந்து பார்த்த அனுபவம் உண்மையிலே சொர்க்கம். Taj Mahalக்கு நடுவில இருக்கிற Tomba சுத்தி நாலு பெரிய தூண் இருக்குது. அதோட சிறப்பு அம்சம், எந்த தூண் உடைஞ்சி விழுந்தாலும் Tomb மேல விழாத மாதிரி கட்டி இருக்காங்க, எதோ நல்ல Engineer கட்டி இருக்கான் போல !!!!

Tomb ஒரு பக்கம் Guest house இருக்கு, இன்னொரு பக்கம் மசூதி. Guest houseல என்ன கொடுமையான விஷயம்னா கதவே கிடையாது, வெறும் துணி திரைதான். அவங்க அரண்மனை கூட இப்படிதான் இருக்குது. இது தான் முகலாயர்கள் குசும்போ ?

Tombகுள்ள ரெண்டு சமாதி இருக்கு, நடவுல இருக்கிறது மும்தாஜ், ஒரே ஓரமா !  நம்ம ஆளு ஷாஜஹான் சமாதி. ஷாஜஹான் அவருக்குன்னு ஒரு கருப்பு Taj Mahal கட்ட ஆசைப்பட்டார். அவருக்கும் அவர் பையன் அவுரங்கசீப்க்கு பெரிய லடாய்,
அடுத்த வாரிசா அறிவிக்கலைன்னு காண்டு. Agra கோட்டைய ரவுண்டு கட்டிட்டாரு. பெத்த அப்பனு பாக்காம மெட்ரோ தண்ணிய கட் பண்ணிட்டாரு. அப்புறம் என்ன காதல் மன்னன் சரண்டர் தான், ஹவுஸ் அரெஸ்ட் தான். அதுக்கு அப்புறம் எட்டு வருஷமா ஒரு கைதியாக Agra கோட்டைஇலிருந்து Taj Mahala வெறிக்க வெறிக்க பார்த்துட்டு செத்து போயிட்டாரு. Boat மூலமா இரண்டு பேர் அவர் உடலை கொண்டு வந்து பொதச்சிட்டு போய்ட்டாங்க..

நல்ல தூரத்துல இருந்து Taj Mahal  பாக்கிறப்ப கிடச்ச அனுபவம் கிட்ட போக போக பிம்பம் மெதுவா கலையுது. பெருசா ஒரு பளிங்கு கட்டிடம் மாதிரித்தான் தோணுது. எப்படி இருந்தாலும் எந்த வெளி நாட்டுக்காரன பார்த்தாலும், எங்க வச்சி பார்த்தாலும் எல்லா இந்தியணும், Taj Mahal, world wonder, full white marble, symbol of love, my country அப்படின்னு build-up குடுக்க உதவிய  ஷாஜஹான்க்கு ஒரு Royal Salute.

Taj Mahala விட்டு வெளியே வந்ததும் Auto Drivera phoneல பிடிச்சி, உடுப்பி hotel போய் full meals அடிச்சோம். இங்கதான் ஒரு கூத்து ஆகி போச்சு, விக்னேஷ் digital cameraவ மறந்து வச்சிட்டோம். அது Agra Fort போனதும் தான் நியாபகம் வந்தது. U-turn போட்டு வந்து பார்த்தா பிம்பிலிக்கி பிலேப்பி தான். கொஞ்ச நேரம் ஓரமா உக்காந்து feel பண்ணிட்டு Agra Fortக்கு படை எடுத்தோம். டெல்லிக்கு சமம்மா ஆக்ராவையும் தலைநகரா நெறைய மன்னர்கள் வச்சி இருந்து இருக்காங்க. கோட்டைய ரவுண்டு கட்டி பார்த்தோம். அதுல என்னை ரெம்ப கவர்ந்தது ஜ்ஹாங்கீர் mobile swimming pool தான். எங்க போனாலும் அத தூகீட்டு போயிருவாங்களாம்.

எங்களின் அடுத்த இலக்கு Railway Station, அங்க stationகுள்ளே Comesum ஒரு hotel, அந்த areaவில ஒரே hotel தான் இருக்கு,  தோசையும், சிக்கன் fried rice order பண்ணினோம். விக்னேஷ் அவங்க அம்மாகிட்ட mobileல பேசிகிட்டு பை A.C. roomல போய் உக்காந்தான்.

நான் கை கழுவலாம்னு (நம்புங்க உண்மை தான்) போனா, Paan போட்டு துப்பி Modern Art பண்ணி வச்சிருந்தாங்க, அப்பவே BP lighta  raise ஆகியிறிச்சு. சாப்பாடு வச்சி இருந்த counterல fulla ஈ. குபீர்னு நமக்குள்ள உள்ள அந்நியன் வெளியே வந்துட்டான். Hotel Supply பையன்ல இருந்து ஆரம்பிச்சி, Cashier, Manager ஒரே பஞ்சாயத்து. இது இந்தியாவிலே பெரிய tourist spot, எவ்வளவு foriegners வர்றாங்க, இந்தியாவ பத்தி என்ன நினைப்பாங்க. வாங்கிற காசுக்கு சுகாதாரமா சாப்பாடு போடா மாட்டிங்களா over dialouge. தோசை வாங்க போன ஆள காணமேன்னு விக்னேஷ் தேடி வந்தான், அவன் பங்குக்கு Governmentல இருந்து Audit வரமாட்டங்களா, வருவாங்கன்னு hotelல சொன்னாங்க, உடனே இவன் காசு குடுத்து Government officersa சரி கட்டிருவீங்கனு நினைகிறேன் அதான் இவ்வளவு மெத்தனம இருக்கீங்க, ஏன் cook பண்றன்வங்க தலைல Hair Cap போடலைன்னு கேள்வி வேற. அப்புறம் Trainக்கு late ஆனதல சாப்பிட்டுட்டு வந்துட்டோம். இந்த மொத்த matterல கொடுமை என்னன்னா எனக்கு Hindiல ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா மட்டும் தான் ஒழுங்கா தெரியும். விக்க்னேஷ்க்கு அறகுறைய தெரியும்.

அப்புறம் சாயந்திரம் 7:10க்கு Taj Express பிடிச்சி இடிபாடுகளுக்குள், பெசைன்ஞ்சி  சிக்கி சட்னி  சின்னபின்னமா ஆகி  டெல்லி வந்துட்டோம்.

காதலை தேடி போறேன்னு சொல்லி அந்நியன கண்டு பிடிச்சது தான் மிச்சம், ரெமோவ போயிருந்த காதலை feel பண்ணி இருக்கலாம், அம்பி மாதிரி போனா அந்நியன் தான் வருவான்.....

 மறுபடியும் மொக்கை போடுவோம்.........

மகேஷ் பிரபு விஜயராஜ்