புதன், 11 ஜூன், 2014

தலையின் மேல் விதி - 2


இந்த பதிவின் முந்தைய அத்தியாயைத்தை படிக்க இந்த சுட்டியை சொடுக்கவும்



இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த டெல்லி உயர் நிதிமன்ற நிதிபதி ரமேஷ் சந்திரா லகோடி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்க பட்டது.

இரண்டு விமான உடைபாடுகளுக்கு நடுவில் கண்டு எடுக்க பட்ட கருப்பு பெட்டியை வைத்து ஆராய்ந்து பார்த்ததில், கஜகஸ்தான் விமானி கன்ட்ரோல் டவரின் அதிகாரியின் தரை இறங்குதல் அறிவுரைகளை முழுவதுமாக பின்பற்றாது தான் விமான விபத்திற்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.

இந்த விபத்திற்கு மேலும் சில காரணங்கள் கண்டறியப்பட்டது, அவை,

1. நிறைய கஜகஸ்தான் விமானிகள் ஆங்கில உரையாடல்களில் நன்கு  தேர்ச்சி பெறாதவர்களாக இருந்தார்கள், அதனால் அவர்கள் கன்ட்ரோல் டவருடன் நடைபெறும் உரையாடலுக்கு ரேடியோ ஆப்பரேட்டர்களையே பெரிதும் நம்பி இருக்க வேண்டி இருந்தது. ரேடியோ ஆப்பரேட்டர்களுக்கென்று தனியாக கருவிகள் கிடையாது, தேவை என்றால் விமானியின் கருவியை தான் ரேடியோ ஆப்பரேட்டர் பார்த்துக்கொள்ளலாம், அதனால் எப்பொழுதும் கன்ட்ரோல் டவர் உரையாடலுக்கும், விமானியின்  செயல்பாட்டுக்கும் சிறுது நேர இடைவெளி இருக்கும். 

 2. பொதுவாக விமானங்களில் FPS யூனிட் சிஸ்டம் பின்பற்றபடும் (உயரம், 'அடி' கனக்கில் அளவிடப்படும்), அனால் ஜகஸ்தான் விமானங்களில் உள்ள கருவிகளில் மெட்ரிக் (Metric) யூனிட் சிஸ்டம் பின்பற்றபடுகிறது (உயரம், 'மீட்டர்' கனக்கில் அளவிடப்படும்). 

3. புது டெல்லி விமான நிலையத்திற்கு பல காற்றுப்பாதைகள் (Airway) இருந்தாலும், அதில் ஒரு பாதை மட்டுமே வர்த்தக போக்குவரத்துக்காக   பயன்படுத்தப்பட்டது, மற்ற பாதைகள் வான்பாதுகாப்பு படை வசம் இருந்தது. இதனால் ஒரே காற்று பாதையில் தான் விமான நிலையத்திற்கும் உள்ளே வரும் விமானமும் வெளியே போகும் விமானமும் பயன்படுத்த வேண்டும்.   

4. விபத்து நடந்த பொழுது, புது டெல்லி விமான நிலையத்தில் முதல்  கட்ட  கண்காணிப்பு ராடார் மட்டுமே நிறுவப்பட்டிருந்தது. இந்த ராடார்  உதவியால்  விமானம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதை மட்டுமே கண்டறியலாம் இரண்டாம் கட்ட கண்காணிப்பு  ராடார் இல்லாததால் விமானத்தின் உயரத்தை கண்டறிய முடியாது.          

இப்படியாக வரிசையாக காரணங்களை அடுக்கியது விசாரணை அறிக்கை, மேலும் சில அறிவுரைகளை வழங்கியது, அவை,

1. புது டெல்லி விமான நிலையத்திற்கு உள்ளே வரும் விமானத்திற்கும், வெளியே போகும்   விமானத்திற்கும் தனி தனி காற்றுப்பதை (Airway) அமைக்கவேண்டும்.

2. விமான நிலையத்தின் சுற்றுபுறத்தில் பறந்து கொண்டிருக்கும்  விமானங்களின் உயரத்தை அளவிட, இரண்டாம் கட்ட கண்காணிப்பு  ராடார் நிறுவப்பட வேண்டும்.

3. மோதல் தவிர்ப்பு இயந்திரம் (TCAS - Traffic Collision Avoidance System)அனைத்து விமானத்திலும் நிறுவப்பட வேண்டும். இந்த இயந்திரம் விமானத்தை சுற்றி குறிப்பிட்ட தூரம் வரை உள்ள விமானம் குறித்து தகவல்களை அளிக்கும். 

இரு விமானத்தில் உள்ள பயணிகள் தங்களது விலைமதிப்பில்லா உயிரை கொடுத்து, மேல கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 



மலேசிய விமான விபத்திற்க்கு கூட இதே போல் எதோ காரணம் இருக்கும், அது என்னவென்று கண்டுபிடித்து அதை சரி செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், வருங்காலத்தில் விபத்தில்ல பயணம் மேற்கொள்ள வழி வகை செய்ய வேண்டும்.

வந்தபின் சிகிச்சை என்பதை விட வரும்முன் காப்போம் என்பது சாலச்சிறந்தது....

7 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம் அண்ணா.... ரெம்ப யோசிக்க வைத்தது இந்த விபத்து....

      வழக்கம் போல் உங்கள் முதல் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா.........

      நீக்கு
  2. முதன்முறையாக தங்களின் தளத்திற்கு வருகிறேன் நண்பரே
    இனி தொடர்வேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முதல் வருகைக்கு நன்றி அய்யா.
      என்றும் உங்கள் ஆதரவு வேண்டும்....
      நன்றிகளுடன் மகேஷ்......

      நீக்கு
  3. Good informative post.

    வாழ்த்துக்கள் தோழர்
    http://www.malartharu.org/2014/01/gold-vein.html

    பதிலளிநீக்கு