புதன், 15 அக்டோபர், 2014

ரோமானிய சதுக்க பூதம்

நமக்கு தெரிஞ்ச சோழ வரலாற்றில் கவேரிபூம்பட்டிணம் அப்படின்னு கேட்டா முதல்ல நினைவுக்கு வர்றது நாளங்காடி அப்புறம் சதுக்க பூதம் சிலை.


சதுக்க பூதத்தை சாட்சியா வச்சிக்கிட்டு பொய் சொன்னா, அந்த பூதம் தண்டனை தரும் அப்படிங்கிறது அந்த கால மக்களோட நம்பிக்கை.


சதுக்க பூதத்தை பற்றி எனக்கு தெரிந்த கதை,,


விவசாயி ஒருவர் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. கள்வர்களின் தொந்தரவு அதிகம் இருந்ததால் தன்னிடம் உள்ள 100 பொற்காசுகளை தன் நண்பரிடம் கொடுத்து விட்டு, திரும்ப வந்து பெற்று கொள்கிறேன் என கூறி சென்றார்.


ஊர் திரும்பிய பிறகு, நண்பரை பொது இடத்தில் சந்தித்தார், பயணம் குறித்து இருவரும் பேசிக்கொண்டுயிருந்தார்கள், நண்பராக பொற்காசுகளை தருவார், நாம் கேட்டால் மரியாதையாக இருக்காது என விவசாயி ஏதும் கேட்க்காமல் வீடு திரும்பி விட்டார்.


நண்பர் பொற்காசுகளை பற்றி மூச்சு விடவில்லை, நாட்கள் சென்றது, விவசாயி வேறுவழி இல்லாமல் வாய் விட்டே கேட்டு விட்டார்.


"ஏனப்பா என் பொற்காசுகளை எப்போது கொண்டு வந்து தருவாய்" என விவசாயி கேட்டார்.


"நான் பொது இடத்தில வைத்து சந்தித்த பொழுதே அதை கொடுத்து விட்டேனே" என்றார் நண்பர்.


இருவருக்கும் வாக்குவாதம் முற்றி ஊர் சபைக்கு இந்த வழக்கை எடுத்து சென்றனர்.


ஊர் சபையினரால் ஒரு முடிவுக்கு வர  முடியவில்லை.


நீங்கள் இருவரும் சதுக்க பூதத்தை சாட்சியாக வைத்து உங்கள் தரப்பு நியாங்களை கூறுங்கள், பொய் சொல்பவர்களை அந்த பூதமே தண்டிக்கட்டும் என்றனர்.


சதுக்க பூதத்தின் முன்னிலையில்  முதலில் விவசாயி, நண்பர் 100 பொற்காசுகளை தரவில்லை என்றார்.


நண்பர் கையில் ஓரூ தடி வைத்திருந்தார், அதை விவசாயிடம் கொடுத்துவிட்டு, நான் 100 பொற்காசுகளை விவசாயிடம் கொடுத்து விட்டேன் என்று கூறிவிட்டு கைதடியை வாங்கிக்கொண்டார்.  


பொய் சொன்னவரை சதுக்க பூதம் தண்டிக்கும், சபை நாளை கூடி விசாரிக்கும் என்று ஊர் சபை களைந்து விட்டது.


மறுநாள் இருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை, சதுக்க பூதம் பொய் சொன்னவரை தண்டீத்திருக்க வேண்டுமே, ஒன்றும் ஆகவில்லையே என ஊர் சபை வியந்தது. 


நண்பர் வைத்திருந்த கைதடியை சந்தேகப்பட்டு உடைத்து பார்த்த பொழுது, அதில் 100 பொற்காசுகள் ஒழித்து வைக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைத்தது.  

 
அதேப்படி ஒரு சிலை தண்டனை தரும், வேற எந்த நாட்டிலையாவது இப்படி டுபாக்கூர் கதை விடுவாங்களா நம்ம தமிழ் நாட்லதான்யா லாஜிக்கே இல்லாமா கதை சொல்லுவாங்க அப்படின்னு அந்த மாதிரி கதைகள கிண்டல் பண்ணி மறக்க ஆரம்பிச்சிட்டோம்.....


இத்தாலி தலைநகர் ரோம்லையும் இதே மாதிரி ஒரு சிலை இருக்கு, அதன் பெயர் "போக்க டெல் வெரிட்டா" (உண்மையின் வாய்).  



இந்த சிலை ஒன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்டுகிறது...


இந்த சிலையின் வாயில் கை வைத்து உண்மை பேச வேண்டும், பொய் சொன்னால் அந்த சிலை கையை கடித்து விடும் என்பது நம்பிக்கை.


இங்கேயும் ஒரு சுவாரசியமான கதை இருக்கு,,,,


ஒரு கணவனுக்கு தன் மனைவி இன்னொரு ஆடவனுடன் தொடர்பு வைத்திருக்கிறாள் என சந்தேகம் வந்தது.


மனைவியை சிலையின் வாயில் கை வைத்து நிரூபிக்க சொன்னான்.
மனைவி சிலையின் வாயில் கை வைக்கும் பொழுது, அங்கு அமர்ந்திருந்த ஒரு பிச்சைகாரன் மனைவிக்கு முத்தம் குடுத்துவிட்டு வேகமாக ஓடி விட்டேன். அருகில் இருந்தவர்கள் அவனை துரத்திச்சென்றனர்.


இந்த நேரத்தில் மனைவி, சிலையின் வாயில் கையை வைத்து, "இது வரையில் எனக்கு என் கணவன் மற்றும் அந்த பிச்சைக்காரன் மட்டுமே முத்தம் கொடுத்திருக்கிறார்கள்" என்றாள்.


அவள் கைகளுக்கு ஒன்றும் ஆகவில்லை. கணவனுக்கு ஒரே ஆச்சர்யம்..


இந்நிலையில் அந்த பிச்சைகாரனை துரத்தி சென்றவர்கள், அவனை பிடித்து விசாரித்த பொழுது தான் தெரிந்து, அவன் தான் அந்த மனைவியின் காதலின் என்றும், அவளை காக்கவே பிச்சைகாரன் வேடம் போட்டு உக்காந்திருந்தான் என்று.


இன்று ரோமில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வரிசயில் நின்று அந்த சிலையை பார்கிறார்கள். வரலாற்றை அறிந்து வியக்கின்றார்கள்.


நம்மிடையே இதே போல் ஆயிரம் ஆயிரம் கதைகள் உண்டு, வரலாறு உண்டு. நாமே நம்மை மறந்து விட்டோம், மற்ற நாட்டவர்களுக்கு எங்கிருந்து சொல்ல............... 


இனிமேல் சொல்ல முயற்சிப்போம், வருங்காலத்திற்கு எடுத்து சொல்வோம்.


பின்குறிப்பு : அந்த சிலையை பார்த்து வருத்தத்தில் எழுதிய பதிவே இது..........

- மகேஷ் பிரபு விஜயராஜ் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக