செவ்வாய், 1 ஏப்ரல், 2014

அக்கரைச் சீமை அழகினிலே - 5

மே 1 ந் தேதி வெனிஸ் (Venice) போகலாம்னு முடிவு பண்ணினோம்.
எங்க கூட இருந்த மத்த எல்லாரும் வெனிஸ் பார்த்துடதால, நானும் அசோக்னு ஒருத்தரும் போனோம். 


ஒரு வாரத்துக்கு முன்னாடி வெனிஸ் போறதுக்கு ட்ரைன்லையும், சென்ட்ரல் ஸ்டேஷன் போறதுக்கு மெட்ரோலையும் ஓபன் டிக்கட் வாங்கி வச்சிட்டோம். காலை 7:25 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன்ல இருந்து வெனிஸ்க்கு ட்ரைன் கிளம்பும். நாங்க தங்கி இருந்த ஹோட்டல்ல இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் 22 நிமிஷம் மெட்ரோ பயண தூரத்தில இருக்குது.


காலை 6.30 மணிக்கு மெட்ரோ ஸ்டேஷன் வந்து பார்த்தா, கதவு இழுத்து சாத்தி பூட்டி இருக்குது, அந்த ஏரியால ஒரு ஈ, காக்கா இல்லை. 

எங்களுக்கு ஒண்ணுமே புரியல. ஒரு 10 நிமிஷம் ஏதாவது தலை தென்படுதான்னு சுத்தி சுத்தி பார்த்தோம்.

ஒரு தாத்தா பொடி நடையா நடந்து வந்து கொண்டு இருந்தார்.


நாங்க அவர்கிட்ட மெட்ரோ பத்தி கேட்டோம், அவருக்கு நாங்க பேசுன இங்கிலீஷ் (??) புரியல, அவர் பேசுன இத்தாலி எங்களுக்கு புரியல, கடைசியா மூன்றாம் பிறை கமல் மாதிரி குட்டிகர்ணம் அடிக்காத குறையா நடிச்சி காட்டி புரிய வச்சோம்.


மேட்டர் என்னன்னா, அன்னைக்கு மே 1, உழைப்பாளர் தினம், மெட்ரோ சேவை 7 மணி முதல் ஆரம்பிக்குமாம். டாக்ஸில போனா கரைக்ட் டைமுக்கு போக முடியாது, மெட்ரோல போய் பார்ப்போம்னு வெயிட் பண்ணினோம். 6:50 க்கு மெட்ரோ கதவ திறந்து விட்டாங்க.


ஸ்டேஷன் உள்ள போய் டிக்கட் எடுக்க பேன்ட் பின்னாடி பாக்கெட்ல கை விட்ட வெறும் சீப்பு  வருது, டிக்கட்ட காணோம், அன்னிக்கு ஜீன்ஸ் பேன்ட் போட்டு இருந்தேன், நடக்கிறப்போ, சீப்பு கொஞ்ச கொஞ்சமா நகண்டு டிக்கட்ட தள்ளி விட்டுருச்சினு நினைக்கிறன். 


சாமி வரம் குடுத்தாலும் பூசாரி தடுக்குறாரே, சொக்கநாதா இது என்ன திருவிளையாடல், அவசரமா வெளியே தேடி ஓடினேன். 


      

மெட்ரோ டிக்கட் 


நல்ல வேலைய மெட்ரோ வாசல்ல கிடந்தது. எடுத்துட்டு உள்ள வந்து டிக்கட்ட  செக்-இன் பண்ணிட்டு மெட்ரோ ஏறியாச்சு.


நம்ம ஊர் மாதிரி மெட்ரோ இல்லைங்க, கரைக்டா 7:22 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷன் வந்து சேர்ந்தது. இறங்கி வேகமா (??) ஓடினோம். டிஸ்ப்ளேல 17 நம்பர் பிளாட்பார்ம்னு போட்டு இருந்தது.


நாங்க ஸ்டேஷன் ஆரம்பத்துல இருந்தோம், அவ்வளவுதான் ட்ரைன் கிளம்பிரும், பிளாட்பார்ம்  எங்க இருக்குன்னாவது  பார்த்துட்டு  வருவோம்னு கிட்ட போனோம். 

அதிர்ஷ்டவசமா நாங்க டிஸ்ப்ளே பார்த்ததே 17 நம்பர் பிளாட்பாரம் தான், ஓடி போய் ட்ரைன் ஏறினோம். 




நாங்க ஏறின உடனே ட்ரைன் கதவை சாத்திட்டாங்க, ட்ரைன் நகர ஆரம்பிச்சிருச்சி. கொஞ்ச நேரம் மூச்சி வாங்க உக்காந்தோம். அப்போதான் திடிர்னு ஒரு விஷயம் நியாபகம் வந்தது. 


நாங்க பயணம் பண்ணினது ஓபன் டிக்கட், அதை ட்ரைன் ஏறுறதுக்கு முன்னாடியே செக்-இன் பண்ணனும், இல்லை என்றால் வித்தவுட் என்று அர்த்தமாம். பைன் வேற ரெம்ப ஜாஸ்தியா போடுவாங்களாம்.


செக்கர் நம்மகிட்ட வர்றதுக்கு முன்னாடி, நாம அவர் தேடி போவோம்னு முடிவு பண்ணினோம், மறுபடியும் ட்ரைன்குள்ள ஓட்டம் ஆரம்பம். இந்த பஞ்சயத்த முடிச்சிட்டு வெனிஸ் நோக்கி பயணம் பண்ணினோம்.


வெனிஸ் பத்தி அனேகர் கேள்விபட்டிருக்கலாம், தெரியாதவர்களுக்காக ஒரு சின்ன முன்னுரை....


இத்தாலியின் வடகிழக்கில் அமைந்துள்ளது. 118 சின்ன தீவுகளால் அமைக்கப்பட்ட நகரம். ஒவ்வொரு தீவும் படகு அல்லது பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரம் கி.பி. 166 ஆம் ஆண்டுக்கு முன்பே நிர்மாணிக்க பட்டது...


                                                                                            - தொடரும் 


                                                                               மகேஷ் பிரபு விஜயராஜ்   


   

      
            

2 கருத்துகள்:

  1. "பஞ்சயத்த" எளிதாக முடிந்து விட்டதால் சொல்லவில்லையா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா அண்ணா, நிலைமையை சொன்னதும் புரிந்து கொண்டு டிக்கட் செக்-இன் செய்து விட்டார்கள்.

      வருகைக்கு நன்றி அண்ணா............

      நீக்கு