திங்கள், 9 டிசம்பர், 2013

டெல்லி திருவிழாவின் முடிவுகள்

 நாம் ஆவலோட எதிர்பார்த்த டெல்லி தேர்தல் முடிவுகள் வந்துருச்சி, 

பா.ஜ.க. - 32
ஆம் ஆத்மி - 28
காங்கிரஸ் - 8
மற்றவர்கள் - 2

15 வருஷம் ஆட்சில இருந்த ஒரு கட்சிய, ஆம் ஆத்மி (பொது ஜனம்) மண்ண கவ்வ வச்சு இருக்கு. தொடப்பத்தை வச்சி நல்லா வாரி வழிச்சி எடுத்துட்டாங்க (அவங்க கட்சி சின்னமும் அதுதான்). காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  ஒரு இன்னோவா போதும்னு சொல்ல வச்சுட்டாங்க (Innova comment, Chetan bahat tweet பண்ணியது). 
கட்சி ஆரம்பிச்ச ஒரு வருசத்திலே இது பெரிய சாதனை.

இதோட சிறப்பு அம்சமே, அதன் தலைவர் அரவிந்த் கெஜரிவால், டெல்லி முதல்வர் பதினைந்து வருடங்களாக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. ஷீலா தீக்ஷித் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக போட்டியிடுவேன் என கூறி, புது டெல்லியில் போட்டியிட்டு 25000 வாக்குகளில் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

டெல்லி தேர்தல் முடிவு வரைபடத்தை பார்த்தல் ஒன்று புரியும், அதிகம் படித்த மக்கள் வாழும் / நகர பகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது, புறநகர் பகுதியில் பா.ஜ.க. வென்றுள்ளது. 

ஆம் ஆத்மி இன்னுமும் தீயா வேலை செய்யணும் குமாரு......


காவி - பா.ஜ.க., ரோஸ் - ஆம் ஆத்மி, நீலம் - காங்கிரஸ் 

ஆட்சி அமைக்க 36 இடங்கள் வேணும், ஆம் ஆத்மி எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க போவதில்லைனு அறிவிச்சிட்டாங்க, நல்ல எதிர் கட்சியா செயல்படுவோம்னு அரவிந்த் கெஜரிவால் சொல்லி இருக்கார்.     

பா.ஜ.க. ஆட்சி அமைக்க, 4 இடங்கள் தேவை, 2 சுயேச்சைகள் இருக்காங்க, ஆம் ஆத்மி வெளிய இருந்து ஆதரவு தரலாம். நல்ல எதிர் கட்சியா செயல் படலாம், இல்லை என்றால், 2 1/2 வருடங்கள் பா.ஜ.க., 2 1/2 வருடங்கள் ஆம் ஆத்மி என ஆட்சி செய்யலாம். என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.

நேற்று, மயூர் விஹார் பகுதியில் நடந்த ஆம் ஆத்மி கட்சியினர் வெற்றி கொண்டாட்டங்கள் இவை. பதினைந்து நிமிடங்கள் தொடர்ச்சியாக சரவெடி வெடித்து கொண்டு இருந்தது. சரவெடி கூட்டத்துகுள்ளையும் லென்த்தா போகுது பாருங்க....


                                               

காட்சிகள், வழக்கமான அரசியல் கட்சிகளை சிறுது நியாபக படுத்தியது.



கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் என்னிடம், வெற்றி பெற்றது, யார் ஆம் ஆத்மி என கேட்டு விட்டு சென்றான். மூன்று சக்கர வாகனத்தின் பின்னால் செல்கின்றரானே அவன் தான். அவன் வரையில் ஆம் ஆத்மி பரவியது மகிழ்ச்சியாக உள்ளது. 

பொறுத்திருந்து பாப்போம் புது வெளக்குமாறு எப்படி கூட்டுதுன்னு....

சொல்ல மறந்துட்டேனே, நம்ம எதிர் கட்சி தலைவர்,  11 தொகுதி சேர்த்து 2300 ஓட்டு வாங்கிட்டாரு.
              
                                                                                       - மகேஷ் பிரபு விஜயராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக