புதன், 18 டிசம்பர், 2013

சிலு சிலுவென அடிக்குது

கடந்த வெள்ளிகிழமை டெல்லியில் இருந்து தூத்துக்குடி சென்று விட்டு, திங்கள் அன்றே டெல்லி திரும்ப திட்டமிட்டு Spicejet விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தேன். மத்தியானம் 3:10 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி 4:15 சென்னைக்கும், பின்பு 4:55 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி 7:40 மணிக்கு டெல்லி வந்து சேரும்.

நான் தூத்துக்குடியிலிருந்து, 10:30க்கு கிளம்பினேன், அருப்புக்கோட்டை அருகில் பேருந்து செல்லும் போது, ஒரு கால் வந்தது, டெல்லி லேன்ட்லைன் நம்பர்யிலிருந்து, யார்ரா இது ரோமிங்ல இருக்கும் போது கால்னு நினைச்சிகிட்டு அட்டெண்ட் பண்ணினேன்.

Spicejet கஸ்டமர் கால், உங்கள் விமானம் தாமதமாகி உள்ளது, 4:15 மணிக்கு கிளம்பும்னு சொன்னங்க, சரின்னு நம்பி 1:30 மணிக்கு ஏர்போர்ட்குள்ள போனேன். வாசல்ல இருந்த செக்யூரிட்டி, விமானம் தாமதம் ஆகிருச்சி, இப்போ உள்ள போகனுமா, உள்ள போனா வெளியே விட மாட்டோம்னு சொன்னங்க. பரவாயில்லைனு சொல்லி உள்ளே போனேன்.

கொஞ்ச நேரம் கழிச்சி பார்த்தா, 16:15 மணியிலிருந்து 17:45 மணின்னு போட்டு இருந்தது. நான் ரெம்ப வெறி  ஆகிட்டேன். Spicejet ஆபீஸ்ல போய் கேட்டேன். அவங்க டெல்லில பயங்கர பணி, அங்க இருந்து விமானம் கிளம்பவே இல்லைன்னு சொன்னங்க.

என்ன நக்கல் பண்றீங்களா, மத்தியானம் 2 மணிக்கு என்ன பணி, புதுசா எதாவது சொல்லுங்கனு சொன்னேன். அவங்களால எதுவும் பதில் சொல்ல முடியல. எனக்கு போர் அடிக்குது, நான் வெளியே போகணும் வந்து செக்யூரிட்டிகிட்ட சொல்லி வெளியே அனுப்புங்கனு சொல்லி, 1 கி.மீ. நடந்து ஒரு டீக்கடையில் 2 மணி நேரம் அமர்ந்து விட்டு திரும்பவும் உள்ளே வந்தேன். கடைசில விமானம் 17:45 கிளம்பி 22:20 டெல்லி வந்தது. ரெம்ப கடுப்பில  வந்து சேர்ந்தேன். காலைல எந்திச்சி பார்த்தப்போ தான் அவங்க பணினு சொன்னது என்னனு தெரிஞ்சது.

17 மற்றும் 18ந் தேதி, காலை 9:30 மணிக்கு எடுத்த போட்டோ இவை...........   
    

  



















ஊருக்கு போன் பண்ணி, ஒரே பனி மூட்டமா இருக்குனு சொன்னா, இங்க பங்குனி வெயில் பல்ல காட்டி அடிச்சிகிட்டு இருக்கு, கொய்யாலே உனக்கு பனியனு பல்பு குடுத்துட்டாங்க.

                                                                      - மகேஷ் பிரபு விஜயராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக