திங்கள், 10 மார்ச், 2014

சரோஜா அக்கா - பெருமாள் மாமா

நம்ம ஏன் கதை எழுதகூடாதுனு விபரீதமா யோசிச்சதோட விளைவு தான் இது, வழக்கம் போல என்னை மன்னிச்சு விட்ருங்க....


என்னங்க காலைல 5 மணிக்கு அலாரம் வச்சிட்டு படுங்க, நான் சீக்கிரமா கிளம்பி லேடீஸ் கிளப் போகணும் என்றாள் சரோஜா அக்கா.


                                             

அதான் உன் பையன் நாலு மணிக்கே, "அம்மே பாலு, பால் வேணும்னு கத்தி, பக்கத்து வீட்டுகாரங்களையும் சேர்த்து எழுப்புரானே, இதுல நான் வேற தனியா அலாரம் வைக்கனுமா என்றார் பெருமாள்சாமி மாமா.



என்னமோ உங்களுக்கு சம்பந்தமே இல்லாத மாதிரி உன் பையன்னு சொல்றீங்க, அவன் என்ன என்னை மாதிரி துறுதுறுன்னு புத்திசாலியாவா இருக்கான். ஒரு கூறு கிடையாது. இவன வயசு பசங்கெல்லாம் எப்படி சமத்தா இருக்காங்க தெரியுமா.

அவனுக்கு என்னடி குறைச்சல், அவங்கப்பன், அதான் நான், IT கம்பனில வேலை பாக்கிறேன், ராஜா வீட்டு கன்னுகுட்டிடி அவன்.




ஆமா பொல்லாத IT கம்பெனி, பேரு பெத்த பேரு, தாக நீலு லேதுங்கிற கதையா எங்க அப்பா நீங்க வச்சிருந்த ஓட்ட லேப்டாப்ப பார்த்து ஏமாந்து பொண்ணு குடுத்துட்டாரு. உங்க கம்பெனில இப்போ காலேஜ் முடிச்ச பசங்க எல்லாரையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை பாக்க சொல்றாங்க, உங்களை  மட்டும் தான் சரவணா ஸ்டோர்ஸ்க்கும், ஜெயச்சந்திரன் ஸ்டோர்ஸ்க்கும் அனுப்புறாங்க. இதுல 50 ரூபாய் அலவன்ஸ்னு வெக்கமே இல்லாம வந்து சொல்றீங்க.

நான் என்ன அங்க துணி மடிக்கவா போனேன், பில் சாப்ட்வேர் செக் பண்ண போனேன்டி. நான் இந்தியன் பிராஜக்ட்ஸ் மட்டும்தான் டீல் பண்றேன்.

ஆமா கிளிச்சீங்க, நீங்க டீல் பண்ற லட்சணம் தான் எனக்கு தெரியாதா என்ன.

கால் லிட்டர் நெய்யும், 4 லிட்டர் கடலை எண்ணையும் வாங்கிட்டு வரசொன்னா, அப்படியே மாத்தி வாங்கிட்டு வந்துடீங்க, கடைகாரன்கிட்ட போய் திருப்பி மாத்திட்டு வரவும் துப்பில்லை, அப்புறம் அந்த மாசம் புல்லா நெய் வச்சிதான் தாளிச்சேன். வெளியே சொன்னா வெக்ககேடு....

நான் தெரியாமதான் கேக்குறேன், உங்களுக்கெல்லாம் எவன்ங்க கம்ப்யூட்டர் என்ஜினியர் பட்டம் குடுத்தது. நீங்களே என்ஜினியர் ஆனதாலா எங்க வீட்டு மாடுகூட படிக்க வச்சா ஆகிடும் போல இருக்கு.

அப்புறம் நீ ஆகா வேண்டியது தானேடி.

நான் மட்டும் பத்தாவது படிக்கும் போது காய்ச்சல் வந்து பெயில் ஆகாம இருந்திருதேன்னா, உங்கள விட பெரிய கம்ப்யூட்டர் என்ஜினியர் ஆகி அழகா பெரிய பெரிய வீடு, கடையெல்லாம் கட்டிருப்பேன் தெரியுமா.

அது கம்ப்யூட்டர் என்ஜினியர் இல்லைடி, சிவில் என்ஜினியர். கம்ப்யூட்டர் படிச்சிட்டு வீடெல்லாம் கட்டமுடியாது.

இது தான் உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கமே, எத கேட்டாலும் முடியாது, தெரியாதுனு சொல்ல வேண்டியது, இதனால தான் நீங்க முன்னேற மாட்டேங்கிறீங்க.

பெருமாள்சாமி மெதுவாக "இந்த பொம்பளைங்கதான் நியூஸ் வாசிக்க சரியானா ஆள்னு முதன்முதலாய் முடிவு பண்ணினவன், கண்டிப்பா என்னை மாதிரி ஒரு அப்பாவி புருசனாதான் இருக்கும், எவ்வளவு லென்தா போகுது".

என்ன அங்க முனுமுனுக்குறீங்க,

அலாரத்துல்ல 5 எங்க இருக்குன்னு தேடிகிட்டு இருக்கேன்மா, நீ சீக்கிரமா தூங்கு, இங்கயே பேசி பேசி டையர்ட் ஆகிட்டா, நாளைக்கு லேடீஸ் கிளப் போய் சண்டை போட தெம்பு இருக்காது.

என்னது,

இல்லைமா பேச தெம்பு இருக்காதுன்னு சொல்ல வந்தேன்.

அது, அலாரம் மட்டும் சரியா 5 மணிக்கு அடிக்கலை, நான் பத்ரகாளியா மாறிடுவேன்.

நீ ஏற்கனவே அப்படிதானே இருக்கிற, புதுசா வேற மாறனுமா....

என்ன சொன்னிங்க,

ஒண்ணுமில்லைமா, வாய்குள்ள கொசு போயிருச்சு, நீ தூங்கு, அலாரம் அடிக்கலைனா, நான் முழிச்சிருந்து காலிங் பெல்லாவது அடிச்சி உன்னை எழுப்பி விட்டுர்றேன்.....     

பெருமாள்சாமி மனசுக்குள் "எனக்கு இது தேவைதான், அலாரம்  சொன்னவுடனே வச்சிட்டு படுத்திருந்தேன்னா, இந்நேரம் கனவுல த்ரிஷா கூட டூயட் பாடிக்கிட்டு இருந்திருக்கலாம்".

வழக்கம்போல அலாரமும் சொதப்பி, மாமாவும் தூங்கிட்டார்., 




அக்கா வெறி ஆகி மாமா மேல சாமி ஆடிட்டாங்க....




யார் இந்த பெருமாள்சாமி மாமா, யார் இந்த சரோஜா அக்கா, அவங்கள பத்தி கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சிகுவோமா.........   


             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக