புதன், 19 மார்ச், 2014

ரயிலில் கழிவறை கதை

நம்ம எல்லாருக்கும் ரயிலில் பயணம் பண்ணிய அனுபவம் நெறையவே இருக்கும், அதிலையும் கழிவறைக்கு பக்கத்தில உள்ள கேபின்ல பயணம் பண்ணினவங்களோட நிலைமை ரெம்ப மோசம்.

வானம் படத்தில சிம்பு சொல்ற மாதிரி "என்ன வாழ்கைடா இது ?" அப்படின்னு பொலம்பிக்கிட்டே தான் பயணம் பண்ணிருப்பாங்க.

ரயில் விட ஆரம்பிச்சப்போ அதுல கழிவறை கிடையாது.....

எப்போ எப்படி ரயிலில் கழிவறை அமைச்சாங்க,  அதுக்கு எதாவது காரணம் இருக்குமுல்ல, அது என்னானு பார்போமா.............




ஓகில் சந். சென் என்பவர், 1909 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள  ஷாஹிப்கன்ஜ் ரயில்வே அலுவலகத்திற்கு எழுதிய கடிதமே, ரயிலில் கழிவறை அமைக்க காரணமாய் இருந்தது. 

அந்த கடித மாதிரியை டெல்லி ரயில் மியுசியத்தில் வைத்திருக்கிறார்கள்.

    
அதன் தமிழாக்கம், நம்ம ஸ்டைல்ல (ஹீ...ஹீ...ஹீ...)..........




மதிப்பிற்குரிய அய்யா அவர்களே,

நான் அஹ்மத்பூர் ஸ்டேஷனுக்கு பயணிகள் ரயிலில் வந்து கொண்டு  இருந்தேன்.

காலையில் ஓசியில் கிடைத்தது என்று உள்ளே அமுக்கிய பலாபழம் வயத்துக்குள் "ஓப்பன் கங்கணம் ஸ்டைல்" என டான்ஸ் ஆடி கொண்டு இருந்தது.

எனவே நான் மறைவிடத்துக்கு ஒதுங்கினேன், நான் அந்த இடத்தை கலீஜாக்கிக் கொண்டு இருந்த போது, பொசுக்கென கார்டு, ரயில் நகர விசில் ஊதி விட்டார். 

ரயில் ஓட, அதை பார்த்த நான் ஒரு கையில் சொம்பையும் மறுகையில் வேட்டியையும் தூக்கி கொண்டு ஓடினேன்.

நான் கால் தடுக்கி கீழே விழுந்து விட்டேன், விழுந்ததோடு மட்டுமில்லாமல், எனது வேட்டி அவிழ்ந்து, அங்கு கூடி இருந்த அனைவர் முன்னாலும்.........  அதை நான் எப்படி சொல்லுவேன்...........  மொத்த ஸ்டேஷனும் என்னிய முழுசா பாத்திருச்சிபா.

இது பெரிய தப்பு தானேங்க, ஒரு பயணி இந்த மாதிரி பலானது, பலானதுக்காக ஒதுங்கின, கார்டு அந்த பயணி வர்ற வரைக்கும் காத்திருக்கலாம்லங்க. 

இதனால நான் உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டு கொள்வது என்னவென்றால், இந்த பஞ்சயாத்த விசாரிச்சு அந்த கார்டுக்கு ஹெவியா பைன் போடுங்கள். நீங்க இத பண்ணலைனா நான் ஹிண்டுல எழுதுவேன், கொறஞ்சபட்சம் உங்க ஆபிஸ் இருக்கிற சந்துலையாவது எழுதுவேன்...

                                                                                      இப்படிக்கு 

                                                                       தங்கள் உண்மையுள்ள  
                                                                   
                                                                                ஓகில் சந். சென்
   

           

4 கருத்துகள்: