புதன், 19 மார்ச், 2014

ஆரியக்காடு நடுநிலை பள்ளி

இடம் : ஆரியக்காடு நடுநிலை பள்ளி.

நேரம் : காலை 10 மணி





பியுன் கந்தசாமி, " ராமசாமி சார் உங்களை ஹெட்மாஸ்டர் அவர் ரூமுக்கு வரச்சொன்னார்"

என்னடா விஷயம்.

எனக்கு தெரியாது சார், ஹெட்மாஸ்டர் ஒரு மாதிரி இருக்கார், நீங்களே போய் கேட்டுக்கோங்க.

சரிப்பா நான் போய் பார்த்துகிறேன்,

போகும் வழியில், மனசுக்குள் "முருகன் பையன்கிட்ட, வீட்ல இருந்து 2 முட்டை எடுத்துட்டு வரசொன்னமோ, அதை அவங்க அப்பன்கிட்ட போட்டு குடுத்து கம்ப்ளைன்ட் பண்ண வந்திருப்பானோ ?

இருக்காதே, அவனத்தான் பரிட்சைல பாஸ் ஆக்கிட்டனே"

 வேற என்ன மேட்டரா இருக்கும்...    ஒரு வித பீதியோடு ஹெட்மாஸ்டர் ரூமுக்கு சென்றார் ராமசாமி....

அங்கே ஒரு கண்ணில் கோபத்தையும், மறு கண்ணில் பயத்தையும் மிக்ஸ் பண்ணி ஹெட்மாஸ்டர் அங்கிட்டும் இங்கிட்டுமாக ருமுக்குள் நடந்து கொண்டு இருந்தார்.

சார், ஹெட்மாஸ்டர் சார் வணக்கம் சார். நீங்க கூப்பிடீங்கன்னு பியுன்  சொன்னான்.

உங்களை ஏன் கூப்பிட்டேன்னு தெரியுமா ராமசாமி,

தெரியாது சார்..( மனுஷன் என்ன குண்ட தூக்கி போடா போறாரோ)

நம்ம ஸ்கூலுக்கு நாளைக்கு இன்ஸ்பெக்டர் வர்றார்.

அவர் ஏன் சார், இங்கே வர்றார். பசங்க எதாவது தப்பு பண்ணிட்டாங்களா, அவங்கள அரஸ்ட் பண்ண போறார சார் ?

இல்லை உங்களைதான் அரஸ்ட் பண்ண போறார்.

சார்......................

பின்னே என்னையா, கல்வி அதிகாரி வர்றார்னு சொல்றேன், நீ போலீஸ் இன்ஸ்பெக்டர் நினைச்சி பயப்படுறியே...

சார், இது அதை விட பயங்கரமான நியூஸ் சார்.. நம்ம பசங்களை பத்திதான் உங்களுக்கே நல்ல தெரியுமே.....

ஆமா ராமசாமி, அத நினைச்சிதான் பயந்துகிட்டு இருக்கேன்... நீதான்யா எப்படியாவது சமாளிக்கணும்..

நான் எப்படி சார் சமாளிப்பேன்.....

அதெல்லாம் எனக்கு தெரியாது... திஸ் இஸ் மை ஆடர்.

இருக்கிற பிரச்சனைல நீங்க ஏன் சார் வடிவேல் மாதிரி பேசி வெறி ஏத்துறீங்க,
நாளைக்கு தான் எனக்கு கடைசி நாள்னு நினைக்கிறன். இன்ஸ்பெக்டர் என்ன கேக்க போறாரோ, எனக்கு இப்போவே உதறுது சார்.....

கவலைபடாம போய்யா, நான் இருக்கேன் நீ கவலை படதே....

நீங்க இருப்பீங்க சார்,  நான் இருப்பனா ???

                           

மறுநாள் காலை 11 மணி,

நம்ம ராமசாமி சார், 7-ஆம் பசங்களுக்கு பாடம் எடுக்கிற மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்தார், அப்பொழுது இன்ஸ்பெக்டரும், ஹெட் மாஸ்டரும் உள்ளே வந்தார்கள்.

பசங்க எல்லாரும், "வணக்கம் சார்"

இன்ஸ்பெக்டர், "வணக்கம் தம்பிகளா உக்காருங்க, என்ன பாடம் படிக்கிறீங்க, தமிழா, நான் ஒரு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லுங்க பார்போம்".

ஜனகரோட வில்லை உடைச்சது யாரு ????
ஏ தம்பி நீ சொல்லுப்பா ?

அந்த தம்பிதான் நம்ம முட்டை முருகன்,

சார்.........

தைரியமா சொல்லுப்பா......

முருகன், "சார் சத்தியமா நான் உடைக்கல சார் என கூறிவிட்டு குமுறி குமுறி அழுகின்றான்".

ராமசாமி சார் முருகனிடம் முட்டை வாங்கிய நன்றியில் இன்ஸ்பெக்டரிடம், "சார் முருகன் ரெம்ப நல்லவன் சார், அந்த மாதிரி வேலை எல்லாம் செய்ய மாட்டான், சுரேஷ்தான் தான் இந்த மாதிரி திருகுதனம் பண்ணிட்டு திரிவான், நீங்க வேணும்னா அவன கேட்டு பாருங்க சார்".

இன்ஸ்பெக்டர் கோபமாக, ஹெட்மாஸ்டர் சார் என்ன நடக்குது இங்கே,
ஜனகரோட வில்லை உடைச்சது யாருன்னு அந்த பையன்கிட்டே கேக்கிறேன், அவன் சத்தியமா நான் உடைக்கல சார்னு சொல்றான், அதுக்கு இந்த வாத்தியார், அவன் உடைச்சிருக்க மாட்டான்னு சொல்லி வேற பையன் இத பண்ணி இருப்பான்னு சொல்றான்".

 ஹெட்மாஸ்டர் இன்ஸ்பெக்டரிடம், சார் எதோ தெரியாம நடந்து போச்சு, பசங்கள அடிச்சா திருப்பி வரபோகுதா சார், நீங்க அந்த வில்லு எவ்வளவு ஆச்சுனு சொல்லுங்க, பசங்க எல்லார்கிட்டயும் காசு கலக்ட் பண்ணி தந்திறோம் சார், இந்த விஷயத்தை பெருசு படுத்தாம விட்டுரங்க சார்..

இன்ஸ்பெக்டர் அப்படியே மயங்கி விழுகின்றார்..............
  


 











2 கருத்துகள்: