செவ்வாய், 4 மார்ச், 2014

அக்கரைச் சீமை அழகினிலே - 4

 அப்படியே கொஞ்சம் மலை மேல பயணம் பண்ணி போனோம், எங்கே  பார்த்தாலும் ஊரே திருவிழாவிற்கு வெள்ளை அடிச்ச மாதிரி இருந்தது.   

உயரம் போக போக மலை முழுவதும் பனி  இருந்தது.





3500 மீ. உயரத்திலையும் எலெக்ட்ரிக் ட்ரைன் ஓடுது. நம்ம ஊர்ல, திருச்சிய தாண்டினா டபுள் ட்ராக் கூட இல்லை.
  




மலை அப்படியே சூர்ய வெளிச்சம் பட்டு சும்மா M.G.R. மாதிரி தக தகன்னு மின்னுச்சி 




புள்ளைங்க ஸ்கேடிங் எல்லாம் போகுது, நம்ம ???





மனுஷன் மூஞ்சி மாதிரியே ஒரு மலை 






ரோட்ல இருந்து ஒரு 900 மீ வரைக்கும் ஒரு ரோப் கார், அதுக்கு அப்புறம் 600 மீ உயரத்துக்கு இன்னொரு ரோப் கார், ரெண்டுக்கும் சேர்த்து 50 ஈரோ டிக்கெட் சார்ஜ் பண்ணினாங்க.



ரோடு எல்லாம் எவ்வளவு சுத்தமா இருக்குது, இங்கனகுள்ளேயே, முகம் பார்த்து தலை சீவி, பவுடர் அடிச்சி, திருநீறு பூசிக்கலாம் போல இருக்கு. 


 தண்ணி பயங்கரசுத்தம், 2, 3 அடி ஆழத்தில உள்ள மண்ணு, கல்லு கூட நல்ல தெரியுது 






கூட வந்த நைஜீரியா அக்கா, போட்டோ எடுன்னு சொல்லி பிரவீன் கிட்ட இம்சைய குடுத்திருச்சி, என்னை அந்த அக்கா கூட வந்த நைஜீரியா ஆள் (நம்ம ராசி அப்படி) இம்சை பண்ணிட்டான். அவங்ககிட்ட இருந்து ஓடி ஒளியதான் நிறைய பாடு பட இருந்தது. சாயங்காலம் 5 மணிக்கு கிளம்பி நல்ல பிள்ளையாட்டம் மிலன் வந்துட்டோம்.  

                                                                                                               - தொடரும் 
                                                                                               மகேஷ் பிரபு விஜயராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக