புதன், 12 மார்ச், 2014

கோச்சடையான் Vs 'மண்ணு' மோகன் சிங் - 2

வாங்க சிங்ஜி, எப்படி இருக்கீங்க.




எங்க நல்லா இருக்க விடுறாங்க, இந்த மீடியா டெய்லி எப்படி என்னை  வச்சி செய்றாங்கன்னு நீங்க பார்த்துகிட்டு  இருக்கீங்க, அத விடுங்க நான் வந்தது வேற  விசயத்துக்காக...



என்ன விசயமா இருந்தாலும், முதல்ல சாபிட்டுட்டு அப்புறமா பேசலாம்ஜி....


சிங்ஜி மனசுக்குள்ள, "நல்லாருக்கே, இந்த விசயத்த நோட் பண்ணிக்கிறேன்". 

வயிறு புல்லா சாப்பிட்டுட்டேன் ரஜினி, நான் நேரா விசயத்துக்கு வாரேன்.


அதெல்லாம் முடியாது கொஞ்சம் காப்பியாவது குடிங்கஜி.


சொன்னா கேக்கமாட்டீங்க குடுங்க ரஜினி.


காபி சாப்பிட்ட பிறகு, 

ரஜினி, ஒரு பிரதமரா நான் இந்தியா புல்லா பேமசா ஆனத விட நீங்க ஒரு நடிகரா பேமஸ் ஆகிருக்கீங்களே அது எப்படி ?


ஜி, நான் சினிமால மட்டும் தான் நடிக்கிறேன், நிஜவாழ்க்கையில இல்லை.

அப்புறம் எனக்கு சரின்னு படுகிற விசயத்த பண்றேன்,  யார் என்ன சொன்னாலும் அத மாத்திக்க மாட்டேன். 

எனக்கு முன்னாடி தப்பு நடந்த தட்டி கேப்பேன், வாய மூடிக்கிட்டு சிரிச்சிகிட்டு போஸ் குடுக்க மாட்டேன்.  


பேமஸ் என்கிறதெல்லாம் சும்மா ஒரு மாயை. எனக்கான வாழ்க்கைய நான் வாழ்றேன், மத்ததெல்லாம் அந்த ஆண்டவன் கட்டளை.


ஒத்துகிறேன் ரஜினி, உங்களை இந்தியால எல்லாருக்கும் தெரியும், ஆனா டெல்லில இருக்கிற உங்க பயலுக நீங்க உலகம் புல்லா பேமஸ்னு சொல்றாங்களே, அது உண்மையா ? எனக்கு நிருபிச்சி காட்ட முடியுமா....


ஜி, நான் பெரிய ஆள் சொல்லி தற்பெருமை அடிக்கிறது எனக்கு பிடிக்காது, ஆனா என் ரசிகர்கள் சொன்னது பொய் ஆகிடகூடாது. வாங்க போகலாம்....


எங்க ரஜினி ?


 ரஷ்யா........


ரஜினியும், சிங்யும் ரஷ்யா அதிபர் புதின் மாளிகைக்கு சென்றார்கள்.


ரிசப்சனில் ரஜினியும் சிங்யும் காத்து இருந்த போது, 

அங்கு வந்த புதின், என்ன ரஜினி நேரா என்னோட ரூமுக்கு வரலாம்ல, ஏன் இங்க உக்காந்து  இருக்குறீங்க, நான் இப்போ பார்லிமென்ட் கிளம்பிக்கிட்டு இருந்தேன், அதனால என்ன கொஞ்சம் லேட்டா போறேன், உங்க கூட உக்காந்து காபி சாப்பிடறது என்ன சாதாரண விஷயமா.


புதின், நான் உங்கள்ட்ட நெறைய தடவை சொல்லி இருக்கேன்,,




மக்கள் பணி தான் முக்கியம் நீங்க கிளம்புங்க, நாம இன்னொரு நாள் காபி சாப்பிடலாம் என்றார் ரஜினி.


நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் ரஜினி, நான் வாரேன், நம்ம பிறகு சந்திக்கலாம்.


ரஜினியும், சிங்யும் புதினிடம் விடை பெற்று அமெரிக்க சென்றார்கள்.


வெள்ளை மாளிகை வாசலில் உள்ள செக்குரிட்டி, வாங்க ரஜினி நீங்க நேரா ஒபாமா ரூமுக்கு போங்க, நீங்க எப்போ வந்தாலும் எங்க ப்ரெசிடெண்ட் அவரோட ரூமுக்கு அனுப்ப சொல்லி இருக்கார் என்றார்.


ஒபாமா ரூமுக்கு இருவரும் போனார்கள்.


அங்கு கண்ட காட்சியை பார்த்து சிங் டரியல் ஆகி விட்டார்.



அப்படியே திகைச்சு போய் வெளியே வந்தார் சிங்.


ரஜினி உங்களுக்கு போப் தெரியுமா என்று நடுக்கத்துடன் கேட்டார்.


நல்ல தெரியும் வாங்க நம்ம வாடிகன் சிட்டி போவோம். நான் கிழே நின்னு கை காட்றேன், போப் திருப்பி கை காட்டுவார் பாருங்க.


போப் எல்லாருக்கும் தான் கை கட்டுவார் ரஜினி அத வச்சு எப்படி உங்களை தெரியும்னு சொல்ல முடியும்.


சரி சிங்ஜி, போப் மாளிகைல எனக்கு மட்டும் தெரிஞ்ச ஒரு வழி இருக்கு, அது வழியா உள்ள போய் நான் போப்கூட நின்னு பால்கனில கை காட்றேன்.


ரஜினி போப் மாளிகைக்குள் நுழைந்து, பால்கனியில் நின்று போப் அருகில் நின்று கை காட்டினார்.


சிங் கிழே நின்று பார்த்துகொண்டு இருந்தார், அப்பொழுது சிங் அருகில் வந்த ஒரு ஐரோப்பாகாரர், அவரிடம் எதோ கேட்டார், அதை கேட்ட சிங் அப்படியே மயங்கி விட்டார்.  



 
சிங் மயங்கி விழும் அளவிற்கு, அப்படி என்ன அந்த ஐரோப்பாகாரர் கேட்டு இருப்பார்.




வெள்ளை டிரஸ் போட்டுக்கிட்டு நம்ம தலைவரோட ஒருத்தர் பால்கனில நின்னுகிட்டு இருக்கிறாரே,  யார் அவர் என்று கேட்டாராம்.





குறிப்பு - நகைச்சுவைக்காவே மட்டும் எழுத பட்டது, யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கமில்லை, யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னிச்சிருங்க சாமியோ......      
   

2 கருத்துகள்: