வெள்ளி, 3 ஜனவரி, 2014

மே அர்விந்த் கேஜ்ரிவால் ஈஸ்வர் ஷே சபத்லக்தாகு

புது டெல்லி, டிச. 26, 12:00:00 :

அர்விந்த் கேஜ்ரிவால், ராம் லீலா மைதானத்தில் டெல்லியின் 7 வது முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். (1956லிருந்து - 1993 வரை, ஜனாதிபதி ஆட்சி).

நானும், எனது நண்பன் நிவாஸ்ம் பதவியேற்ப்பு விழாவிற்கு போனோம். கேஜ்ரிவால் மாதிரியே நாங்களும் மெட்ரோல தான் போனோம் (வேற வழி இல்லை, அதனாலதான்).

புது டெல்லி மெட்ரோ ஸ்டேஷன்ல பயங்கர கூட்டம் (மன்னன் படத் தில சின்ன தம்பி படத்துக்கு, ரஜினி, கவுண்டமணி டிக்கெட் வாங்கற சீன் ரேஞ்சுக்கு இருந்தது). எல்லாம் பதவியேற்ப்பு விழாவிற்கு வந்த கூட்டம் தான்.






மைதானத்துக்கு போனா, ஒரே ஆச்சர்யம்....

ஒரு கொடி  இல்லை, தோரணம் இல்லை, வண்ண வண்ண விளக்குகள் இல்லை. எங்கே பார்த்தாலும் மனிதத்தலைகள். பிரியாணி இல்லை, சரக்கு இல்லை, அட 100 ரூபாய் குடுக்க கூட ஆள் இல்லை.

                               

                                 

                                  

எல்லா கூட்டமும் கை காசு போட்டு வந்தது, 12 மணிக்கு பதவி பிரமாணம்னு சொன்னாங்க, 11.45 ஆகிடுச்சி இன்னமும் யாரையும் காணோமேனு பார்த்தா, சரியாக 11:50க்கு எல்லாரும் வந்தாங்க, அர்விந்த் கேஜ்ரிவால், அவர் கூட 6 பேர் அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர், அப்புறம் ஒரு அறிவிப்பாளர், இவ்வளவுதான் மேடை ஏறினவங்க..

10 நிமிசத்துல பதவியேற்பு  நிகழ்ச்சி நடந்து முடிந்தது. அப்புறம் கேஜ்ரிவால் கொஞ்ச நேரம் பேசினார்.

1. இந்த போராட்டம், டெல்லி மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதற்கே.

2. இன்று ஆம் ஆத்மி சட்ட மன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி எடுக்கவில்லை, இது அனைத்து டெல்லி குடிமகனும் உறுதிமொழி எடுத்தாகும்.

3. இந்த முறை, டெல்லி மக்கள் நேர்மையாலும் தேர்தலில் வெற்றி பெற முடியும் என் நிருபித்து உள்ளார்கள்.

4. இந்த போராட்டத்தின் வெற்றிக்கு இறைவனுக்கு நன்றி செலுத்துகிறோம்.

5. அனைத்து பிரச்சனைகளுக்கும், எங்களிடம் மந்திரம் இல்லை தீர்வு சொல்வதற்க்கு, ஆனால் எங்களிடம், நாம் அனைவரும் சேர்ந்து அதை தீர்க்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கை உள்ளது.

6. ஒரு சில மக்கள் மட்டுமே எதையும் சாதித்து விட முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையுடன் போராடவேண்டும்.

7. எனது அமைச்சர்களையும் உழியர்களையும், அதிகாரபெருமை கொள்ள வேண்டாம் என அறிவுருத்துள்ளேன்.

8. நாங்கள் அராஜக அரசியலை ஒழிக்க, கட்சி ஆரம்பித்துள்ளோம். நாங்களும் அதே போல் ஆகிவிடமாட்டோம் என நம்புகிறேன்.

9. இந்த போராட்டம் நீண்ட நாள் தொடரும், மக்களின் ஆதரவு என்றைக்கும் வேண்டும்.

10. நங்கள் நம்பிக்கை வாக்கஎடுப்பை பற்றி கவலைபடவில்லை.

11. அரசு அலுவலகங்களில், யாராவது லஞ்சம் கேட்டால், எங்களிடம் சொல்லுங்கள். நாங்கள் கையும் களவுமாய் பிடிக்கிறோம்.     

 அர்விந்த் கேஜ்ரிவால், காலம், காலமாய் எல்லாரயும் நம்பி ஏமாந்துகிட்டு இருக்கோம், உங்களையும், இன்னொருத்தரையும் தான் இப்போ நம்புறோம், எதாவது பண்ணுங்க ப்ளீஸ்....

                                                                               - மகேஷ் பிரபு விஜயராஜ்   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக