ஞாயிறு, 12 ஜனவரி, 2014

அக்கரைச் சீமை அழகினிலே - 2

ஆபீஸ் உள்ளே போய், ரிசப்சன்ல இருந்த அக்கா ?, கிட்ட போய் என்னோட பாஸ்போர்ட் மற்றும் ஐ.டி. கார்ட கொடுத்துட்டு, என்னோட காலிக் (Counter Part, Italy office Employee) பேர சொல்லி அவர பாக்கணும்னு சொன்னேன். அவங்க கம்ப்யூட்டர்ல தட்டிட்டு, அப்படின்னு யாரும் இல்லைன்னு சொன்னாங்க.

நான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன். ஏன்னா அவர்தான் எனக்கு இன்னும் ஒரு மாசத்துக்கு பாஸ். எங்க உக்காரணும்ங்கிறதுல இருந்து ஆரம்பிச்சி, என்ன வேலைங்கிற வரைக்கும் அவர்தான் எனக்கு சொல்லணும். அவர கண்டுபிடிகலைன்னா ராடுதான் எனக்கு. நல்லா தேடி பாருங்கன்னு சொன்னேன். அவங்க நல்ல தேடி பார்த்துட்டேன் இல்லைனு சொன்னாங்க.

அந்த நேரத்தில நெறைய பேர் ரிசப்சனுக்கு வந்தாங்க. நம்ம அக்கா, நீ கொஞ்சம் வெயிட் பண்ணு ராசானு சொல்லி அவங்க பக்கம் திரும்பிட்டாங்க.

நான் பேன்னு ஓரமா நின்னுகிட்டு இருந்தேன். ஒரு அரை மணி நேரம் கழிச்சி, இங்க வா கண்ணு உங்க ஆள தேடுவோம்னு சொன்னாங்க. என்கிட்டே அவர் பேர  வேற வேற மாடுலேஷன்ல சொல்ல சொன்னாங்க. 

ரெம்ப போராட்டத்துக்கு அப்புறமா கடைசியா அவர கண்டுபிடிச்சிட்டாங்க. அவருக்கு இண்டர்காம்ல போன் பண்ணி உங்க ஆள் ஒருத்தன் ரிசப்சன்ல இருக்கான், தயவு செய்து வந்து கூட்டிட்டு போங்கனு சொன்னாங்க. ஏன்ன நான் குடுத்த கொடச்சல் அப்படி. என்கிட்டே உங்க ஆள் வர்றார் வெயிட் பண்ணுனு சொன்னாங்க. 

இந்த குழப்பத்திற்கு காரணம் என்னன்னா அவர் பேர நான் sparsiனு சொன்னேன், sbarsiனு சொல்லனுமாம். என்னடா இது செந்தமிழுக்கு, தமிழனுக்கும் வந்த சோதனைனு நினைச்சிகிட்டேன்...

கொஞ்ச நேரம் கழிச்சி ரிசப்சனுக்கு ஒரு போன் எங்க ஆள்தான். அவர் ரிசப்சனுக்கு வந்து பார்த்தாரம் என்னைய காணமாம்..

விசாரிச்சப்ப தான் தெரிஞ்சது, நான் நின்னுகிட்டு இருந்தது ஒரு ஆபீஸ், நான் போக வேண்டியது இன்னொரு ஆபீஸ்னு. அந்த ஊர்லே எங்களுக்கு மூணு எடத்தில ஆபீஸ் இருக்குதாம். 

ஆரம்பமே இப்படி சுத்தல் விடுதே, இன்னும் என்னென்ன நடக்க போகுதோன்னு ஒரே திகில்ல நின்னேன். 

அந்த அக்காகிட்ட அட்ரச தெளிவா? எழுதி வாங்கிட்டு, டாக்ஸி பிடிச்சி அந்த ஆபீஸ் போனேன். 

எங்க தலைய பார்த்து அட்டெண்ஸ் போட்டுட்டு போய் எடத்தில உக்காந்தேன். 
வேலைய ஆரம்பிச்சாச்சு.....

மத்தியானம் சாப்பிட கூப்பிட்டு போனாங்க. அங்க பபே சிஸ்டம். உனக்கு அது வேண்டாம், இத சாப்பிடாதனு சொன்னாங்க,

ஏன் பாஸ்னு கேட்டேன், இது பீப், அது போர்க் அப்படினாங்க. நீங்க இண்டியன்ஸ் சாப்பிட மாட்டீங்க, அதான் சொன்னேன்னாரு. 

நான் பறக்கிரதுல விமானம், மிதக்குறதுல கப்பல், ரோட்ல ஓடுறதுல பஸ் தவிர எல்லாத்தியும் சாப்பிடுவேன் நம்ம சினிமா டயலாக் விட்டேன். அதுக்கு சேர்த்து ஒரு நாள் அனுபவிச்சேன். ஓடோட நத்தை, குட்டி அக்டோபஸ் எல்லாம் போட்டாங்க. அண்ணைக்கு எனக்கு கண்ணையும், வயித்தையும் சேர்த்தே காட்டுச்சி.... 

என்னோட மத்தியான சாப்பாடு இது தான்...


என்னோட இன்னொரு நண்பர் பிரவீன் அங்க இருந்தார். சாயங்காலம் கிளம்பி, என்னோட லக்கேஜ் எடுத்திக்கிட்டு, The One ஹோட்டலுக்கு போனோம், அங்கே தான் ஒரு மாசம் ஜாகை, அந்த ஹோட்டல்ல அட்டாச்டு கிச்சன் இருந்தது. அப்புறம் என்ன நானும் பிரவீனும் சேர்ந்து ஒரே சமையல் மழை தான்....   





நான் தங்கி இருந்த ஹோட்டல் இது தான்.

                                


இந்த போட்டோவ என்னோட சொந்தங்களுக்கு அனுப்பினேன். என்னோட மாமா பையன் ராஜேஷ், என்ன மாமா ஊர் இது, ரோட்ல ஒரு எருமை மாடு கூட இல்லை. ஹோட்டல் நடு ரோட்ல இருக்கு, அந்த ஊர் அரசியல்வாதி கட்டினதான்ணு கேட்டு கலாய்ச்சிகிட்டுஇருந்தான்.


அனுபவங்கள் தொடரும்..........

                                                                             - மகேஷ் பிரபு விஜயராஜ்               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக