திங்கள், 10 பிப்ரவரி, 2014

பாதுகாப்பு பொருட்காட்சி

பிப் 6 - 9 தேதிகளில் டெல்லி ப்ரகதி மைதானில் (Pragati Maidhan) பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பாக பொருட்காட்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது.

நாமதான் சனி-ஞாயிறு பயங்கர பிஸியாச்சே , சாப்பிடறது, மடிகணினில படம் பாக்கிறது, தூங்கிரதுனு ஏகப்பட்ட வேலை.. 

பாதுகாப்பு அமைச்சர் A.K. அந்தோணி, நீங்க கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டாரு, போகலேன்னா அவரு வருத்தப்படுவாரு, டெலிக்கட் பொசிசன், சரின்னு ஞாயிற்றுகிழமை அங்க போனேன்.

(நம்மள மாதிரி பொது ஜனத்துக்கு ஞாயிற்றுகிழமை தான் அனுமதி வழங்கி இருந்தாங்க).

எங்க பார்த்தாலும் வத-வதனு கூட்டம். வழக்கம் போல போலீஸ் செக்கிங்கிற பேர்ல லைன்ல நிப்பாட்டி தடவினாங்க, எங்க போனாலும் இவிங்க தடவி தடவி உடம்புல கூச்சமே போச்சு. (இவங்களோட கடமை உணர்ச்சிக்கு ஒரு ராயல் சலுட்). 

இந்த பொருட்காட்சி ஒரு சர்வதேச சந்தை, நிறைய ஊர்களில் இருந்து, ஆயுதம் மற்றும் பாதுகாப்பு  சாதனங்கள் தொடர்பான கம்பனிகள் கடை விரித்திருந்தது.


பஞ்சு முட்டாயி தொங்க விட்டிருக்க மாதிரி தொங்க விட்டிருக்கீங்களே பாஸ். 




இது என்ன பாஸ், மைக்ரோவேவ் ஓவன் மாதிரி இருக்குது வாயா விட்டுடேன்.
கொலவெறில அங்க இருந்தவர் முறைச்சார், விடு ஜூட்னு எஸ்கேப்.
நான் கேட்டது தப்பான்னு, நீங்களே சொல்லுங்க. 



அப்புறம் நம்ம இந்திய தாயரிப்புகள் (DRDO), 

அர்ஜூன் 
   

சூப்பர் ஷ்டார் பிரமோஸ்:


ருஷ்டம் (Rustam) - II 





படத்தில் பார்த்ததை நேரில் பார்த்தது ஒரு நல்ல அனுபவம் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக