செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

உலக வரைபடம் உல்டாவா ???

                                 இந்தியாவின் பரப்பளவு - 3,287,590 சது கி.மீ. 

                                 கிரீன்லேன்ட்ன் பரப்பளவு - 2,166,086 சது கி.மீ.

                                 ரஷ்யாவின் பரப்பளவு - 17,098,246 சது கி.மீ.

                                ஆப்ரிக்காவின் பரப்பளவு - 30,221,522 சது கி.மீ.

                                      கனடாவின் பரப்பளவு - 9,984,670 சது கி.மீ.

                                அமெரிக்காவின்  பரப்பளவு - 9,826,677 சது கி.மீ.




      இந்த உலக வரைபடத்தை பார்த்தால், இந்தியா, கிரீன்லேன்ட்டை விட ரெம்ப சின்னதாக தெரியுது, கால்வாசிகூட இல்லை. ரஷ்யா, ஆப்ரிக்கா விட பெரியதாக தெரியுது. கனடா, அமெரிக்கா விட பெரியதாக தெரியுது. பரப்பளவவில், இந்தியா உலக நாடுகளில் 7வது பெரிய நாடு. வரைபடத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லை. இதே போல் ஏகப்பட்ட குழப்பம். இதற்க்கு காரணம் என்ன ???

1453ல் ஒட்டோமான் துருக்கியர்கள், கான்ஸ்டண்ட்யிநோபில் கைப்பற்றிய பிறகு, இந்தியா-ஐரோப்பாவிற்கான தரைவழி போக்குவரத்து தடைப்பெற்றது. மாற்று வழி கண்டுபிடிக்க முனைந்த போது, தரைவழியை விட கடல்வழி சிறந்தது என்ற முடிவிற்கு வந்தனர்.  

கடல்வழியில் சந்தேகம் வந்தால், வண்டிய சடன் பிரேக் போட்டு, அண்ணாச்சி முத்தையாபுரத்திற்கு எப்படி போறதுன்னு யார்கிட்டயும் கேக்க முடியாதுல்ல, என்ன பண்றதுன்னு யோசிச்சப்ப தான் வரைபடமும், திசைகாட்டி கருவியும் இருந்தாதான் வேலைக்கு ஆகும்னு முடிவுக்கு வந்தாங்க.


ஜெரர்டுஸ் மெற்காடோர் (Gerardus Mercator) 1569 ஆம் ஆண்டு உலக வரைபடத்தை உருவாக்கினார்.

உருண்டையாக (Sphere) உள்ள உலகத்தை, தட்டையான (Flat) தாளில் வடிவமைக்க வேண்டும். முதலில் மொத்த  உருண்டையிலும் குறுக்கும் (Horizontal), நெடுக்குமாக (vertical) நேர் கோடுகள் போடப்பட்டன. உருண்டை-3D யில் உள்ள ஒரு நேர் கோடு தட்டையாக-2D யில் மாற்றும்பொழுது வளைந்த கோடா மாறியிருக்கும். 


குறுக்கு - நெடுக்கு கோடுகளை வைத்து, சின்ன சின்ன கட்டங்களாக பிரித்தனர். பூமத்தியரேகைக்கு அருகில் பெரிய கட்டங்களாகவும், துருவமுனைக்கு செல்லச் செல்ல சின்ன கட்டங்களானது.   




உருண்டை-3D யில் உள்ள நேர் கோடு தட்டையிலும் நேர் கோடா இருக்க, மெற்காடோர் எல்லா கட்டங்களையும் ஒரே அளவாக வைத்துக்கொண்டார்.

இதன் மூலம் திசை சரியாக கணிக்கப்பட்டது, ஆனால் தேசத்தின் அளவுகள் பலி கொடுக்கப்பட்டன. பூமத்தியரேகைக்கு அருகே உள்ள நாடுகள் வரைபடத்தில் சிறியதாகவும், பூமத்தியரேகையிலிருந்து செல்லச் செல்ல நாடுகள் பெரியதாக தெரிகின்றது.

அன்றைய முக்கிய தேவை திசை என்பதால், அந்த வரைபடம் அங்கீகரிக்கப்பட்டது. இன்றுமா இதை தொடரவேண்டும் ???


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக