புதன், 12 பிப்ரவரி, 2014

அக்கரைச் சீமை அழகினிலே - 3

திங்கள் - வெள்ளிகிழமை ஆபீஸ் போகணும், சனி, ஞாயிறு லீவ் தான். எல்லா லீவ் நாளும் ஊர் சுத்தணும்னு பெருசா பிளான் போட்டேன்.

மொத வாரமே மழை வந்து பல்பு குடுத்திருச்சி. ஊருக்குள்ளே தான் சுத்தினோம்.

மொத நாள் ஹோட்டல சுத்தி திரிஞ்சோம்.





அடுத்த நாள் மிலன்ல ஒரு பெரிய டுஒமொ (சர்ச்) போனோம். இது 5 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது உலகின் 5வது பெரிய சர்ச். இங்கு  ஒரே நேரத்துல 40,000 பேர் வரை பிராத்தனை செய்ய முடியும்.



அடுத்த வாரம் சனி-ஞாயிறு கூட இன்னும் 2 நாள் லீவ் கிடைச்சது. St. Moritz போலாம்னு முடிவு பண்ணினோம். இந்த ஊர் மிலன்ல இருந்து சுமார் 250 கி. மீ தூரத்தில ஆல்ப்ஸ் மலை தொடர்ல இருக்குது. இது சுவிட்சர்லாந்த் நாட்டை சேர்ந்த ஒரு பகுதி.  

ரயில்ல போனா வேலைக்கு ஆகாது, அங்கே போய் கார் பிடிக்கணும். அதுக்கு இங்கே இருந்து கார்ல போலாம்னு முடிவு பண்ணினோம். 450 Euro வாடகையா கேட்டாங்க. அது volkswagan Van, அதுல 8 பேர் வரைக்கும் போகலாம். நாங்க 4 பேர் இருந்தோம், இன்னும் ஆள் கிடைச்சா கொஞ்சம் சல்லிசா போகலாமேனு ஆள் திரட்டினோம், வளைச்சி வளைச்சி தேடினோம். கடைசியா எங்க ஆபீஸ்க்கு நைஜீரியால இருந்து வந்த ஒரு ஜோடி புறா எங்களுக்கு சிக்கினாங்க.

காலைல 6 மணிக்கு St. Moritz கிளம்பினோம். போற வழில இத்தாலி நாட்டின் எல்லை நகரமான Tiranoல ஒரு சர்ச் பார்த்திட்டு கிளம்பினோம்.


அடுத்தது சுவிட்சர்லாந்த் எல்லையில், சோதனை சாவடில வண்டி நின்னது. ஒரு ஆபீசர், கார்கிட்ட வந்து பாஸ்போர்ட் காமிங்கனு சொன்னாரு, எங்க போறீங்கனு கேட்டாரு. பாஸ்போர்ட்டையம், இத்தாலியன் விசாவையும் வெறிக்க வெறிக்க பார்த்துட்டு நல்லபடியா போயிட்டு வாங்கனாரு. அவர் விசாரிக்கிரப்போ நாங்க காருக்குள்ளே தான் உக்காந்து இருந்தோம். ஏனோ எனக்கு சம்பந்தம் இல்லாமல் நம்ம ஊரு டிராபிக் சிக்னல் நியாபகத்துக்கு வந்தது.

அடுத்ததா போற வழில ஒரு பெரிய ஏரி பார்த்தோம். 

  
 அடுத்தது மலைபயணம் ஆரம்பிச்சிருச்சி...

போற வழியெல்லாம் கண்ணு குளிர்ச்சியாக இருந்தது. தூரத்து பனி கண்ணுக்கு குளிர்ச்சினு, பழமொழிய மாத்திகிட்டேன்.


பனியில் நனைந்த மலையை சூரியன் துவட்டியது  இருந்தது...


எங்கோ படித்தது, 

பனி பிரதேசங்களில் உள்ள மரங்களின் உச்சி கூர்மையாக இருப்பதற்கு காரணம், அதன் மேல் மூடி இருக்கும் பனியை துளைத்து சூர்ய ஒளி கிரகிப்பதற்கு தான். எப்படி தான் இப்படி யோசிக்கிராங்களோ, கிரேட்தாங்க.      



கங்கைகொண்ட சோழனுக்கு துணையாக, ஆல்ப்ஸ் மலையில்,  தமிழ் கொடி கையில் இல்லாததால், அருகில் கிடந்த ஒரு சிறு செடி கொடியை  நட்டி தமிழ் வளர்த்தேன், வெறி ஆகாதீங்க.....


                                                                                             அனுபவங்கள் தொடரும் 

                                                                                           - மகேஷ் பிரபு விஜயராஜ்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக