வெள்ளி, 15 ஜூன், 2018

தலையின் மேல் விதி 5 - அத்தியாயம் : 1



2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 24ந் தேதி டொராண்டோ கனடா நாட்டிலிருந்து லிஸ்பனிற்கு (Lisbon), போர்ச்சுகல் (Portugal) நாட்டிற்கு 293 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் ஏர் ட்ரான்சாட் (Air Transat) 236 பறந்து கொண்டு இருந்தது.


இந்த விமானத்தின் பெயருக்கும் பயண பாதைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அது என்னவென்றால், இந்த விமானம் தன் பயண பாதையில் கனடாவிற்கும் போர்ச்சுகலுக்கும் இடையே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலை கடக்கின்றது.





விமானம் அட்லாண்டிக் கடல் மேல் பறந்து கொண்டு இருந்தது,
மேலே நீல வானம், கீழே கருநீல கடல்,


லிஸ்பனில் இருந்து சுமார் 1136 மைல் (1667 km) தூரத்தில் விமானத்தின் ஒரு என்ஜின் செயல் இழந்தது, சிறிது நேரத்தில் லிஸ்பனிற்கு சுமார் 966 மைல் (1570 km) தூரம் இருக்கும் பொழுது இரண்டாவது என்ஜினும்  செயல் இழந்தது,

நடுவானில் விமானத்தின் என்ஜின் செயல் இழந்தது, 306 உயிரின் நிலை என்ன, வாருங்கள் பாப்போம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக