வெள்ளி, 15 ஜூன், 2018
தலையின் மேல் விதி 5 - அத்தியாயம் : 1
2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ந் தேதி டொராண்டோ கனடா நாட்டிலிருந்து லிஸ்பனிற்கு (Lisbon), போர்ச்சுகல் (Portugal) நாட்டிற்கு 293 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் ஏர் ட்ரான்சாட் (Air Transat) 236 பறந்து கொண்டு இருந்தது.
இந்த விமானத்தின் பெயருக்கும் பயண பாதைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அது என்னவென்றால், இந்த விமானம் தன் பயண பாதையில் கனடாவிற்கும் போர்ச்சுகலுக்கும் இடையே உள்ள அட்லாண்டிக் பெருங்கடலை கடக்கின்றது.
விமானம் அட்லாண்டிக் கடல் மேல் பறந்து கொண்டு இருந்தது,
மேலே நீல வானம், கீழே கருநீல கடல்,
லிஸ்பனில் இருந்து சுமார் 1136 மைல் (1667 km) தூரத்தில் விமானத்தின் ஒரு என்ஜின் செயல் இழந்தது, சிறிது நேரத்தில் லிஸ்பனிற்கு சுமார் 966 மைல் (1570 km) தூரம் இருக்கும் பொழுது இரண்டாவது என்ஜினும் செயல் இழந்தது,
நடுவானில் விமானத்தின் என்ஜின் செயல் இழந்தது, 306 உயிரின் நிலை என்ன, வாருங்கள் பாப்போம்.
வெள்ளி, 25 மார்ச், 2016
நீ இல்லை நான் தான் !!!
நானும் எனது மூன்று வயது மகன் அஸ்வத்தும் விளையாட்டாக படுக்கையறையில் பேசிக்கொண்டு (சண்டை) போட்டு கொண்டு இருந்தோம்.
விளையாட்டாக அவனிடம், "அப்பா கோபமாக இருக்கிறேன்" என்று சொல்லி திரும்பி படுத்துக்கொண்டேன்.
எனது மகன் "அப்பா !!! அப்பா !!!" என்றான்.
சமாதானபடுத்ததான் அழைக்கிறான் என நினைத்து கெத்தாக "என்னடா" என்றேன்.
அதற்கு அவன், "அப்பா நீ கோபமாக இல்லை, நான்தான் கோபமாக இருக்கிறேன்", என்றான்.
நான் என்ன சொல்ல, ஏது சொல்ல,
இவிங்கள்ட்ட வாய குடுத்து மீள முடியலையே .............
வியாழன், 12 பிப்ரவரி, 2015
கன்னா பின்னா தத்துவங்கள்
தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..
வாக்கிங் போறது எளிதானது தான்...
வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..
உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..
கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட,
யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..
மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..
ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..
இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட
ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.
பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ...
# டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம்
இப்பெல்லாம் ஏ.டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம
ATM - Anju Time Mattum (அஞ்சு டைம் மட்டும்)
குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..
பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?
என்னம்மா இப்படி பண்றிங்களேமா
தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1 & கேமரா 4
டிஸ்கி : நண்பர் ஒருவர் அனுப்பிய வாட்ஸ்அப்பில் வந்த தகவல்.......
புதன், 11 பிப்ரவரி, 2015
பயணங்கள் பலவிதம் - 3
இதுக்கு முன்னாடி
இதுக்கு முன்னாடி
அந்த அதிர்ச்சியான சம்பவம் என்னா.......
நம்மள வளரும் நாடுன்னு சொல்றாங்க, விமானம் மற்றும் ரயில் டிக்கட்ட மொபைல்ல காட்டுனாலே போதும், ஐரோப்பா நாடுகளை வளர்ந்த நாடுகள்ன்னு சொல்றாங்க அங்க டிக்கெட் ஆன்லைன்ல எடுத்தா, பயணத்துக்கு முன்னாடி ரயில்வே ஸ்டேஷன்ல போய் பிரிண்ட் அவுட் எடுத்து வச்சிருக்கணுமாம்.
சாயங்காலம் தானே பயணம், பயணத்துக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கே, ஸ்டேஷனுக்கு போய் அழகா போய் பிரிண்ட் அவுட் எடுத்துக்கலாமே இப்போ என்ன பிரச்சனை, அது தானே உங்க கேள்வி.
நாங்க டிக்கட் எடுத்தது இத்தாலியன் ரயில் வலைத்தளத்தில், அந்த டிக்கட்டை இத்தாலி நாட்டுக்குள் வைத்து தான் பிரிண்ட் எடுக்க முடியுமாம். நாங்கள் இருப்பதோ வியன்னாவில், அந்த நாட்டு வலைத்தளத்தில் எடுத்த டிக்கட்டை மட்டும்தான் பிரிண்ட் எடுக்க முடியுமாம். ஒரே ரயில் இரண்டு நாடுகளுக்குள் ஓடுகிறது, ஆனால் ஒருவருக்கு ஒருவர் நல்ல புரிந்துணர்வு இல்லை.
நாங்கள் ஆன்லைனில் டிக்கட் எடுத்த போது வந்த மின்னஞ்சலை வைத்து தகவல் மையத்தில் விசாரித்து பார்த்தோம். இந்த மின்னஞ்சலை குப்பையில் போடுங்கள், இது செல்லாது, இதை வைத்து பயணித்தால் டிக்கட் தொகையுடன், மூன்று மடங்கு அபராதம் கட்ட வேண்டி இருக்கும் என்றார்கள்.
டிக்கட்டின் அப்போதைய விலை 100 இரோ (8000 ரூபாய்), அபராதத்துடன் 32000 ரூபாய் வரும். எங்களுக்கு ஒரே டரியலாகி போய் விட்டது. ரெம்ப நேரம் ரயில்வே நிலையத்திலிருந்து உக்காந்து உக்காந்து யோசித்து பார்த்தோம். நானும் இன்னொருவரும், நாங்கள் ஏற்கனவே எடுத்து வைத்த டிக்கடிலே பயணம் செய்து பார்போம். டிக்கட் பரிசோதகரை கிழக்கே பார்த்து நிற்க வைத்து காலில் விழுந்தாவது சமாளிப்போம் என தோன்றியது. மீதி இருவர் ரிஸ்க் எடுக்க வேண்டாம் 8000 ரூபாயை பார்த்தால், 32000 ரூபாய் போய்விடும் என்றார்கள்.
ரெம்ப நேரம் பேசி பேசியும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
இறுதியில், ரயில் கிளம்பும் முன் டிக்கட் பரிசோதகரிடம் கேட்டு பார்க்கலாம். அவர் முடியாது என்றால், 100 ஈரோவிற்கு டிக்கட் எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்தோம்..........
பிறகு வியன்னா நகரை சுத்தி பார்த்தோம்.
அதன் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு........
அன்று மாலை என்ன நடந்தது, அடுத்த பதிவில் பாருங்கள்.....
டிஸ்கி : கொஞ்சம் நீளமாகிவிட்டது அடுத்த பதிவோடு முடித்து கொள்கிறேன்.......

வியன்னா நகரில் ஒரு சர்ச்
ஆஸ்திரியா பாராளுமன்றம்
அரண்மனை
கயிறு வைத்து ஒரு நீர்குமிழி உருவாக்கிக்கொண்டிருந்தார்
மாற்றொரு அரண்மனை
அன்று மாலை என்ன நடந்தது, அடுத்த பதிவில் பாருங்கள்.....
டிஸ்கி : கொஞ்சம் நீளமாகிவிட்டது அடுத்த பதிவோடு முடித்து கொள்கிறேன்.......
வியாழன், 13 நவம்பர், 2014
பயணங்கள் பலவிதம் - 2
பயணத்தோட ஆரம்பத்தையும் தெரிஞ்சிக்க இங்கே ஒரு தட்டு தட்டுங்க ....
புடாபெஸ்ட் என்பது புடா மற்றும் பெஸ்ட் என்னும் இரு நகரங்கள் சேர்ந்ததாகும். இந்த இரு நகரங்களுக்கு இடையே தானுபே (Danube) என்னும் நதி ஓடுகிறது.
Chain Bridge, புடாபெஸ்ட்ல் பார்க்க வேண்டிய முக்கியமான இடம், இந்த பாலம் 1820 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதற்க்கு முன்பு வரை மரக்கட்டைகளால் ஆன பாலம் இருந்தது, இதை ஒவ்வொரு குளிர் காலத்திலும் அப்புறபடுத்தி விடுவார்கள். (குளிரியில் மரக்கட்டைகள் உடைந்துவிடும் என்பதால்), இதை Pontoon Bridge என்பார்கள்
(ரெம்ப அறிவாளின்னு நினைக்கதீங்க, கூகிளாண்டவர் சொல்லித்தான் எனக்கு தெரியும், நினைக்க மாட்டீங்கள்ள ??? ).
பட உதவி : நம்ம கூகிளாண்டவர் தான்
Count István Széchenyi என்று, ஒரு ஹங்கேரியன் புரட்சியாளர் இருந்தார், அவர் தந்தை ஆற்றின் மறுகரையில் இறந்து போனார். குளிர் காலம் என்பதால் இவரால் ஆற்றை கடக்க முடியவில்லை. அப்பொழுது தான் ஒரு நிரந்தர பாலத்தை உருவாக்க முடிவு செய்தார்.
பாலத்தின் இருகரையிலும், இரண்டு சிங்க சிலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சிங்கங்களுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது.
இதை Marschalko Janos என்பவர் வடிவமைத்தார். அவர் சிங்கங்களுக்கு நாக்கை செதுக்க மறந்து விட்டார், இதை பாலத்தின் திறப்பு விழாவின் சமயத்தில் ஒரு சிறுவன் கவனித்து சொன்னான். மனம் வெறுத்து போய் தானுபே ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
இது தான் அந்த சிங்கம்
புடாபெஸ்ட்ல் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.
Chain Bridge
புடாபெஸ்ட் கோட்டை
சர்ச்சும், பாராளுமன்றமும் ஒரே உயரம் வருமாறு கட்டி இருக்கிறார்கள்.
கடவுளும், அரசாங்கமும் ஒன்று என்ற நம்பிக்கையை காட்டவாம்.
என்னோட வலது பின்பக்கம் இருக்கிறது பாராளுமன்றம், இடது பின்பக்கம் சர்ச்.
பாராளுமன்றம்
Limousine Car, ஒரே இடத்துல 2 கார் நிக்கிறத பார்த்து ரெம்ப பீலிங்க்ஸ் போங்க
இறங்கின பத்தாவது நிமிஷம் ஒரு அதிர்ச்சியான விசயத்த கேள்வி பட்டோம்.
அது என்னவா இருக்கும் ?????????????
அடுத்த பதிவுல பாருங்க.........
நன்றிகளுடன்
மகேஷ் பிரபு விஜயராஜ்
லேபிள்கள்:
budapest travel,
chain bridge,
hungary
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)