comedy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
comedy லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 பிப்ரவரி, 2015

கன்னா பின்னா தத்துவங்கள்


தோசை கல்லு உள்ளே இருந்தால் உயர்தர ஹோட்டல்..
வெளியே இருந்தால் சாதா ஹோட்டல்..

வாக்கிங் போறது எளிதானது தான்...
வாக்கிங் போக எந்திரிக்கிறது தான் கஸ்டமானது..

உலகத்துலயே ஸ்பீட் பிரேக் ஓரத்துல ஒரு பாதையை உருவாக்கி அதுல
வண்டி ஓட்டுற டெக்னிக் நம்மள தவிர யாருக்கும் வராது..

கீழே விழுந்ததும் அடிபடவில்லை என்பதை விட,
யாரும் பார்க்கவில்லை என்பதே நிம்மதி..

மதம் மாறினால் தான் கடவுள் ஆசீர்வதிப்பார் என்றால்
உண்மையில் அவர் கடவுள் இல்லை, கட்சித் தலைவர்..

ப்யூட்டி பார்லர் போன மறுநாளே ஐஸ்வர்யா ராய் போல
ஃபீல் பன்னுவாங்க பெண்கள்..
ஜிம்முக்கு போன அன்னிக்கே அர்னால்டு போல ஃபீல்
பன்னுவாங்க ஆண்கள்..

இந்த ஜெனரேஷன்ல ஆல்கஹாலுக்கு அடிமையானவன விட

ஆன்ட்ராய்டுக்கு அடிமையானவன்தான் ஜாஸ்த்தி.

பால்விலை கூடுனது கூட கவலயா தெரில...டீக்கடைல டீ
விலைய எப்ப கூட்ட போறாங்கேனுதான் திக் திக்குனு இருக்கு ...
#
டெய்லி நாலு டீ குடிப்போர் சங்கம் 

இப்பெல்லாம் .டி.எம்-இல் பணம் எடுத்தவுடன் பணத்தை எண்ணுவதற்கு முன்பு,
இது எத்தனையாவது முறை பணம் எடுக்கிறோம் என்று தான் எண்ணுகிறோம

ATM - Anju Time Mattum (
அஞ்சு டைம் மட்டும்)

குழந்தைங்க நம்மகிட்ட கதை கேட்டதெல்லாம் அந்தக்காலம்..
இப்பல்லாம், 'ஏன் ஹோம்வொர்க்செய்யல?'னு கேட்டா அதுங்களே கதைகதையா சொல்லுதுங்க..


பியூட்டி பார்லர்க்கும் ஃபுல்லா மேக்அப் போட்டு தான்
போகனுமா?


என்னம்மா இப்படி பண்றிங்களேமா

தூய்மை இந்தியாதிட்டம்!! தேவையான பொருட்கள்:
வெளக்கமாறு 1 & கேமரா 4


டிஸ்கி : நண்பர் ஒருவர் அனுப்பிய வாட்ஸ்அப்பில் வந்த தகவல்.......

புதன், 18 டிசம்பர், 2013

இது கூட தெரியாதா அப்பா...

மஹி, how are you, Pre.K.G. செல்லும் தனது மூன்று வயது மகனிடம் கேட்டார் நாதன்.

I am fine, என்றான் மஹி.

How old are you, இது நாதன்.

I am 3 years old, என்றான் மஹி.

மஹி செல்லம், அப்பகிட்ட அதே மாதிரி கேளுமா தங்கம்.

How are you அப்பா.

I m fine, என்றார் நாதன்.

How old are you அப்பா.

I am 33 years old.

அப்பா  தப்பு தப்பா சொல்றீங்க, I am 3 years oldனு சொல்லணும்.

எங்க மிஸ் இப்படிதான் சொல்லி குடுத்தாங்க,  இது கூட உங்களுக்கு தெரியாதா அப்பா...

ஹி..ஹி..ஹி..ஹி.. 

யாழ் இனிது, குழல் இனிது என்பர், மழலை சொல் கேளாதோர்....