சீனியர் வெறி ஆகி, ஒரு நாள் முழுவதும் ஹாஸ்டல் ரும் ஸ்லாபில் உக்கார வைத்து விட்டார்.
பிளாஷ் பேக் : 3
எல்லா காலேஜ் மாதிரி நம்ம பெருமாள் காலேஜ்லையும் ஒரு ஸ்ட்ரிக்ட் வாத்தியார். ஒரு நாள் கேள்வி கேட்டு பசங்கள லேப்ட் ரைட் வாங்கிகிட்டு இருந்தார். நம்ம பெருமாள் டர்ன் வந்தது.
"பெருமாள், கெட்-அப்", வாத்தியார்.
பெருமாள் மிலிடரி கெட்-அப்பில் வணக்கம் வைக்க,
"நான் என்ன மிலிடரிக்கா மென் ஆள் எடுக்கிறேன், ஓகே நவ் அன்சர் மை கொஸ்டீன் ", வாத்தியார்.
"எஸ் சார்", பெருமாள்.
"வாட் இஸ் தி ரா மேடிரியல் பார் பேப்பர்", வாத்தியார்.